வெளிச்சம் பரவட்டும் பகுதி 70 பீஷ்மர்
மகாபாரத கதையிலே மிகவும் முக்கியமான ஒரு பாத்திரம் என்றால் அது மாவீரன் பீஷ்மர் தான் அஸ்தினாபுரம் மன்னன் சந்தனு மகாராஜாவுக்கும் கங்கைக்கும் மகனாகப் பிறந்த மாவீரன். தனது தந்தையின் ஆசைக்காக தனது ஆசையை துறந்தவர் பீஷ்மர். அதனாலே அவர் பெரியவர்களால் பீஷ்மா என்று அழைக்கப்பட்டவர். கடைசிவரை அஸ்தினாபுரம் ராஜ்யத்திற்கு தன் உயிர் உள்ளவரை சேவை செய்வேன் என்று சபதம் எடுத்தவர். அதன்படியே கடைசி வரையும் வாழ்ந்து காட்டியவர். மாவீரர், போர்க்கலையில் வல்லவர். 27 தலைமுறைகளை சேர்ந்த சத்ரிய அரசர்களை தலை எடுக்க விடமாட்டேன் என்று சபதம் இட்ட அவதார புருஷன் பரசுராமனையே தோற்கடித்தவர். அப்படிப்பட்ட மகாவீரர் காசி மாநகரத்தில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டு அந்த ராஜ்யத்தை மூன்று இளவரசிகளையும் கவர்ந்து வந்து தனது தம்பி விசித்திர வீரியனுக்கு மணமுடித்தவர். ஏனென்றால் அவர் கொண்ட விரதப்படி அவர் மணந்து கொள்ளாமல், தனது ராஜ்யத்தை விட்டுக்கொடுத்து தனது தம்பிக்காக பாதுகாத்தவர் , தது தம்பிக்காக மணம்முடித்துவைத்தவர்.கடைசி வரை தான் கொண்ட சபதத்தை படி அஸ்தினாபுரத்தை காத்து வந்தார். அவருடைய தியாகச் செயலுக்காக அவர்கள் தந்தையால் தான் நினைத்தபோது மட்டுமே மரணம் வரும் என்று வரம் வாங்கி வந்தவர். எத்தனையோ தவறுகள் அஸ்தினாபுரத்தில் நடந்த போதிலும் அஸ்தினாபுரம் ராஜ்யத்தின் பக்கமே நின்றார் . அஸ்தினாபுரத்தை எதிர்த்து போர் நடந்த போதும் அதுவும் தனது பிரியத்துக்கு உகந்த பாண்டவர்கள் போர் தொடுத்த போதும் அஸ்தினாபுரம் பக்கமே நின்று போர் செய்தவர். அப்படிப்பட்ட உத்தமர் பாரத போரில் பத்தாம் நாளில் வீழ்ந்தது எப்படி அவரது உடல் அம்புகளால் சல்லடையாக தொலைக்கப்பட்டது எப்படி? 48 நாட்கள் அந்த அம்பு படுக்கையில் கடந்து அவர் அவதிப்பட வேண்டிய காரணம் என்ன அடுத்த பாகத்தில்
Comments
Post a Comment