வெளிச்சம் பரவட்டும். பகுதி 71 பீஷ்மரும்,சிகண்டியும்
பீஷ்மர் காசியிலிருந்து சிறை எடுத்த மூன்று பெண்களில் முதலாமாவள் அம்பை என்பவள். அவர் பீஷ்மரிடம் நான் சால்வன் என்ற இன்னொரு மன்னனை காதலிக்கிறேன் அதனால் என்னை விட்டுவிடு என்று கேட்டுக் கொள்கிறாள். பீஷ்மரும் அம்பையை விட்டு விடுகிறார். அம்பை நேராக தனது காதலன் சால்வனிடம் சென்று தன்னை மணக்கும்படி வேண்டுகிறாள். பீஷ்மரால் சிறை எடுக்கப்பட்ட உன்னை நான் திருமணம் செய்ய முடியாது .ஆகவே திரும்பி செல் என்று கூறிவிட்டான். அம்பை நேராக பீஷ்மர் இடம் சென்று என் காதலன் என்னை மறுத்து விட்டான் எனக்கு வேறு வழி இல்லை என்னை சிறை எடுத்த நீங்களே மணந்து கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கிறாள் .ஆனால் தான் பிரம்மச்சாரி விரதம் இருப்பதால் உன்னை மணக்க முடியாது என்று கூறி மறுத்து விடுகிறார் .அம்பை அவரிடம் பல தடவை சொல்லி போராடுகிறாள். ஆனால் பீஷ்மர் பிடிவாதமாக இருக்கிறார். அப்போது அம்பை அவரைப் பார்த்து கேட்ட கேள்விகள் அம்பின் கூர்மையை விட வலிமையானவை. ஒரு பெண்ணை சிறை எடுக்கும் போது நீ மணப்பதாக இருந்தால் தான் சிறை எடுக்க வேண்டும் .ஆனால் உனது தம்பிக்காக எங்களை சிறை எடுக்க நீ யார் . அவரவர் தனது மனைவிகளை தேடிக்கொள்ள அவரவர்கள் தான் போராட வேண்டுமே ஒழிய உனது தம்பிக்காக நான் சிறை எடுத்தேன் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை .நீ பிரம்மச்சாரி விரதம் கொண்டிருந்தால் நீ எந்த பெண்ணையும் தொட்டு தூக்கி இருக்கக் கூடாது .அப்படிப்பட்டவர் எதற்காக நீ எங்களை தூக்கி வந்தாய் .ஆகவே நீ பிரம்மச்சரிய விரதம் என்று சொல்வது பொய். இதை நான் நம்ப மாட்டேன் என்று பலவாறாக வே பீஷ்மரை தனது சொல் அம்புகளால் சாடுகிறாள். வெட்கத்தால் தலை குனிகிறார் பீஷ்மர் . எப்போது என்னை மறக்க முடியாது என்று நீ கூறி விட்டாயோ அப்போதே நீ ஒரு பேடி என்று இழிவாக பேசுகிறாள். ஆகவே என்னை மணக்க முடியாது என்று நீ சொல்வதால் நீ என்னை எதிர்த்து போரிடு . நான் உன்னிடம் சண்டை செய்ய போகிறேன் என்று கூறுகிறாள். ஆனால் பீஷ்மா நான் ஒரு பெண்ணை எதிர்த்து போரிட மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். கடைசியாக என்னால் தான் உனக்கு மரணம் என்று சொல்லி சபித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகருகிறாள் அம்பை. உடனே பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனிடம் சென்று இதுபோல் தனக்கு நடந்த அவமானங்களை கூறி பீஷ்மரிடம் போரிட சொல்கிறாள். துருபதன் பீஷ்மரை எதிர்க்க துணிவில்லை ஆகவே மறுத்து விடுகிறான். அதன்பின் அவள் பரசுராமரின் உதவியை நாடுகிறாள் பரசுராமர் சென்ற நியாயம் கேட்க பீஷ்மரிடம் போரிட்டு தோற்றுப் போகிறார். ஆகவே அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அவள் கடவுளை நோக்கி தியானம் செய்கிறாள் அப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து நீ கழுத்தில் அணிந்து கொள் .இந்த மாலை அணிந்தவன் பீஷ்மரை கொள்வான் என்று ஒரு வரம் கொடுத்து விட்டு மறைந்து விடுகிறார். அந்த மாலை எடுத்துக் கொண்டு பாஞ்சாலம் தேசத்திற்கு செல்கிறாள் . அந்த மாலையை அணிந்து கொண்டு நீ போரிடு என்று துருபதனிடம் சொல்கிறாள் .ஆனாலும் அவன் மறுத்து விடுகிறான் .இவளுக்கு வேறு வழி இல்லாமல் மீண்டும் இறைவனை நோக்கி தவம் செய்கிறாள் .இறைவன் தோன்றி இந்த மாலையோடு உன்னால் இந்த ஜென்மத்தில் பீஷ்மரை கொல்ல முடியாது. இனி அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம் என்றும் அத்தோடு அடுத்த ஜென்மத்தில் அவரை கொல்வதற்கு நீ ஒரு காரணியாக இருப்பாய் என்று சொல்லி மறைந்து விடுகிறார். அடுத்த ஜென்மம் வரை நாம் காத்திருப்பதா என்று அம்பை யோசித்து சற்றும் யோசிக்காமல் தீயை வளர்த்து அதில் குதித்து விடுகிறாள். துருபதனுக்கே மகளாகவும் இல்லை மகனாகவும் இல்லை ஒரு அலியாக பிறந்து விடுகிறாள். அலியாக பிறந்ததனால் அந்த மாலையை அணிந்து கொண்டு எப்போதும் பீஷ்மரை ஒழிப்பேன் என்று காத்திருக்கிறாள். மகாபாரத போர் தொடங்கிவிட்டது அந்த நேரத்தில் பீஷ்மர் தனது கணைகளால் பாண்டவர் சேனைகளை துவம்சம் செய்கிறார். பத்தாம் நாள் போர் .அந்தப் போரில் அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் கடுமையான போர் நடக்கிறது. அப்போது பீஷ்மரை வெல்ல முடியாத ஒரு நேரத்தில் திடீரென்று சிகண்டி அர்ஜுனன் தேரில் ஏறி விடுகிறான். பக்கத்தில் நின்று விடுகிறான். அவன் ஒரு அலி என்பது நன்றாக தெரிந்த பீஷ்மர் சற்று தலை குனிந்து விடுகிறார் அவளை பார்த்துவிட்டு .அந்த நேரத்தில் கண்ணனின் யோசனைப்படி அர்ஜுனன் அம்பு மழை பொழிய அம்புகளால் துளைத்தெடுக்கப்படுகிறார் பீஷ்மர். ஊசி குத்த கூட இடமில்லாத அளவுக்கு கணைகளை பொழிந்து அவரை அம்பு படுக்கையில் தள்ளி விடுகிறான் அர்ஜுனன் .இதற்கு காரணம் சிகண்டி என்ற ஒரு அலி. பீஷ்மரின் வீழ்ச்சிக்கு இது மட்டும் காரணம் அல்ல இன்னும் சில காரணங்களும் உண்டு. பார்ப்போம் அடுத்த பகுதியில்.
பதிவு நன்று
ReplyDelete