தேர்தல் 2026 பகுதி 67
தமிழ்நாட்டில் 2026 இல் தேர்தல் நடந்தது .அதில் பிஜேபி தலைமையில் மதவாத சக்திகளும் அதற்கு எதிராக திமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. இடையில் நடிகர் விஜய் தாவெகா என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதில் பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக உள்ளனர் .அவர் புதிதாக வந்த கட்சியால் அவருக்கு என்று எந்தக் கொள்கையும் அவர் தெளிவாக சொல்ல முடியவில்லை. தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தது. அப்போது பிஜேபி அணியும் தோற்றது. திமுக அணியும் தோற்றது .எதிர்பாராத விதமாக விஜய் தனியாக நின்று 107 இடங்களை பிடித்து விட்டார் ஆனால் ஆட்சி அமைக்க அவருக்கு 119 இடங்கள் தேவை .இதற்காக அவர் ஆளுநரை பலமுறை சந்தித்தும் 119 பெயர்களை நேரில் காட்டினால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று அவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். விஜய்க்கு ஒரு புதிதாக தோன்றிய ஒரு நடிகரின் கட்சிக்கு எப்படி இவ்வளவு வாக்குகள் விழுந்தது. எப்படி இத்தனை சீட்டுகள் பிடிக்க முடிந்தது என்பது ஒரு ஆச்சரியமான,அதிர்ச்சியாகவும் இருந்தது .தேர்தல் முடிந்து சில நண்பர்களையும் நான் விசாரித்த போது தெரிந்தது பள்ளியில் படிக்கும் அவர் அவர்களது குடும்பத்தில் உள்ள சிறு பிள்ளைகள் 10 வயது கூட ஆகாத சிறுவர்கள் எல்லாம் நீங்கள் எனக்காகவாவது இந்த முறை விஜய்க்கு தான் ஓட்டு போடணும் அப்படின்னு கேட்டதாகவும் பிள்ளை சொல்வதை தட்ட முடியாமலும் பேரப்பிள்ளைகள் சொல்வதை தட்ட முடியாமலும் வழக்கமாக ஓட்டு போடும் நண்பர்கள் கூட இந்த முறை விஜய்க்கு ஓட்டு போட்டதாக சொன்னார்கள் .எனக்கு மிகுந்த ஆச்சரியமாக போய்விட்டது ஏனென்றால் நாம் பெரியவர்களை பார்த்து சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறோம் ஒழிய இதுபோல் சிறுவர்கள் மத்தியில் இப்படி ஒரு எண்ணம் பரவி இருக்கிறது என்பதை எனக்கு தெரியாமல் இருந்திருக்கிறது .அது போகட்டும் .ஆனால் ஓட்டு போடும் வயது 18 வயது என்று எதற்கு குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்று தனியாக ஒரு மெச்சூரிட்டி வரவேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் தற்போது மூளை வளர்ச்சி இல்லாத பத்து வயது சிறுவர்களும் ஐந்து வயது சிறுவர்களும் சொன்னார்கள் என்பதற்காக போடும் ஓட்டு அரை டிக்கெட் ஓட்டு தானே. ஓட்டு போடும் போது தனது வளர்ந்த அறிவை உபயோகிக்காமல் பாசத்துக்காக ஓட்டு போடுவதால் இதனால் என்ன பயன். அவர்கள் சுய அறிவை இழந்து விட்டு தேர்தலில் போய் பாசம் காட்டலாமா .இதன் விளைவு என்ன ஆனது விஜய் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாமல் போனது .இதன் காரணமாக தாம் தூம் என்று குறித்து வந்த விஜய் தற்போது பல கட்சிகளிடம் கையேந்தி நின்று கொண்டிருக்கிறார். இதைத்தான் நான் அவலம் என்று சொல்ல சொல்கிறேன் .ஒரு கொள்கை இல்லாமல் தான் எதை நோக்கி போகிறோம் என்பதே தெரியாமல் ஒரு கட்சியை ஆரம்பித்து விட்டு அதற்கு பாதுகாவலராக ஸ்கூல் பசங்களை நிறுத்தி இது போல் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டார்கள். தமிழ்நாட்டில இது யாரும் எதிர்பாராத ஒன்று .ஏனென்றால் விஜய்க்கு என்று எந்த கொள்கையை அவர் எப்படி போக போகிறார் எந்த சார்பில் இருக்கப் போகிறார் அல்லது மதசார்பற்ற அணியில் இருக்க போகிறாரா அல்லது அவர் நிலைப்பாடு என்ன அவர் என்பது கூட தெரியாமல் பள்ளி பசங்களை வைத்துக்கொண்டு ஓட்டு போட்டு இந்த அவலம் நடந்தது. நான் பேசும் இன்றைய தேதி 8 5 2026 வரை தமிழ்நாட்டில் ஆட்சி அமையவில்லை ஆகவே இனியாவது முதியவர்கள் சிறுவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அரசியலை அதில் கலக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
அடப் போங்க சார். பேரன் பேத்தி சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுதான். அதை விடுங்க. எல்லா வயதினரும் போட்ட ஓட்டு என்பதை முதலில் ஒத்துக் கொள்ளுங்கள். அதுதான் உண்மை. பழம் பூனைகள் கண்களைத் திறக்கணுங்க.
ReplyDeleteபெரும்பாலும் பெண்கள் போட்ட ஓட்டு சார்
ReplyDelete