வெளிச்சம் பரவட்டும். பகுதி 69 மன்னன் யயாதி

மகாபாரத காலத்தில் யயாதி என்ற மன்னன் இருந்தான். அவன் மிகுந்த வனப்படனும் செழிப்பிடனும் இளமையாகவும் இருந்தார். அவன் முதலில் சுக்ராச்சாரியார் அவருடைய மகள் தேவயானியை திருமணம் செய்தான். பின்பு அவன் சர்மிஷ்டை என்ற பெண்ணை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் மறைத்து வாழ்ந்தான். இந்த உண்மை எப்படியோ வெளியில் தெரிந்து விட்டது .இதை கேள்விப்பட்ட தேவயானி தந்தை சுக்ராச்சாரிடம் சென்று முறையிட விடுவாரா சுக்ராச்சாரியார் மன்னனை பார்த்து அவனை வார்த்தைகளால் கொன்றார். நீ செய்தது அநியாயம் உனக்கு இளமையும் வணப்பும் இப்படி இருப்பதால்தான் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது மனைவி நீ திருமணம் செய்து இருக்கிறாய் ஆகவே உன் திமிர் அடங்க வேண்டும். அதனால் அவனுக்கு ஒரு சாபமிட்டார். எந்த இளமையும் வனப்பும் உனக்கு திமிர் ஏற்படுத்தியதோ அந்த இளமையும் வணப்பும் அழிந்து நீ கீழ பருவம் அடைவாய். இனி உன்னால் வாழ்க்கையில் எந்த சுகங்களையும் அடைய முடியாது என்று சாபம் இட்டார். பிறகு மன்னன் அவர் காலில் விழுந்து தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான் .வேண்டினான்.ஏதாவது செய்து தனக்கு சாப விமோசனம் அளிக்குமாறு தான் இளமையாக இருப்பதாகவும் தான் எந்தவிதமான சுகங்களை அனுபவிக்கவில்லை என்றும் கூறினான் .அதற்கு மனம் இரங்கி சுக்கிராச்சாரியார் எவன் ஒருவன் தனது இளமையும் வனப்பையும் உனக்கு தானமாக அளிக்கிறானோ அப்போது நீ மீண்டும் அவனது இளமையை பெறுவாய் என்று அவருக்கு சாபவிமோசனம்  கொடுத்தார். மன்னன் எல்லோரிடமும் போய் அவருடைய இளமையை வனப்பையும் தனக்கு தானமாக கொடுக்குமாறு கேட்டான். ஆனால் யாரும் தானம் தர முன் வரவில்லை. பிறகு நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்து யார் ஒருவன் தனது இளமையை எனக்கு தத்தகமாக அளிக்கிறார்களோ அவர்களுக்கு எனது நாட்டில் பாதையை நான் கொடுக்க தயார் என்று அறிவிப்பு செய்தான் .அந்த அறிவிப்பு கேட்ட பிறகும் எந்த ஆண்மகனும் முன்வரவில்லை. தனது வெட்கத்தை விட்டு தனக்கு இருந்த நான்கு மகன்களையும் கூப்பிட்டு அவர்களது இளமையை தனக்கு தானமாக கொடுக்குமாறு கேட்டான் .அப்போது அந்த மற்ற மகன்கள் மறுத்து விட்டார்கள் ஆனால் அவருடைய கடைசி மகன் புரு என்பவன் தனது தந்தைக்காக தனது இளமையையும் வணப்பையும் அவருக்கு தானமாக அளித்தான். மன்னன் அதை பெற்ற பிறகு அந்த புரு மன்னன் கிழப்பருவம் அடைந்து விட்டான். புதிய எவனப் பருவம் அடைந்த மன்னன் யயாதி உலக சுகங்களை அத்தனையும் அனுபவித்தான். அனுபவித்தான் தன் மனம் போன போக்கில் அனுபவித்தான் .ஆசை தீர தீர அனுபவித்தான் .ஆனாலும் அவனது ஆசை அடங்கவில்லை. புதிது புதிதாக அவனுக்கு ஆசைகள் தோன்றிக்கொண்டே இருந்தது காமம் நீடித்தது கொண்டே இருந்தது அவன் அனுபவித்தான் .திடீரென்று அவனுக்கு ஒரு நாள் ஒரு ஞானோதயம் வந்தது . இத்தனை நாள் சுகங்களை அனுபவித்தும் தனக்கு திருப்தி ஏற்படவில்லையே என்ன காரணம் என்று யோசித்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது .ஆசை எந்த காலத்திலும் அடங்காது .ஆசை கட்டுப்படுத்த வேண்டும். ஆசை மனதுக்கு கட்டுப்பட்டது .ஆகவே ஆசையை அடக்கி வாழ்ந்தாலே மனிதனுக்கு சிறந்த செயலாகும். எந்த காலத்திலும் இதுபோல் இன்பங்களை துய்ப்பது என்பது முட்டாள்தனம் என்று அவனுக்கு புரிந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் திரும்பவும் தனது மகனைக் கூப்பிட்டு அவனுக்கு தனது இளமையும் அரசையும் கொடுத்து விட்டு மன்னன் துறவறம் மேற்கொண்டு காடு நோக்கி சென்றான் .இதனால்  என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் அந்த காலத்தில் மன்னர்கள் நாட்டை கவனிக்காமல் சுகபோகங்களில் ஈடுபட்டு  தனது வாழ்நாட்களை வீணாக கழித்துக் கொண்டிருந்தார்கள் என்பது நன்றாக புரிகிறது .அவர்களுக்கு ஒரு பாடம் ஏற்படட்டும் என்பதற்காகவே சொல்லப்பட்ட ஒரு நீதி கதையாகும் .ஆனாலும் இந்த கதையை படித்து தெரிந்து கொண்ட மன்னர்கள் பிற்காலத்தில் அவர்களும் இதே வழியைத் தான் பின்பற்றினார்கள் யாரும் திருந்தியவாறு தெரியவில்லை.

Comments

  1. இப்போதுமா? யாருங்க அது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்

வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்