வெளிச்சம் பரவட்டும் 38 கிளைமேக்ஸ் சீன்கள்
19 61 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படம். தங்கை சாவித்திரிக்காகவே தன் ஆயுள் முழுவதும் உழைத்து உழைத்து தனது செல்வம் முழுவதையும் அவரது நல்வாழ்வுக்கே கொடுத்து ஏழையாகி போன அண்ணன் சிவாஜி கடைசியில் கண் தெரியாத நிலையில் ஒரு பிச்சைக்காரனை போல் தன் தங்கையை காண வேண்டும் என்று ஆவலில் வருகிறான். இது படத்தின் கிளைமாக்ஸ் சீன் அப்போது சிவாஜியும் சாவித்திரியும் ஒருவரை ஒருவர் பழைய கதைகளை சொல்லி பேசி அழுது புலம்பும் சீன்.சிறப்பாக இருக்கும். அப்போது தங்கையை காண முடியாமல் சிவாஜி உயிர் துறக்கிறார் ,அந்த அதிர்ச்சி தாளாமல் அவரது தங்கையும் உடன் உயிர் துறக்கிறார். இது அந்தக் காலத்தில் எதிர்பாராத கிளைமாக்ஸ் மக்கள் வெகுவாக அழுது ரசித்தார்கள். இந்த படத்துக்கு பிறகு சாவித்திரியின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது அவர் நடிகையர் திலகமானார். இது இந்த படத்தின் சிறப்பு .அடுத்தது 1962 ல் வெளிவந்த சுமைதாங்கி படம் இதில் ஜெமினி கணேசன் ஹீரோ. தன் குடும்பத்து பொறுப்புகளை எல்லாம் அவரவர் தேவைக்கேற்ப நிறைவேற்றுகிறார். இதனால் தனது காதலையும் இழக்கிறார். முடிவில் என்ன செய்தாலும் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் குறை சொல்ல மனம் வெறுத...