வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63

பசுபதி என்கிற என் நண்பன் வக்கீலாக நான் ஜூனியராக இருந்து ஆபீஸில் எனக்கு பின் இரண்டு வருடங்களுக்குபின் வந்தார் .மிகவும் துடிப்பான சுறுசுறுப்பான வக்கீல். ஆரம்பத்திலேயே வக்கீல் தொழிலில் மிகவும் ஆர்வம் உள்ளவர். சொல்லிவிட்டார் நான் கிரிமினல் கோர்ட்டில் பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்று .உடனே அதுவரை கிரிமினல் கோர்ட்   பார்த்துக் கொண்டிருந்த நான் எனக்கு ஒரு மாற்று வந்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் அவரிடம் கிரிமினல் சைடு கட்டுகளை தள்ளிவிட்டு , நான் சிவில்சைடில்  போய் விட்டேன் ஆனால் பசுபதி அவர் தீவிரமாக பிரக்டிஸ் செய்தார் வெகு விரைவில் அவர் தனியாக நடத்தும் அளவுக்கு விறுவிறு என்று வளர்ந்து விட்டார். வருமானத்திலும் கூட நான் சிவில் செயலில் பிராக்டிஸ் செய்ததால் எனக்கு அவ்வளவு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் கிரிமினல் செயலில் விறுவிறு என்று ஒரு சீனியர் லெவலுக்கு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அவரது உழைப்பு அயராத உழைப்புதான் காரணம் அதற்கு. அதுமட்டுமல்லாமல் உழைப்பு மட்டுமல்ல  அதிகமான ஆர்வம் கொண்டவர். இந்த தொழிலில் மேலே வந்து விட வேண்டும் என்று ஆர்வத்திலேயே பிராக்டிஸ் செய்தார் அப்படியேபட்ட வக்கீல் தொழிலில் மிகவும் ஈடுபாடோடு வந்த பசுபதி நண்பர் திடீரென பேங்க் வேலைக்கு சென்று விட்டார். பேங்க் வேலைக்கு சென்றபோதும் அவருக்கு வக்கீல் தொழிலில் இருக்கும் நாட்டம் குறையவே இல்லை. பேங்க் தொழிலில் இருந்த போதிலும் ரிட்டையர் ஆகி வந்த பிறகு மீண்டும் பிரக்டி ஸ் செய்ய வந்து விட்டார் வக்கீல் தொழில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம். அப்போது நான் கிட்டத்தட்ட ஒரு சீனியர் ஆகிவிட்டேன். அவர்கள் மைத்துனரும் எனக்கு பக்கத்தில் ஆபீஸ் வைத்திருந்தார். அந்த ஆபீசில் தன்னை இணைத்துக் கொண்டார் வயது 62க்கு மேல் மீண்டும் அதே சுறுசுறுப்புடன் தனது பணியை தொடங்கியவர் கடைசி வரை உழைத்தார். எந்த கோர்ட் வேலை இருந்தாலும் அங்கு செல்வார் ஆனால் அவருக்கு கிரிமினல் சைடில்  நாட்டம் குறைந்து போய் சிவில் செயலில் பிராக்டிஸ் செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது. எனது உதவியை நாடுவார் நானும் அவருக்கு தகுந்த வகையில் உதவி செய்வேன். என்னிடம் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டவர் .மற்றவர்களிடம் அதிகமாக நெருங்கி பழக மாட்டார். அவருக்கு சிறுவயதில் இருந்து நல்லவர், கெட்டவர் என்று பிரித்து விடுவார் .தனக்கு பிடிக்காதவனாக இருந்தால் அவர் பெரும்பாலும் அவரிடம் கிட்டவே நெருங்கவே மாட்டார் .மிகவும் ஒரு உயர்தரமான மனிதர் .அதாவது நேர்மைக்கும் சத்தியத்திற்கும் ஒரு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நண்பர் பசுபதியை சொல்லலாம். அந்த அளவுக்கு நேர்மை. பேங்கில் வேலை பார்த்தபோது அந்த சமயங்களில் அந்தப் பணக்கட்டுகளை பார்க்கும்போது ஏற்படும் அந்த ஆவல் கூட ஏற்படக்கூடாது என்று வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கையை கழுவி விடுவாராம். சமயங்களில் ஏதாவது குறைபாடுகள் பேங்கில் தெரிந்தாலும் அதை தன் கைக்காசை போட்டு கட்டி விடுவார் அந்த அளவுக்கு நேர்மையானவர் பேங்கில் வேலை பார்க்கும் போது பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற சில கட்டாயங்கள் வரும்போது அதை தவிர்த்து விடுவாராம். அதுபோல் கடைசியில் பேங்கில் தனக்கு ஒரு அழுத்தம் கொடுக்க நினைத்தபோது இரண்டு வருடம் கடைசி இரண்டு வருடமும் லீவ் போட்டுவிட்டார் 
