வெளிச்சம் பரவட்டும். பகுதி 64
எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம் என்றால் அது 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தான்.அப்போது நான் பியுசி படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல வேண்டும் இந்தி எதிர்ப்புக்காக என்றார்கள். கல்லூரியில் படித்தாலும் இது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது .ஆகவே நாங்களும் எல்லோரையும் போல கூட்டத்தோடு கூட்டமாக சென்றோம். போஸ்ட் ஆபீஸில் மறியல் நடந்தது பெரும் ஊர்வலம் அங்கே அமர்ந்து போராட்டம் நடத்தினோம் .பிறகு போலீசார் வந்து கலைத்தார்கள். அதன்பிறகு தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இப்படி எல்லாம் ஒரு போராட்டம் நடக்கும் என்பதே எனக்கு அந்த வயதில் எதுவும் தெரியாது .ஆனால் மிகவும் ஒரு உற்சாகமாக தான் இருந்தது. போராட்டத்தில் கலந்து கொள்வது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஓய்ந்துவிட்டது.இதை முன் நின்று நடத்தியது திமுக தான்.நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் இது மாணவர்களின் போராட்டமாக அமைந்தது .கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக அந்த காலத்தில் பேசப்பட்டது .இந்த மாணவர்களின் தலைவராக ஒருங்கிணைத்தவர் அப்போது திமுகவில் இளைஞராக இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எல். கணேசன் அவர்கள். மாணவர் அணி தலைவராக இருந்ததால் அவர் தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து எல்லா மாணவர்களையும் ஒருங்கிணைத்து வைத்து விட்டார் .அதனால் போராட்டம் தீவிரமடைந்தது. நாளுக்காக நாள் எல்லா கல்லூரிகளிலும் ஸ்ட்ரைக் போராட்டங்கள் தான். நாங்கள் திராவிட கழகத்தை சேர்ந்த குடும்பத்தினர் இருந்ததால் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்பதாக சொல்லிவிட்டதால் எங்கள் வீட்டில் போராட்டத்திற்கு செல்வதற்கு தடை வைத்து விட்டார்கள். ஆனால் சிறு சிறு நகரங்களில் கூட எங்களது ஊரில்கூட தாராசுரத்தில் கூட மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள .அதில் என் கூட படித்த நண்பர் ஒருவர் அந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தினார் .அப்போது போஸ்ட் ஆபீஸிலிருந்து ஒரு போஸ்ட் பாக்ஸில் கழட்டி வந்து அந்த போஸ்ட் பாக்ஸை காங்கிரஸ் கொடி கம்பத்தில் கட்டி விட்டார் .எங்கள் ஊர் காங்கிரஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தவர் அந்த பையனை பிடித்து அடித்து இருவரும் ரோட்டில் உருண்டது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த அளவுக்கு போராட்டம் வலுவடைந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஒரு ஒரு மாதத்திற்கு பிறகு அந்தப் போராட்டம் மெல்ல அடங்கியது இதனுடைய திமுக தலைவர்களாக இருந்த அனைவரையும் அண்ணா கருணாநிதி நெடுஞ்செழியன் மதியழகன் சத்தியவாணி முத்து மனோகரன் ஆசைத்தம்பி இதுபோன்று பெரிய தலைவர்கள் திமுகவில் இருந்தனர் .அவர்கள் அனைவருமே பிரச்சார பீரங்கிகள் போல .ஒவ்வொரு மீட்டிங்ளையும் திமுக மீட்டிங் என்றால் இவர்களின் கர்ஜனை ஒலிகேட்கும் .