இந்திய பெண்கள் சொத்துரிமை 5
1937 இல் பெண்களுக்கு சொத்துரிமையில் ஓரளவு கொடுக்கப்பட்டாலும் அந்த சொத்துரிமையை அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. கூட்டுக் குடும்பத்தில் ஒரு மனைவியின் கணவர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து சொத்துக்களை தனது மனைவிக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கப்பட்டால் அது அவர்களின் தனிப்பட்ட சொத்தாக கணக்கிடப்பட வேண்டும். இதுதான் சட்டத்தின் சாராம்சம் அது போல் செய்வதற்கு கூட்டு குடும்பத்தின் தலைவருக்கு உரிமை உண்டு. அதன் பிறகு அந்த பெண் கூட்டு குடும்பத்தில் ஒருவராகிறார். அதாவது 1937 க்கு பின், இந்நிலையில் அல்லாடி குப்புசாமி என்ற மிகப்பெரிய வழக்கறிஞர் தனது தாயாருக்கு தனது தந்தை மூலம் கிடைத்த பரிசு பொருட்களையும் மற்றும் தனது தாயார் பெயரில் இருந்த வைப்பு தொகைகளையும் குடும்பத்தை சொத்துக்களாகவே பாவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஏனென்றால் தாயாரின் பங்கு தனியாக கணக்கிடப்பட்டு அவர் சொந்த சொத்தாக பாவிக்கப்பட்டு அதற்கு வரி விதிக்கப்பட்டது. இந்த எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று கருதப்பட்ட அல்லாடி குப்புசாமி இந்த ஆக்ட்டின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்ளவில்லை .எஸ்டேட் டியூட்...