Posts

Showing posts with the label இந்திய வாரிசுரிமை சட்டம்

இந்திய பெண்கள் சொத்துரிமை6

ஓரளவுக்கு சொத்துரிமை அனுபவித்து வந்த பெண்களுக்கு முழுவதுமாக சொத்தின் மீது அவர்களுக்கு பூரணமகன்களோடு உரிமை வந்துவிடவில்லை. ஒரு இழுபரியான நிலைதான். இந்த காலகட்டத்தில் 1956-ல் இந்து வாரிசுரிமை சட்டம் வந்தது. அதன்படி முதன் முதலாக ஒரு தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் மனைவியோடு சேர்த்து உரிமை கொடுத்தனர் .இது முதன்முதலாக பெண்கள் அடைந்த சுதந்திரம் என்று கூட சொல்லலாம். பழைய சட்டத்தின் படி பழைய ஹிந்து லாவின் படி மகள்களுக்கு கூட்டு குடும்பத்து சொத்தில் எந்த விதமான உரிமையோ பங்கோ கிடையாது .ஆனால் கணவரின் சொத்தில் தனிப்பட்ட சொத்திலும் மனைவிக்கு பங்கு இருந்தது .அந்தப் பங்கு அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு தங்கள் குடும்பத்தை தங்கள் பெண்களை காத்துக் கொள்ள முடிந்தது .1956 இல் வந்த இந்தி வாரிசுரிமை சட்டப்படி பெண்களும் வாரிசுதாரர்கள்ஆனார்கள். அதன்படி கூட்டுக் குடும்பத்து சொத்தில் கை வைக்காமல் ஒரு குடும்பத் தலைவர் தனது சொந்த சொத்துக்களை வைத்திருந்தார் என்றால் அவருக்கு பிறகு அந்த சொத்தில் அவரது மகன்களோடு சேர்த்து அவரது மகள்களுக்கும் அவரது மனைவிக்கும் சம பங்கு அளிக்கப்பட்டது. செக்க்...