Posts

Showing posts with the label மீனவ நண்பன்.

வெளிச்சம் பரவட்டும் 37

இன்று சண்டே ஃப்ரீயா இருக்கலாம் எந்த விதமான வேலையும்கிடையாது .இன்னைக்கு வேலைகளும் பார்க்க வேண்டாமென்று நினைத்தேன். உள்ளே இருந்து ஒரு குரல் அப்பா போய் விரால் மீன் வாங்கிட்டு வாங்க. என் பெண் ஊரிலிருந்து வந்திருக்கு .என்னம்மா என்னைப் போய் மீன் மார்க்கெட்டுக்கு போக சொல்ற இத்தனை வருஷம் கழிச்சு, என்று சொல்கிறேன். இல்லப்பா நீங்க போனா தான் நல்ல விரால் வாங்கிட்டு வருவீங்க போய் வாங்கிட்டு வாங்க. மீன் மார்க்கெட் எல்லாம் போயி ரொம்ப வருஷமாச்சு இப்ப போய் எப்படி அங்க போய் விலையெல்லாம் கேட்கிறது. என்னங்கறது எல்லாம் நமக்கு அவ்வளவா புரியாது .சரி பொண்ணு கேட்டுச்சே, நம்ம போகாம இருந்தா அது வேற தகராறு ஆயிடும் . எனது நண்பர் ஒருத்தருக்கு போன் பண்ணி வர சொல்லி அவரோட போனேன். மீன் மார்க்கெட் நல்லா இருக்கு நல்லா வச்சிருக்காங்க. ஆனா ஜனங்க கூட்டமான கூட்டம் ஆனால் இந்த தடவை போகும்போது நான் எப்போதுமே எங்கேயும் வெளியில் போனா வெள்ளை வேஷ்டி சட்டையோட தான் போவேன் எனது நண்பர் சொன்னாரு, அண்ணே இந்த வெள்ளை வெட்டி எல்லாம் மீன் மார்க்கெட் உதவாது. வீணாக்கி விடுவாங்க அங்க. அதனால வேட்டியை மாத்திக்குங்க அப்படின்னு சொன்ன பிறகு , யோசிதே...