வெளிச்சம் பரவட்டும் 32

நான் போன பத்தியில்  சொன்னது போல எனது பெரியப்பா சக்கரபாணி தலைமையில் அனைவரும் வெளியில் வந்து விட்டார்கள் .ஆனால் கட்சி கட்சி என்று அலைந்தர்களே தவிர பிழைப்பிற்கு வழியில்லாமல் போய்விட்டது .அவர்களிடம் இருக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனது பெரியப்பா சக்கரபாணி மட்டும் புகையிலை தொழிலை எப்படியோ கற்றுக்கொண்டு அதில் முன்னேற்றம் அடைந்து வந்தார். சிறிது காலத்திற்கு பின் அவர் எங்கள் ஊர் தாராசத்தை விட்டு தஞ்சைக்கு வந்து விட்டார். தஞ்சையில் அவருக்கு தொழில் நன்றாக நடந்தது .அவருக்கு குழந்தைகள் இல்லை .ஆகவே தனது தம்பி பிள்ளைகள் அனைவரையும் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார் .எங்களுக்கு படிப்பு செலவு முதல் எங்களுக்கு திருமணம் செய்து வரைக்கும் அவர்களது செலவே. எல்லோர் வீட்டிலும் ஏகப்பட்ட பிள்ளைகள், ஆகவே எல்லார் வீட்டிற்கும் எனது பெரியப்பாவை ஒரு மாத உதவித்தொகைகொடுத்து வந்தார். இருந்தபோதிலும் அவர்களுக்கு வருமானம் பத்தவில்லை .ஏகப்பட்ட பிள்ளைகள் ஒருவர் வீட்டிலும் இருந்ததால் சமயத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டம் .அதை தவிர்க்க எனது அப்பாவெல்லாம் டீக்கடைக்கு கூட வேலைக்கு சென்றது உண்டு. ஆனால் டீக்கடைக்கு வேலைக்கு செல்வது எனது பெரியப்பாவுக்கு பிடிக்காது. அவருக்கு தெரியாமல் தான் செல்வார்கள் .அவருக்கு தெரிந்து விட்டால் உடனே வேறு எங்காவது வேலை செய். இது வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அவருக்கு தெரியாமல் பின்னால் எனது அப்பா போன்றவர்கள் டீக்கடை வைத்ததும் உண்டு .அப்போது எதுவும் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அப்படி டீக்கடை வைத்ததால் எங்கள் வீட்டில் பிள்ளைகள் நன்றாக சாப்பிட முடிந்தது .ஆனாலும் இவ்வளவு வறுமையிலும் இந்த ஏழு பேரும் தனது கொண்ட கொள்கையை விட்டு விடவில்லை .சுயமரியாதைக் கொள்கை ஒன்றே மூச்சு .அதுவே பேச்சாக இருந்தது .எந்த சந்தர்ப்பத்திலும் சுயமரியாதை, கடவுள் மறுப்பு இதனை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் எங்களுக்கெல்லாம் கோவில் என்பது எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது .அவ்வளவு தூரத்திற்கு தீவிரமான நாத்திகர்கள். எல்லார் வீட்டிலும் அதேதான் யாரும் அதிலிருந்து விலகவே இல்லை. அப்படிப்பட்ட குடும்பத்தில் எல்லோரும் திராவிட கழகம் நீதிக்கட்சி இவற்றிலேயே இருந்தார்கள் .எந்தவிதமான பதவி பொறுப்புகளிலும் இல்லை .ஆனால் வறுமையிலும் செம்மை . அந்த நேரத்தில் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் வந்தது. காமராஜர் ஆட்சியும் பெரியாரும் இணைந்ததால் ஏழை மக்களுக்கு ஒரு விடிவு காலம் வந்தது. எல்லா பள்ளிகளிலும் இலவச கல்வி இலவச மதிய உணவும் 1958 -59 களில் ஆரம்பித்து விட்டார்கள். ஆக இலவச கல்வியோடு சாப்பாடு கிடைத்ததால் எல்லோருக்கும் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. எங்கள் வீட்டில் யாரும் சும்மா இருக்க கூடாது எல்லோரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் .