வெளிச்சம் பரவட்டும் 38 கிளைமேக்ஸ் சீன்கள்

19 61 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படம். தங்கை சாவித்திரிக்காகவே தன் ஆயுள் முழுவதும் உழைத்து உழைத்து தனது செல்வம் முழுவதையும் அவரது நல்வாழ்வுக்கே கொடுத்து ஏழையாகி போன அண்ணன் சிவாஜி கடைசியில் கண் தெரியாத நிலையில் ஒரு பிச்சைக்காரனை போல் தன் தங்கையை காண வேண்டும் என்று ஆவலில் வருகிறான். இது படத்தின் கிளைமாக்ஸ் சீன் அப்போது சிவாஜியும் சாவித்திரியும் ஒருவரை ஒருவர் பழைய கதைகளை சொல்லி பேசி அழுது புலம்பும் சீன்.சிறப்பாக இருக்கும். அப்போது தங்கையை காண முடியாமல் சிவாஜி உயிர் துறக்கிறார் ,அந்த அதிர்ச்சி தாளாமல் அவரது தங்கையும் உடன் உயிர்  துறக்கிறார். இது அந்தக் காலத்தில் எதிர்பாராத கிளைமாக்ஸ் மக்கள் வெகுவாக அழுது ரசித்தார்கள். இந்த படத்துக்கு பிறகு சாவித்திரியின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது அவர் நடிகையர் திலகமானார். இது இந்த படத்தின் சிறப்பு .அடுத்தது 1962 ல் வெளிவந்த சுமைதாங்கி படம் இதில் ஜெமினி கணேசன் ஹீரோ. தன் குடும்பத்து பொறுப்புகளை எல்லாம் அவரவர் தேவைக்கேற்ப நிறைவேற்றுகிறார். இதனால் தனது காதலையும் இழக்கிறார். முடிவில் என்ன செய்தாலும் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் குறை சொல்ல மனம் வெறுத்துப் போய் விடுகிறார். அவருக்கு வாழ்க்கை வெறுத்து விடுகிறது .அதனால் எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று எழுதி வைத்துவிட்டு கொடைக்கானல் சென்று விடுகிறார். பரபரப்பான அந்த சீனில் கொடைக்கானலுக்கு அவரது முந்தைய காதலியும் அவர் அண்ணனும் தேடிச் செல்கிறார்கள். அந்த இடத்தில் யாரோ கோக்கர்ஸ் வாக்கில் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் வேகமாக ஓடுகிறார்கள் .ஆனால் அங்கு அங்கு நடந்ததுதான் கிளைமேக்ஸ் அவர் இல்லை திரும்பி வருகிறார்கள். ரோட்டில்மக்கள் வரிசையாக நிறக் படம் முழுவதும் சைலன்ட் ,ஷூக்கள் அணிந்த சப்த மட்டுமே .ஒரு குரூப்பாக பாதிரிகள் நடந்து வருகிறார்கள். அந்த ஓசை மட்டும் கேட்கிறது .அனைவரும் கொடைக்கானலில் பாதிரியார்கள் தங்கும் இல்லத்தில் இருந்து காலையில் அந்த பைபிளை படித்துக் கொண்டு செல்லும் காட்சி. இதற்காக ரோடை பிளாக் பண்ணி வைத்திருக்கிறார்கள் சற்று நேரம் அங்கு தாமதிக்க அவரது காதலியும் அவரது அண்ணனும் அந்த குரூப்பில் கடைசியாக நடந்து வரும் ஜெமினியை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போ மீளாத பாசத்தில் உள்ள அண்ணன் அவரை கூப்பிடுவதற்காக ஒரு நிமிஷம் பாபு என கூப்பிடுகிறார் ,ஜெமினி ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு சோகத்துடன் தன் வழியே செல்கிறார். மீண்டும் அவரது அண்ணன் கூப்பிட முயல அவரது காதலி பதடுத்து விடுகிறார் .அதற்கு அர்த்தம் அவர் வழியில் அவர் செல்லட்டும் அப்போதுதான் அவருக்கு அமைதி கிடைக்கும். இந்த சீன் படத்தின் கிளைமாக்ஸ். பார்ப்பவர்கள் நெஞ்சசை உருக்கிவிடும். அடுத்து ஜெமினி சாவித்திரி நடித்த காத்திருந்த கண்கள். இதில் சாவித்திரிக்கு  இரட்டை வேடம் .இதில் ஜெமினி நகரத்தில் இருக்கும் சாவித்திரியை காதலிக்கிறார். இருவரும் காதலர்கள் .டாக்டர் ஆன அவர் எதைச்சையாக கிராமத்துக்கு செல்ல அங்கிருக்கும் ஏழை சாவித்திரி இவரை பார்த்து ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் ஜெமினி அவரை பார்க்கவே இல்லை. ஏழை சாவித்திரியின் கடைசி காலத்தில் அவரது அம்மா கொடுத்த விலாசத்தை வைத்துக்கொண்டு தனது அக்கா சாவித்திரியை நகரத்தில்  சந்திக்க வருகிறார். வரும் வழியில் ஒரு ட்ரெயின் ஆக்சிடெண்டில் இரண்டு பேரும் மாட்டிக்கொள்கிறார்கள். அதில் நகரத்து சாவித்திரி நினைவை இழக்க ஒரு ஹாஸ்பிடலில்  இருக்கிறார் .