வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்
தெலுங்கு பட உலகில் 1952 இல் வெளிவந்த தேவதாஸ் படம் மூலமாக அறிமுகமானவர் சாவித்திரி. முதல் படமே சூப்பர் டூப்பர் படம் என்பதால் அவர் ஒரே இரவில் நட்சத்திரம் ஆகிவிட்டார். பின்பு 1954 இல் தேவதாஸ் படம் தமிழிலும் வெளிவந்தது .படம் அருமையான படம் பாடல்கள் அதைவிட சூப்பர். எல்லாவற்றையும் விட சாவித்திரியின் அந்த இளமையான சோகமான முகம் தமிழ் பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. 54 முதல் தெலுங்கிலும் தமிழிலும் தொடர்ந்து படங்கள் வெளிவந்தன. 57 இல் தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து மணந்தார். அவருக்கு இரு குழந்தைகளும் உண்டு .இருந்த போதிலும் அவரது சினிமா நடிப்பிற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. தொடர்ந்து நடித்த அவர் 1961 இல் வெளிவந்த பாசமலர் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடித்து பெரும்புகழ் பெற்றார் .61 முதல் தமிழ் ரசிகர்களின் முதல் நடிகையாக இடம்பெற்றார். அப்போது தமிழ் சினிமா உலகில் பானுமதி பத்மினி போன்ற பிரபல நடிகைகள் இருந்தனர் .ஆனால் சாவித்திரி இடம் ஒரு தனித்துவம் இருந்தது .அவர் பானுமதியை போல் ஒரு தசாவதாரம் இல்லை .ஆனால் சாவித்திரி இடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கும்.ரசிகர்ளின் சகோதரியைப்போல. அவர் பத்மினியை போல் ஒரு அழகு நடிகை அல்ல பத்மினிடம் ஆக்ரோஷமான நடிப்பு இருக்கும் அதே நேரத்தில் காதல் நடிப்பிலும் வல்லவர் அதே நேரத்தில் எந்த பாத்திரத்திற்கும் பொருத்தமாவார் பத்மினி. ஆனாலும் சாவித்திரிக்கு பத்மினியை போல் கலரும் கிடையாது எல்லா பாத்திரத்துக்கும் அவர் பொருத்தமானவரும் இல்லை. பத்மினியை போல் ஆவேசமாக பேசவும் தெரியாது. இருந்தபோதிலும் தனது மென்மையான நடிப்பினாலும் ஒரு தனது அழகான முகத்தைக் கொண்டு எல்லோரையும் கவர்ந்து வைத்திருந்தார் சாவித்திரி. மற்ற நடிகைகளை பார்ப்பது போல் அந்த காலத்தில் சாவித்திரியை ஒரு கவர்ச்சி நடிகையாக யாரும் பார்க்கவே இல்லை .எல்லோருமே 1961க்கு பிறகு தனது வீட்டு சகோதரியை போல தான் அவரைப் பார்த்தார்கள. அதே நேரத்தில் சரோஜாதேவியும் முக்கியமான நடிகை. ஆனால் அவர் பெரும்பாலும் கவர்ச்சி நடிப்புக்கு பயன்படுத்தி விட்டார்கள். அதனால் அவர் தனது சிறப்பான நடிப்பை காட்டுவதற்கான சிறந்த படங்கள் எதுவும் அமையவில்லை. ஆனால் சாவித்திரிக்கு நடிப்பில் சிவாஜிக்கு இணையான சேலஞ்சிங் ரோல் கொடுக்கப்படும் .சிவாஜியே சொன்னது கொஞ்சம் அசந்தா சாவித்திரி நடிப்பில் ஓவர் டெக் செய்து விடுவார் ஆகவே கவனமாக இருக்க வேண்டும் என்று. 54 முதல் 1968 வரை தெலுங்கிலும் தமிழிலும் சாவித்திரி கொடி கட்டி பறந்தார் செல்வ செழிப்பில் மிதந்தார் அவருடைய நடிப்புக்கு தெலுங்கு மக்கள் கொடுத்த வெகுமதி நடிப்பு அரசி என்று கொடுத்து அவருக்கு விஜயவாடாவில் ஒரு சிலையும் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.தங்கள் வீட்டு பெண் என்றே சொல்வார்களாம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நடிகை அவர் அவர் நடிக்கும் போது முழு உடலையும் கூட காட்ட மாட்டார்கள். சற்று குண்டாக தான் இருப்பார் ஆனால் முக அசைவில் அவ்வளவு பாவங்களையும் காட்டுவார். அப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகை. அப்படிப்பட்டவர் அவருடைய வாழ்க்கையிலும் சொந்தமாக படம் தயாரித்து தோல்வி அடைந்து தனது சொத்துக்களை எல்லாம் இழந்தவர். அவருடைய கடைசி காலம் இருண்ட பக்கமாக இருந்தது .சினிமா உலகில் இது சகஜம்தான் என்றாலும் தியாகராஜ பாகவதர் என் எஸ் கிருஷ்ணன் என்ற வரலாற்று சிறப்புமிக்க நடிகர்கள் கடைசி காலத்தில் தடுமாறி போனார்கள். அதே போல் தான் சாவித்திரியும் ஆனாலும் இன்றளவும் சாவித்திரி நடிப்பு பேசப்படுகிறது .வானத்தில் உள்ள சந்திரனுக்கும் களங்கம் உண்டு .நட்சத்திரங்களுக்கு இருக்காதா என்ன. சாவித்திரி மறைவிற்குபிறகு நடிகையர்திலகம் என்ற பெயரில் படம் எடுத்தார்கள்.தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்றார். அவர்கள் வீட்டுப் பெண் சாவித்திரி.
Comments
Post a Comment