எப்போதும் புத்தகம் கையுமாக தான் இருக்க வேண்டும. கிட்டத்தட்ட வீட்டில் உள்ள பிள்ளைகள் பெண்கள் உட்பட 50% பேர் படித்தார்கள் அதில் 25 தேறியது வேலைக்கும் சென்றார்கள். இப்போது அந்த கல்வியின் அருமை எங்களுக்கு தெரிகிறது ஏன் எனது அப்பாவின் பேரப்பிள்ளைகள் என்ன எனது பேரப்பிள்ளைகள் கூடஇப்போது உலகம் முழுவதும் பறந்து விரிந்து இருக்கிறார்கள். இது எங்களுக்கு கிடைத்த கல்வியின் பயனே .ஆகவே எனது தந்தையர்கள் ஒரு தீர்க்கதரிசிகள் அந்த காலம் படிக்கும் காலம், கஷ்டமாக இருந்தாலும் இப்போது அனுபவிக்கும் காலம் வசதியாக இருக்கிறது .இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியாரும் காமராஜருக்கும் தான் அந்த நன்றி. இன்று வரை எங்கள் குடும்பத்தில் இருக்கிறது .எங்கள் வீட்டுதிருமணங்கள் சுயமரியாதை திருமணங்கள் தான் நடக்கும். இதுவரை எனது அப்பா காலம் தொட்டு இன்று வரை நூறு திருமணங்கள் எங்கள் வீட்டில் மட்டும் நடந்திருக்கிறது .இதை விடுதலை பத்திரிக்கையில் விடுதலை ஆசிரியர் அவர்களுடைய புத்தகத்தில் எங்களுக்கு வாழ்த்து சொல்லி கொடுத்திருக்கிறார்கள். எங்கள் வீட்டின் நினைவு பெட்டகம் அது. எனது தந்தையர்கள் காலம் ஒரு புரட்சிகரமான காலம் என்று சொன்னேன். ஒரு உதாரணம் கும்பகோணம் சுற்றுவட்டாரத்திலேயே முதல் சுயமரியாதை திருமணம் எங்கள் பெரியப்பாவுக்கு நடந்தது. அடுத்தபடியாக எனது அப்பாவின் திருமணம் . அப்போது கருப்புச்சட்டைக்காரர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் ஜாதிக்காரர்கள். அப்போது எனது அப்பாவுக்கு தனது தாய் மாமன் மகளை மணம் முடிக்க பெண் கேட்டார்கள். எனது பாட்டி வீட்டில் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள் சொந்த அத்தை மகனாக இருந்த போதிலும் பெண் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு கண்டிஷன் போட்டார்கள் .அய்யர் வைத்து திருமணம் செய்தால் ஒத்துக் கொள்வதாக சொன்னார்கள். சரி எப்படியோ கல்யாணம் ஆனால் சரி என்று எனது அப்பா தரப்பிலும் ஒப்புக்கொண்டார்கள். திருமணத்திற்கு முதல் நாள் பெண்ணை அழைத்து வந்து விட்டார்கள். மறுநாள் காலை திருமணம் .அப்போது நேரம் ஓடிக்கொண்டே இருந்தது .திருமணம் நடப்பது மாதிரி தெரியவில்லை .தலைவர் இன்னும் வரவில்லை. எனது அம்மா வீட்டிற்கு சந்தேகம் வந்துவிட்டது .எனது பாட்டி தனது உறவினர்களோடு வந்து சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார். எங்கே ஐயர் வரவில்லையா, எங்களுக்கு சந்தேகமா இருக்கு அப்படின்னு அப்படி என்று சொல்லி பெண்ணை ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார்கள் .ஐயர் வந்தால் தான் திருமணம் நடக்கும் என்று என்று சொல்லிவிட்டார்கள். சிலர் வீட்டுக்கு பின்பக்கமாய் சென்று கதவை திறந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார்கள்  இதோ ஐயர் வந்து விடுவார் என்று சொல்லி பேசிக் கொண்டே , எனது பெரியப்பா எனது அப்பாவிடம் கண் ஜாடை காட்ட எனது அப்பா கையில் வைத்திருந்த தாலியை என் அம்மாவின் கழுத்தில் கட்டி விட்டார். உடனே தகராறு ஆரம்பம் ஆகிவிட்டது .எனது பாட்டி வீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று எல்லோரும் பெரிய தகராறு செய்து விட்டார்கள் .