கிராமத்து சாவித்திரி எப்படியோ அந்த அட்ரஸை கண்டுபிடித்து அவரது வீட்டுக்கு செல்ல அவரது பெற்றோர் இவர் ட்ரெயின் ஆக்சிடெண்டில் தனது நினைவு இழந்து விட்டார் என்று முடிவு செய்து கொண்டு அவரது காதலன் ஜெமினிக்கு அவரை மனம் முடித்து விடுகிறார்கள் .அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகிறது. ஜெமினி தான் காதலித்த பெண் தான் இவள் என்று அவளது பெயரே சொல்லி கூப்பிடுகிறார். இந்த சாவித்திரிக்கோ ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு விட்டது .அதனால இங்க இருக்க பிடிக்காமல் திருச்சிக்கு செல்கிறார்கள் .திருச்சியில் தான் நகரத்து சாவித்திரியும் ட்ரீட்மெண்டில் இருக்கிறார் .அந்த சாவித்திரிக்கே ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுப்பதற்காக ஜெமினி அழைக்கப்படுகிறார். போன இடத்தில் இரண்டு சாவித்திரி களும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ள தங்கை சாவித்திரி கலக்கமாகிறார் .இந்த குழப்பத்தில் நகரத்து சாவித்திரிக்கு குழப்பம் வந்து விடுகிறது. ஆஸ்பத்திரியில் நகர த்து சாவித்திரிக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பதற்காக ஜெமினி வர ஜெமினியை பார்த்த அடுத்த கணம் இவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் பூரணமாக வந்து விடுகிறது. ஆனால் அதை அவர் வெளி காட்டவில்லை . அதற்குள் இவரை மணந்த சாவித்திரி தனது குற்றம் வெளிப்பட்டு விடும் ஆகவே தனது அக்கா சாவித்திரி இடம் மன்னிப்பு கேட்பதற்காக அதே இடத்துக்கு வருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால்நடந்த இந்த திருமணத்தை நீங்கள் மன்னிக்க வேண்டாம். நான் உங்களை விட்டு விலகி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் பெயரே கூப்பிட்டு கூப்பிட்டு உங்கள் நினைவாகவே வாழ்ந்த உங்க கணவர் அவருக்கு பிறந்த குழந்தை இது அதனால இது உங்களுக்கு பிறந்த குழந்தையாகவே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியேற முயற்சிக்கிறார் .அப்போ ஒரு கணம் தாமதித்த சாவித்திரி சற்று இரு என்று சொல்லிவிட்டு டாக்டர் என்னை அழைக்கிறார் என்று ஒரு தீர்க்கமான முடிவோடு போகிறார்.  இதுதான் கிளைமாக்ஸ். இந்த சீனில் சாவித்திரி ஜொலிப்பார். அவர் அணிந்திருக்கும் உடை அவரது நடிப்பு எல்லாமே உயர்தரமாக இருக்கும் .அவர் கடந்து போகும் பாதையில் ஒரு புத்தர் சிலை உள்ள அறை,அதை தாண்டித்தான் போக வேண்டும் .அந்த அறையில் ஊதுபத்தி எரிந்து கொண்டே இருக்கும். அந்த அறையை அவர் கடக்கும் போது ஒரு நிமிடம் புத்தரை பார்க்கிறார். பிறகு ஜெமினியை போய் சந்திக்கிறார். அப்போது ஜெமினி சொல்கிறார் நான் தான் உன்னை காதலித்தவன் என்னை மறந்து விட்டாயா என்று கேட்க அப்போது சாவித்திரி சொல்கிறார் நான் காதலித்தது ராமனை கிருஷ்ணனை அல்ல என்கிறார். சந்தர்ப்பசமாக ஏற்பட்ட குழப்பத்தில் நடந்த சம்பவம் இது என்று சொல்ல நீங்கள் என்னை உண்மையாக காதலித்து இருந்தால் என் போன்ற தோற்றமுடைய ஒருத்தி வந்தவுடன் நீங்கள் என்னை மறந்து விட்டீர்கள். நீங்கள் என் உள்ளத்தை காதலிக்கவில்லை. உருவத்தை தான் காதலித்தீர்கள். அதனால் தான் நீங்கள் தடுமாறி விட்டீர்கள் என்று சொல்லி என்னதான் இருந்தாலும் அவள் உங்களோடு வாழ்ந்தவள். ஆனால் அவர்கள் ஒரு குற்ற உணர்ச்சியோடு வாழ்கிறார். நீங்கள் என் பெயரை தான் சொல்லி அழைத்து அழைத்தீர்களா? இனிமேல் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு குழந்தைகளோடு வாழ வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறார். அப்போது உனது நிலைமை என்று ஜெமினி கேட்க ஒரு சோகப் புன்னகையோடு அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைக்கும் காட்சி கண்ணீரை வரவழைத்து விடும். திரைப்படத்தில் நான் ரசித்த அருமையான கிளைமாக்ஸ் இல் இது ஒன்று. தியாக தீபமாக எல்லாம் கடந்த நிலையில் சாவித்திரி நடிக்கும் நடிப்பு அருமை

Comments

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64