கதிர் 45 பேஸ்புக் நண்பர்கள்

பேஸ்புக்கில் நண்பர்கள் நாம் எதிர்பாராத விதமாய் அறிய நண்பர்களும் கிடைப்பார்கள் .மிக்க அறிவாளிகள் ,சோசியல் ஒர்க்கர்ஸ் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்படி ஒருவர் திரு.பாபுஜி நாடார். மிகப்பெரிய சோஷியல் ஒர்க்கர். எங்கு உதவி தேவை என்றாலும். அங்கு போய் நிற்பார். தன்னலமற்றவர். ஏழை மக்களுக்கு உதவுவது தனது கடமையாக செய்வார் .ஆஜான பாகுவான உடம்பும் ,உடம்பு மாத்திரம் அல்ல மனமும் அப்படியே. நான் விரும்பி நண்பர்களாகிய கொண்டவர்களில் அவர் ஒருவர். அவருக்கு தெரியாத விஷயமே இல்லையோ என்பது போல இருக்கும். மிகச் சிறந்த அரசியல்வாதியும் கூட. மிகப் பெரிய செல்வந்தரும் ஆவார். அவர்களெல்லாம் பேஸ்புக்கில் செய்திகள் கொண்டு வருவது இந்த உலகம் முழுவதும் இருக்கும் பல இடங்களில் அவருக்கு தொடர்பு உண்டு. அதந் மூலமாக பல விஷயங்களை பேஸ்புக்கில் வெளியிடுவார்.  என்னைக் கவர்ந்த மற்றொருவர் திரு.சற்குணம் கருப்பையா அவர்கள். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். வயது என்பதற்கு மேல். தெரியாத விஷயங்கள் கிடையாது. ஸ்கூல் படிப்பு என்ன படித்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் கவிதை புணைவது .முக்கியமாக அரசியலில் புகுந்து விளையாடுவார். அவருக்கு தெரியாத விஷயங்களை இல்லையோ என்று மலைக்கும் அளவுக்கு அவரது செய்திகள் இருக்கும். இதுபோல் எண்ணற்ற மணிகளும் உண்டு. பேஸ்புக் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல மிகப்பெரிய ஒரு சாதனம். இந்த பேஸ்புக்கில் முக்கியமாக தஞ்சைக்கு அருகில் உள்ள கண்ணந்தங்குடி என்ற கிராமத்தில் ஒற்றுமை பற்றி அடிக்கடி எழுதுவார்கள். எனக்கும் அந்த கண்ணந்தங்குடி கிராமத்தை காண வேண்டும் என்ற ஒரு ஆவல். திரு.எல். கணேசன் எல்லோரும் அறிந்த  திமுக எம் பி ஆகவும் இருந்துள்ளார். அவர்கள் சொந்த ஊரும் கண்ணந்தங்குடி ஆகும். அங்கு தற்போது திருவிழா ஒன்று நடந்து கொண்டிருக்கிறது .அதை பற்றி பெருமையாக பேசுவார்கள் எனது நண்பர்கள். அதில் ஒருவர் எங்களால் செல்லமாக அழைக்கப்படும் திரு ஏட்டையா ராஜேந்திரன் கண்ணந்தகுடியைச் சேர்ந்தவர் .நேற்று 16 5 2024 அவர்கள் ஊரில் திருவிழா என்று எங்கள் நண்பர்கள் திரு.கோவி சண்முகம் DEO, திரு.Inspector Tamilselvan, Thiru Balasubramanianan ஆகியோருடன் நானும்  சென்றேன். அந்த அந்த ஊரே ஒன்றுபட்டு அந்த திருவிழாவை  நடத்துகிறார்கள். மிக்க ஆச்சரியமாக இருந்தது. கோவிலும்,அதைசார்ந்த இடத்திலும் கால் வைக்க கூட அந்த கிரவுண்டில் இடமில்லை .அந்த அளவுக்கு கூட்டம் எல்லோருமே காரில் தான் வந்திருப்பார்களோ என்ற சந்தேகம்.அந்த  அளவுக்கு அந்த கிராமத்தைச் சுற்றிலும் கார்கள். ஏனென்றால் அந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இது ஒரு அதிசயமான செய்தி. அவர்கள் செல்வ செழிப்பும் சரி அவர்களுடைய ஒற்றுமையும் சரி எனக்கு வியப்பளித்தது. அப்படி ஒரு திருவிழாவை நான் எனது வாழ்க்கையில்  கண்டதே இல்லை. மிகச் சிறப்பான விழாவாக இருந்தது எங்களை நன்கு உபசரித்த திரு ஏட்டையா அவர்கள் ஊரின் பெருமைகளையும் அங்கு தொடர்ந்து நடக்கும் அந்தக் கால நாடகங்களையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். நாங்கள் நாடகம் தான் பார்க்க முடியவில்லை.  அந்தக் கூட்டத்தில் இருந்து  மிகவும் கஷ்டப்பட்டு வெளியில் வந்தோம் மிகவும் சிறப்பான நிகழ்ச்சி.ஏட்டய்யாவுக்கு நன்றி. தொடர்ந்து

Comments

  1. மனோகரன் உங்க கருத்து என்ன

    ReplyDelete
  2. கோவி சார் உங்க கருத்து

    ReplyDelete
  3. ஐயா திருவிழா பார்க்க வரீங்களா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63