நாங்கள் பெண்ணை அழைத்துச் செல்ல போகிறோம்  என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது என் பெரியப்பா நீங்கள் எதற்கும் பெண்ணை கேளுங்கள் என்று சொல்ல , எனது அம்மா தெரிந்தோ தெரியாமலோ எனக்கு மாமா தாலி கட்டி விட்டார்கள், இனிமேல் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள் ஆகவே நான் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதற்காக கட்டிய புடவையில் இருந்து போட்டிருந்த நகைகள் அத்தனையும் கழட்டி வாங்கிக்கொண்டு எனது பாட்டி வீட்டார் சென்று விட்டார்கள். இப்படி நடந்தது எனது தந்தையின் புரட்சித்திருமணம் . அதன் பிறகும் குடும்பத்தில் காதல் திருமணங்கள் நடந்தது உண்டு .குடும்பத்தில் யார் காதல் திருமணம் செய்து கொண்டாலும் அதற்கு ஆட்சேபனை செய்ய மாட்டோம் .ஆனால் பெண் வீட்டார்  எதிர்பக்கம் இருந்தால் அவர்கள் வீட்டில் சென்று இதுபோல் விஷயம் நீங்கள் பெண் தருவீர்களா என்று கேட்போம். அப்படி தராவிட்டால் விட்டுவிடுவோம். அப்படி ஒருவேளை அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் .எங்கள் தந்தையர்களின் வாழ்க்கை 1958க்கு பிறகு முன்னேற ஆரம்பித்தது . எனது பெரியப்பாவின் தொழில் அமோகமாக நடைபெற்றதால் எல்லா அண்ணன் தம்பிகளையும் பார்ட்னராக அரவணைத்துக் கொண்டார். ஆகவே வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.எனது பெரியப்பாவுக்கு குழந்தைகள் இல்லாததால் தனது சொத்துக்களை தனது அண்ணன் தம்பிகள் ஆறு பேருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார் .அவரிடம் கல்விக்குத் தான் முக்கியத்துவம் யாராக இருந்தாலும் படிக்க வேண்டும், நன்றாக படிப்பவர்களுக்கு ஊக்கப் பரிசும் உண்டு .செல்லமாகவும் வைத்துக் கொள்வார் .எல்லோரையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது லட்சியம். தனது செல்வத்தால் எல்லோரையும் தாங்கினார்.செல்வற்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் எங்கள் சக்கரபாணி பெரியப்பா .அதுபோல் தனது சொத்துக்களை காப்பதற்கு யாரையும் அவர் தத்து எடுத்துக் கொள்ளவும் இல்லை. அதனால அவரோட சொத்து பகிர்ந்து அளிக்கப்பட்டது . படிப்பதற்கு வசதி இல்லாதவர்களுக்கும் அவர் உதவி செய்தார் .62க்கு பிறகு தஞ்சையில் முக்கிய புள்ளிகளில், பெரும்புள்ளிகளில் ஒருவரானார். தற்கால அரசியலிலும் கால் பதித்தார். அப்போதுதான் அவர் கழகங்களை விட்டு காங்கிரஸில் காலடி எடுத்து வைத்தார். 62 இல்  கலைஞர் தஞ்சையில் நின்ற போது அவருக்காக ஏராளமாக செலவு செய்தார் .ஆனால் அவர் சொன்னது போல 67 இல் எம் எல் சி சீட் எனது பெரியப்பாவுக்கு கொடுக்கவில்லை. ஆகவே அவரை காங்கிரஸ் தத்து எடுத்தது சீட் கொடுத்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை 1968 ல் எனது சக்கரபாணி பெரியப்பா காலமாகிவிட்டார். எனக்கு தெரிந்து வாழ்ந்தவரை கம்பீரமாக வாழ்ந்தவர் எனது சக்கரபாணி பெரியப்பா. மிகப்பெரும் மனிதர். 2009 இல் அவரது நூற்றாண்டு விழாவை அரசியல் விழாவாக அரசியல் தலைவர்களை முன்னிறுத்தி அவருக்கு சிறப்பு செய்தோம். எங்களைப் பொறுத்தவரை மனிதரில் அவர் ஒரு மாமனிதர்

Comments

  1. இன்றைக்கும் எங்க ஊர்க்காரங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நல்ல மரியாதை இருக்கு

    ReplyDelete
  2. திருத்தப்பட்டது

    ReplyDelete
  3. எங்க ஊரிலும் இந்த கருப்புசட்டைக்காரங்களுக்கு தனி மரியாதை உண்டு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64