ஆனால் காங்கிரஸ் கூட்டங்களில் இந்த மாதிரி பேசுவதற்கு ஆட்கள் கிடையாது .இந்தி எதற்காக வேண்டும் என்று எடுத்துச் சொல்லவும் காங்கிரசுக்கு தெரியவில்லை. ஆனால் திமுகவில் அனைவருமே அனல் கக்கும் பிரச்சாரம் செய்வார்கள் .அந்த பேச்சை கண்டு மயங்குவதற்கு மாணவர்கள் ஏராளமாக கூடுவார்கள். இளைஞர்கள் கூட. திமுக ஆழமாக மக்கள் மனதில் ஊந்றிவிட்டது. திமுக தலைவர்கள் நேரடியாக பங்கு எடுக்கவில்லையே தவிர மாணவர்கள் கைகளில் இந்த போராட்டம் வந்ததால் இது வெகு எளிதாக ததீப்பற்றியது போல பரவி விட்டது. பல தலைவர்களும் திமுக தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர் . போராட்டம் அடங்கியது .ஆனால் திமுக வேரூன்று விட்டது என்பதற்கு என்பது எனக்கு அப்போது சரியாக தெரியவில்லை .ஆனால் திமுக பலமாக 65 ல் மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்து விட்டது .அந்த அளவுக்கு இந்த போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலி 1967 இல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது. திமுக ஆட்சி பீடத்தில் ஏறியது அதற்கு இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு முக்கியமான காரணம் . மேலும் சில காரணங்கள் இருந்த போதும் கூட இந்திய எதிர்ப்பு போராட்டம் ஒரு உணர்வை தூண்டிவிட்ட போராட்டம் அப்போது மாணவர்கள் கொந்தளிப்பு . இந்த போராட்டத்தை திமுக கொண்டு சென்றது. மாணவர்களின் பேச்சு திறனும் இந்த காலகட்டத்தில் அதிகமாக வளர்ந்தது. அதில் பங்கெடுத்த மாணவர்கள் பின்னாளில் திமுகவில் சேர்ந்து மிகவும் பிரபலமானார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த மாணவர்களின் இந்தி எதிர்ப்பு தான்.இந்தி எதிர்ப்பு என்ற உணர்வு இதற்கு முக்கியமாக சப்போர்ட் செய்வது அந்த காலத்தில் வந்த தினத்தந்தி பேப்பர். தினத்தந்தி பேப்பரில் தினமும் நியூஸ் வந்து கொண்டே இருக்கும். மாணவர்கள் அதை விரும்பி படிப்பார்கள். எல்லா இடங்களிலும் ரயில்வே ,ரயில் மறியல் போஸ்ட் ஆபீஸ், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆபீஸ்கள் முன்பாக எல்லாம் போராட்டம் நடந்தது. அதனால் அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் போராட்டத்தாலும் திமுகவை முன்னெடுத்துச் சென்றதாலும் அப்போது இருந்த பல தலைவர்கள் மிகவும் பேச்சுதிறனோடு மக்களை தன்வசமாக்கும் அந்த வார்த்தைகளால் மயங்கினார்கள். அதனால் அந்த போராட்டம் வெற்றி பெற்றது பள்ளிகளில் இந்தி ஒழிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஒன்றிய அரசு இந்தியை மீண்டும் திணிக்க பார்க்கிறது. ஒவ்வொரு திட்டத்தையும் கட்டாயப்படுத்துகிறது. அப்போது 19 65ல் இருந்த காங்கிரஸ் அரசு மும்மொழி திட்டம் கொண்டு வந்தவர்களே ஒழிய அதை கட்டாயப்படுத்தவில்லை .