Posts

Showing posts with the label முழுவெற்றியா?

இந்திய பெண்கள் சொத்துரிமை_16

2005 ஆக்டிங் படி பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சொத்துரிமை முழுமையானதா என்று பார்ப்போம். Sec.6 ந்படி பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை அவர்களது முழு உரிமையானது என்றுsec. 6(2)ல் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த சிக்கலும் இல்லை .அடுத்து செக்சன் 6(3)ன்படி ஒரு இந்துவானவர் 09.09. 2005 க்கு பிறகு இறந்து விட்டால் அவர் கையில் உள்ள இந்து குடும்பத்து சொத்துக்கள் அனைத்தும் குடும்பத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமாக பிரிக்கப்பட வேண்டும். ஒருவேளை மகள்கள் இறந்துவிட்டாலும், அவர்களுடைய வாரிசுகளுக்கு இந்த சொத்து போய் சேரும் . ஆகவே இந்த பிரிவிலும் எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லை. அடுத்து செக்சன் 6 (4) ன் படி ஒரு குடும்பத்து சொத்தில் அதில் உள்ள கடன்களுக்கும் மகன் மட்டுமல்லாமல் மகள்களும் அந்த கடனில் பங்கேற்க வேண்டும். இதுவும் நியாயமானது தான். எப்போது ஒருவர் சொத்தை அடைகிறாரோ அதே நேரத்தில் அது உள்ள கடன்களுக்கும் பொறுப்பாவார். ஆக ஒரு வழியாக பெண்களுக்கு 09.09. 2005 முதல் மகனுக்கு இணையாக மகளுக்கும் சொத்துக்கள் கொடுக்கப்பட்டுவிட்டது . தாத்தா சொத்து பேரனுக்கு தான் என்று காலங்காலமாக வந்த சனாதனம் ஒழிக்கப்பட்டு பேத்திகளு...