வெளிச்சம் பரவட்டும் 32
நான் போன பத்தியில் சொன்னது போல எனது பெரியப்பா சக்கரபாணி தலைமையில் அனைவரும் வெளியில் வந்து விட்டார்கள் .ஆனால் கட்சி கட்சி என்று அலைந்தர்களே தவிர பிழைப்பிற்கு வழியில்லாமல் போய்விட்டது .அவர்களிடம் இருக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனது பெரியப்பா சக்கரபாணி மட்டும் புகையிலை தொழிலை எப்படியோ கற்றுக்கொண்டு அதில் முன்னேற்றம் அடைந்து வந்தார். சிறிது காலத்திற்கு பின் அவர் எங்கள் ஊர் தாராசத்தை விட்டு தஞ்சைக்கு வந்து விட்டார். தஞ்சையில் அவருக்கு தொழில் நன்றாக நடந்தது .அவருக்கு குழந்தைகள் இல்லை .ஆகவே தனது தம்பி பிள்ளைகள் அனைவரையும் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார் .எங்களுக்கு படிப்பு செலவு முதல் எங்களுக்கு திருமணம் செய்து வரைக்கும் அவர்களது செலவே. எல்லோர் வீட்டிலும் ஏகப்பட்ட பிள்ளைகள், ஆகவே எல்லார் வீட்டிற்கும் எனது பெரியப்பாவை ஒரு மாத உதவித்தொகைகொடுத்து வந்தார். இருந்தபோதிலும் அவர்களுக்கு வருமானம் பத்தவில்லை .ஏகப்பட்ட பிள்ளைகள் ஒருவர் வீட்டிலும் இருந்ததால் சமயத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டம் .அதை தவிர்க்க எனது அப்பாவெல்லாம் டீக்கடைக்கு கூட வேலைக்கு சென்றது...