வெளிச்ச்ம் பரவட்டும். ஈசிசேர் பகுதி 54

தாஜ்மஹால் கேட்ட அடுத்த நிமிடத்தில் எல்லோருக்குமே உடம்பில் ஒரு அதிர்வு பரவும். எல்லோரும் கேட்ட கதை தான் இந்த படமும் நான் மேற்சொன்ன படங்களின்  வரிசையில் வந்த படம் தான் .இந்த படம் 1963ல் வந்தது இதில் நடித்த நடிகர்கள் பிரதீப் குமார் ஷாஜகான் ஆகவும் ரீனாராய் மும்தாஜ் ஆகவும் நடித்த படம். முதலில் சொன்ன அனார்கலி படம் வந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு வந்த படம். ஆனாலும் இந்த காதல் ஜோடியை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த படம். மகாராஜா வுக்கு அதே மாளிகையில் வளரும் அவருடைய எதிர்கால மனைவியாக போகும் மும்தாஜூம் ஒரே மாளிகையில் தான் வசிக்கிறார்கள். ஒருமுறை கடைத்தெருவில் ஒரு சிறு கடையில் அணிமணிகள் விற்கும் பெண்ணாக அவளைப் பார்த்த ஷாஜகான் அவளை பார்த்த உடனே மயங்கி விடுகிறான். அழகு அழகு என்றால் அப்படி ஒரு பேரழகு ரீனாராய் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அனார்கலி படத்தை விட இன்னும் வசீகரமாக இருந்தார். கதாநாயகன் பிரதீப் குமாரோ ஆணழகன். செல்வ செழிப்பு இதைவிட ஒரு ஆண் இதற்கு மேல் அழகாக இருக்க முடியாது என்ற தோற்றம். முகத்திலேயே ராஜகளை அது போன்ற கலை உள்ள நடிகர்களை நான் பார்த்ததில்லை பிரதீப் குமார் அவ்வளவு அழகு. ராஜகளை என்று சொல்வார்களே அது அவர்தான்.அவர் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறாள் மும்தாஜ். ஆனாலும் அவளை உருகி உருகி காதலிக்கிறான் ஷாஜகான். காதல் என்றால் அப்படி ஒரு காதல் வார்த்தைகளால் அதை வர்ணிக்கவே முடியாது. ஒரு கட்டத்தில் அவளை தான் மகாராஜா என்பதையும் மறந்து அவள் காலடியில் ரோஜா மலர்களை கொட்டி தனது காதலை வெளிப்படுத்துகிறான் .அவ்வளவு பேரன்பு கொண்ட ஒரு காதல். வழக்கம் போல் அவனுடைய சித்தியாக வரும் நூர்ஜஹான் இந்த காதலை எதிர்க்கிறார் .பல தடைகளை தாண்டி இருவரும் ஒன்று சேர்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அவருடைய பேரன்பில் மயங்கி கட்டுண்டு கிடக்கிறான் ஷாஜகான் .பட்டத்துக்கு வந்தும் மும்தாஜ் பக்கத்திலேயே வைத்துக் கொள்கிறான் .ஒரு மகாராஜா தனது அந்தப் அந்தப்புரத்திலேயே இருக்கக் கூடாது என்பதற்காக அவனுக்கு நல்ல அறிவுரைகளும் சொல்லி அவனை ராஜிய காரியங்களுக்கும் ஈடுபடுத்துகிறார் மும்தாஜ். ஏகப்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன ஆனாலும் மும்தாஜ் மீது பெயரில் உள்ள காதல் ஷாஜகானுக்கு குறையவே இல்லை .இதில் ஒரு பிரசவத்தில் மும்தாஜ் இறந்தவிடுகிறார் .அப்போது பிரதீப் குமார் கதறி அழுத காட்சி நம் கண்களையும் குளமாக்கும். ஒரு மகாராஜா தனது மனைவியின் இறப்புக்கு இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அவளுடைய இறப்பை தாங்க முடியாத ஷாஜகான்  தனது அறையிலிருந்து வெளியே வரவே இல்லை .ஒரு மாதமாக உள்ளேயே முடங்கி கிடக்கிறார். ராஜ்ஜியம் நடைபெற வேண்டும் என்பதற்காக மந்திரி பிரதானிகள் அனைவரும் வந்து கதவை திறக்கச் சொல்ல திறந்து வந்த ஷாஜகானை பார்த்து மற்ற எல்லோரும் அதிர்ச்சியாகி விடுகிறார்கள். ஏனென்றால் இந்த ஒரே மாதத்தில் அவன் தலை முடி ரோமங்கள் அத்தனையும் வெண்மையாகி விடுகிறது .அப்போ அவன் அந்த சோகத்தை எந்த அளவுக்கு தாங்கி இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக இந்த காட்சி  எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு மும்தாஜ் நினைவாகவே இருக்கும் ஷாஜகான் அவளுக்கு ஒரு அழகான ஒரு தாஜ்மஹாலை கட்டுகிறான். தாஜ்மஹால் அதற்கு ஈடு இணை எதுவும் உண்டா .அப்படி ஒரு கட்டடத்தை நினைவு சின்னத்தை தனது காதல் மனைவிக்கு எழுப்புகிறான் ஷாஜகான் . உலகத்தில் உள்ள அத்தனை அழகையும் கொண்டு வந்து ஒரு மஹாலில் அமைக்க முடியுமா ? அமைத்தான் ஷாஜகான் யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அந்த நினைவுச் சின்னம் அமைந்தது.அப்போதுதான் உலகத்தார்க்கு தெரிந்தது தனது மனைவியை எந்த அளவுக்கு நேசித்தானோ அந்த அளவுக்கு தாஜ்மகாலை கட்டியிருந்தான். ஷாஜகான் தனது கடைசி காலத்தில் அந்த தாஜ்மஹாலே பார்த்தபடியே உயிர் துறக்கிறான் இந்த படத்தில் முக்கியமான அம்சம் பிரதீப் குமாரும் ரினாராயும் எவ்வளவு அற்புதமாக தனது காதலை காட்டி இருப்பார்கள். ஒரு ஒரு பெண் என்பதால் கதாநாயகி சற்று அடக்கத்துடன் இருப்பார் .ஆனால் ஷாஜகானாக நடித்த பிரதீப் குமார் தன் காதலை வெளிப்படுத்தியது விதம் அபாரமாக இருக்கும். இந்த படத்தில் நடிப்பு என்றால் பிரதீப் குமார் நடிப்புதான் மேலோங்கி இருக்கும் .அதேபோல உலகத்தில் உள்ள அத்தனை அழகையும் ஒரு நினைவுச் சின்னமாக படைத்த தாஜ்மஹால்  ஒரு கற்பனை அல்ல .அது காவியம்

Comments

  1. அழகோவியத்தை கண்டீர்களா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63