வெளிச்சம் பரவட்டும். கதிர்.40 முதுமை
எனது முதுமை பருவத்தை 2015 முதல் ஆரம்பிக்கிறேன் .முதுமை. முதுமை வந்து விட்டாலே எல்லாமே போய்விட்டதா . வாழ்க்கையும் போய்விட்டதா .சந்தோஷம் விடை பெற்றுக் கொண்டதா. இனி முதியவர்கள் வாழ்வதற்கு ஒன்றுமே இல்லையா. இந்த உலகத்தில் ஏன் முதுமை வந்து விட்டால் மனிதர்கள் இப்படி தவித்துப் போகிறார்கள்.முதுமை வந்துருச்சு வந்துருச்சு அப்படின்னு. எனக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரசியமான அனுபவம் .2015 வரை எனக்கு காலம் எப்படி ஓடி யதுஎன்று தெரியாது. அவ்வளவு இளமையாகவும், மகிழ்ச்சியோடும் தான் சென்றது.ஒரே பெண். திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்.அழகான பேத்தி.இனிமேல் எனக்கென்ன குறைச்சல். எனக்கு முதுமை ஒரு சவாலாக இருக்காது என்று தோன்றியது. ஏனென்றால் அதற்கு தகுந்தார் போல என் வாழ்க்கையை நான் வடிவமைத்துக் கொண்டிருந்தேன் சீரான குடும்பம். பேராசை கிடையாது. ஆதலால் என்னை முதுமை ஒன்றும் செய்யாது என்ற கருதி இருந்தேன். 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் எனக்கு ஏற்கனவே சுகர் பிபி உண்டு எனக்கென்று ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக எதற்கு நான் ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தேன் .அவர் போகும் போதெல்லாம் சொல்லுவார் ட்ரெட்மில் ஒ...