Posts

Showing posts with the label லட்சுமி என்றொரு நட்சத்திரம்.

வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர் 51

நானும் சினிமா உலகில் 50, 60 வருடங்களாக படங்கள் பார்த்து வருகிறேன் .எத்தனையோ நடிகர் அவர்களின் நடிப்பை கண்டு வியந்து இருக்கிறேன் ரசித்திருக்கிறேன் தியாகராஜ பாகவதர் காலம் முதல் சின்னப்பா எம்ஜிஆர் சிவாஜி சாவித்திரி  கண்ணாம்பா பத்மினி பானுமதி என்று பல நட்சத்திரங்கள் நடித்த படங்களை பார்த்துள்ளேன்.  எல்லோருமே சிறப்பான நடிகர்கள் தான்.பாத்திரங்களை உணர்ந்து நடிப்பவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை கொண்டே அவர்கள் முன்னேறினார்கள். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு பின்னால் வந்த லட்சுமி என்ற ஒரு நடிகை அவரது அம்மா ருக்மினியும் ஒரு நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா அவரும் ஒரு பிரபல ஹீரோயின் .இத்தனை நடிகர்கள் நடிப்பை நான் பார்த்த பிறகும் லட்சுமியின் நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. 19 7 4 லேயே அவர் நடித்த ஜூலி என்ற மலையாளப் படம் படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருது பெற்றவர் லட்சுமி. சாதாரண எல்லாரையும் போல சாதாரண கதாநாயகியாக தான் அவரும் நடித்துக் கொண்டிருந்தார. ஆனால் அவரது அலாதியான நடிப்பு திறனை வெளிப்படுத்துவதை கண்ட சில டைரக்டர்கள் அவரை தகுந்த முறையில் பயன்படுத...