வெளிச்ச்ம் பரவட்டும். ஈசிசேர் பகுதி 54
தாஜ்மஹால் கேட்ட அடுத்த நிமிடத்தில் எல்லோருக்குமே உடம்பில் ஒரு அதிர்வு பரவும். எல்லோரும் கேட்ட கதை தான் இந்த படமும் நான் மேற்சொன்ன படங்களின் வரிசையில் வந்த படம் தான் .இந்த படம் 1963ல் வந்தது இதில் நடித்த நடிகர்கள் பிரதீப் குமார் ஷாஜகான் ஆகவும் ரீனாராய் மும்தாஜ் ஆகவும் நடித்த படம். முதலில் சொன்ன அனார்கலி படம் வந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு வந்த படம். ஆனாலும் இந்த காதல் ஜோடியை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த படம். மகாராஜா வுக்கு அதே மாளிகையில் வளரும் அவருடைய எதிர்கால மனைவியாக போகும் மும்தாஜூம் ஒரே மாளிகையில் தான் வசிக்கிறார்கள். ஒருமுறை கடைத்தெருவில் ஒரு சிறு கடையில் அணிமணிகள் விற்கும் பெண்ணாக அவளைப் பார்த்த ஷாஜகான் அவளை பார்த்த உடனே மயங்கி விடுகிறான். அழகு அழகு என்றால் அப்படி ஒரு பேரழகு ரீனாராய் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அனார்கலி படத்தை விட இன்னும் வசீகரமாக இருந்தார். கதாநாயகன் பிரதீப் குமாரோ ஆணழகன். செல்வ செழிப்பு இதைவிட ஒரு ஆண் இதற்கு மேல் அழகாக இருக்க முடியாது என்ற தோற்றம். முகத்திலேயே ராஜகளை அது போன்ற கலை உள்ள நடிகர்களை நான் பார்த்ததில்லை பிர...