.அந்த அழுத்தத்தில் மாற்றக்கூடாது என்பதற்காகவே அவ்வளவு கை சுத்தமானவர் நேர்மை எல்லாவற்றிலும் ஒரு உயர்ந்த மனிதர் ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட அவரிடம் கிடையாது. எப்படி ஒரு மனிதர் இது போல் எங்கள் வட்டாரத்தில் நட்பு இருக்கிறார் என்று நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம் .அப்படிப்பட்ட பசுபதி எப்போதும் நான் அவரிடமே அதிகமான நட்போடு இருக்க வேண்டும் என்று விரும்புவார். ஆனால் நானோ எல்லோருடனும் நட்போடு இருப்பேன் .அவர் என்னை கண்டிப்பார். அப்படிப்பட்ட நண்பர் ஒரு சில தவிர வேறு யாரிடமும் போன் காண்டாக்ட் எதுவும் வைத்துக் கொள்ளவும் மாட்டார.  தனது மகளை பார்க்க அமெரிக்க சென்ற பசுபதி தன் உடல்நிலை குறைவால் பத்தே நாளில் திருப்பி விட்டார் .வந்தது முதல் அவருக்கு உடல் குறைபாட்டுக்காக அவர் மருத்துவமனைக்கு செல்ல ஆரம்பித்து வீட்டோடு தங்கி விட்டார் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து  அவருக்கு இம்யூனிட்டி பவர் இல்லாமல் செய்து விட்டது. அவர் இறப்பதற்கு பத்து நாளைக்கு முன்பு கூட என்னிடம் பேசிக் கொண்டிருந்த பசுபதி திடீரென நிறுத்திவிட்டாரே என்ன காரணமா இருக்கும் .பசுபதி ஏன் பேசல நீங்க அப்படின்னு எனக்கு ரொம்ப வருத்தமா போயிடுச்சு. பசுபதி ரொம்ப உடல் நிலை குறைவாக போயிருச்சு அப்படிங்கற கவலை. பசுபதியை காண்டாக்ட் பண்ண முடியல. பசுபதி ஒருநாள் இந்த சந்தர்ப்பங்களில் கூட என் வீட்டுக்கு வந்த பசுபதி என்னிடம் மட்டும் பேசிவிட்டு போனார். இன்னும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே ஃபோனில் பேசும் பசுபதி பேசாமல் விட்டாரே. என்னவென்று விசாரித்ததில் அவர் தன் நினைவை இழந்துவிட்டார் என்பதே. அனேகமாக அவர் பேசியது என்னிடம் மட்டுமே கடைசியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். பின்பு அவர் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் சென்ற பசுபதி அதன் பிறகு பேசவே இல்லை .ஆனாலும் அந்த நேரத்தில் கூட பசுபதி என்னை மறக்காம எனது போன் பார்த்தவுடன் அவரது மனைவியிடம் சொல்லி பேச சொன்னார். இதுபோல் ட்ரீட்மென்ட் வந்து இருக்கேன் என்னால பேச முடியல அவரால பேச முடியாது உங்களை வந்து பொங்கல் லீவுல வந்த பிறகு வந்து பார்க்கிறேன் சொன்னாரு அவங்க வீட்டுக்காரம்மா சொன்னாங்க. அப்படி சொன்ன பசுபதி பொங்கலுக்கு பிறகு என் கிட்ட பேசவேயில்லை.  பொங்கல் அன்று நன்றாக சாப்பிட்ட பசுபதி மறுநாள் முதல் தனது நினைவு தவறி விட்டார் விஷயம் தெரிந்து நான் பேச முற்பட்டபோது அல்லது பார்க்க முற்பட்டபோது அவர் முன்பே சொல்லிவிட்டாராம் .ஆனால் அவர்கள் குடும்பத்தார்கள் அவர் இந்த நிலையில் யாரும் நண்பர்கள் பார்க்க வேண்டாம் என்று குடும்பத்தார்கள் முடிவு செய்து அவரை கடைசி ஒரு வாரம் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் போய்விட்டார் பசுபதி. மனிதரில் ஒழுக்கம் நேர்மை கண்ணியம் எல்லாம் நிறைந்தவர் பசுபதி .  உடலும் வெள்ளையாக அதுபோல் சுத்தமான உள்ளம். என்றும் என் மனதில் பசுபதி.

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64