ஆனால் இந்த அரசோ இன்றைக்கு இருக்கும் பிஜேபி அரசு மும்மொழி திட்டத்தை கட்டாயப்படுத்த பார்க்கிறது. அது மட்டுமல்ல ஒரு சர்வாதிகாரிய தன்மையோடும் நடந்து கொள்கிறது. கல்விக்காக செலவிடப்படும் தொகையை மும்மொழி திட்டத்தை ஏற்காவிட்டால் அந்த தொகையை உங்களுக்கு கொடுக்க முடியாது என்று நேரடியாக சொல்லுகிறது. ஆகவே இது ஒரு சர்வாதிகார அரசு. இந்த சர்வாதிகார அரசை எதிர்த்து போராடும் உணர்வு தற்போது உள்ள மாணவர்களுக்கு இருக்கிறதா என்றும் நாம் யோசிக்க வேண்டும். எல்லோரும் போராட்டம் போராட்டம் என்கிறார்கள். ஆனால் இந்த போராட்டம் வெற்றி பெறுமா அப்போது இருந்த காலகட்டத்தில் எங்களுக்கு பள்ளி கல்லூரி தவிர வேறு எந்த விஷமும் தெரியாது. ஏனென்றால் எல்லா குடும்பத்தில் இருந்தும் முதலாவதாக பள்ளி கல்லூரிகளில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு படிப்பு ஒன்றைத் தவிர வேறு எதுவும் தெரியாது .மேலும் மேலும் படிப்புக்கு எதை படித்தால் மேல் படிப்புக்கு செல்லலாம் என்றும் தெரியாது. ஹிந்தி படிப்பதனால் என்ன பயன் என்றும் தெரியாது. ஹிந்தி எதோ ஒரு அன்னிய மொழி என்பது மட்டுமே தெரியுமே ஒழிய வேறு எதுவும் தெரியாது. இளைஞராக இருந்ததால் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்கள்,ஆதலால் அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால் 65 பிறகு தற்போது 2025ல் தற்போது மாணவர்கள் அப்போது இருந்தது போல இல்லை . சுயமாக சிந்திக்கும் திறன் பெற்றுவிட்டார்கள் அதுமட்டுமல்லாமல் என்ன படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம் என்றும் அவர்கள் உணர்ந்து விட்டார்கள். பெரியவர்கள் சொல்வது எதையும் அவர்கள் தற்போது கேட்பதில்லை. மேலும் மாணவர்களுக்கு போராட்டம், போராட்ட உணர்வு கிடையாது. அப்பொழுது இருந்த மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்ட மாணவர்களாக இருந்ததால் இந்திக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றது. தற்போது மாணவர்களிடையே இந்த போராட்டத்தை கொண்டு செல்வது அவ்வளவு எளிதல்ல .மாணவர்கள் இதில் பங்கேற்பார்களா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆகவே இதற்கு தற்கால வழிமுறைகளில் கோர்ட்டுகளை நாடுவது ஒன்றே வழி .என்னதான் தற்போது கோர்ட்டுகளில் பாரபட்சமாக சில நீதிபதிகள் நடந்து கொண்டாலும் கான்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா இருக்கும் வரை நீதி வென்று கொண்டே இருக்கும். எங்கோ ஒரு மூலையில் ஒரு வெளிச்சம் தோன்றாமல் இருக்காது. ஆகவே மாணவர்களின் உணர்வு போராட்டத்தை விட சட்ட போராட்டம் மூலமாகவே நாம் இதனை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்
எழுத்துகளைக் கருப்பாக்கவும் வயசான காலத்தில இத வாசிக்கவே முடியலைங்க ......
ReplyDeletehttps://dharumi.blogspot.com/2005/07/38-down-down-hindi-65.html
ReplyDelete// சட்ட போராட்டம் மூலமாகவே நாம் இதனை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்// ........ வக்கீலய்யாவுக்கு இது சரியா தெரியலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. நம் குரல் தனித்து ஒலிக்கிறது. மற்ற மாநிலங்கள் அமைதி காக்கின்றன. ours will be voice in wilderness. அதோடு எல்லாம் முடிஞ்சி போன் கதையா எனக்குத் தெரியுது, ஒண்ணுமே நடக்காத மாதிரி நாமும் விழிச்சிக்கிட்டு இருக்க மாதிரி :வேஷம்: கட்டிக்கிட்டு ஆடுறோம், எல்லாம் :கதம் கதம் " ஆயிரிச்சிங்கய்யா .......... ஓம் சாந்தி........ :(
ReplyDelete