ஒளிக்கதிர். 46/மனம் படுத்தும் பாடு

இந்த மனம் இருக்கிறதே இது நம்மை ஆட்டி வைக்கும் சில நேரங்களில். அப்போது இது படுத்துப்பாடு இருககே, நமது இயக்கமே அப்படியே நின்றுவிட்டது போல ஆயிடும். மேலும் பல விதமான குழப்பங்கள். நாம் செய்தது சரியா இல்லையா. இதே நினைவில் எந்த காரியமும் மேற்கொண்டு செய்ய முடியாது. பெரும்பாலும் நான் எந்த காரியத்தை ஈடுபட்டாலும் ஒரு திடமான முடிவு எடுப்பேன். சரியோ, தவறோ அதிலிருந்து மாற மாட்டேன். அப்போதுதான் மனம் உறுதியாக இருக்கும். எந்த சஞ்சலத்துக்கும் ஆட்படாது .இது சரியா தவறா என்று குழப்பமும் வராது .இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை மனிதனுக்கு ஒரு தெம்பை கொடுக்கும். இதுபோல்தான் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வயது ஆக ஆக நான் செய்யும் காரியம் சரிதானா. நான் சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேனா, என்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் எல்லாரும் மெய்யா, நான் கொஞ்சம் அறிவு பெற்றதாக நினைப்பது பொய்யா இதெல்லாம் ஏமாற்று வேஷமா ,நான் எனக்காக வாழ்கிறேனா ,அல்லது மற்றவர்களுக்காக வாழ்கிறேனா, எனக்கு உண்மையிலேயே படித்து தெரியும் அறிவு இருக்கிறதா, அல்லது தெரிந்தது போல மற்றவரிடம்  காட்டிக்கொள்கிறேனா, நான் சரியான பாதையில் தான் நடக்கிறேனா .இவ்வளவு காலம் நான் வாழ்ந்த வாழ்க்கை சரியா. ஏன் இந்த குழப்பம். இப்போது இனிமேல் எனக்கு என்று சிறப்பான கடமைகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் நான் எல்லோரிடமும் சரியாகத்தான் நடந்து கொண்டேனா அல்லது எனது வாழ்க்கையே சரியாகத்தான் செல்கிறேனா என்று சில சமயங்களில் சந்தேகம் வரும் அப்போதெல்லாம் புறந்தள்ளிவிட்டு போய்விடுவேன்.  அந்த சஞ்சலத்துக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேன். ஆனால் இப்போதெல்லாம் நிறைய நண்பர்கள் என்னிடம் பேசும்போது என்னை அவர்கள் சிலாகித்தைச் சொல்லும் போதும் இதற்கெல்லாம் நான் தகுதியானவனா அல்லது இவர்களிடம் ஒரு ஏமாற்று வேஷம் போடுகிறேனா நான் உண்மையான வனா என்று எனக்குள்ளேயே ஒரு குழப்பம். ஏனென்றால் எனது நண்பர்கள் குழு எல்லோருமே மெத்த படித்தவர்கள் .தனது ஆனால் தனது திறமைகளை காட்டாமல் இருக்கிறார்கள். திரு. ராஜமாணிக்கம் சோழ்கர் வித்தியாசமானவர்.  Retired DSP. தனது வாழ்க்கை வரலாற்றை தனது ஓய்வு காலத்தில் எழுதுகிறார். கடமை,கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர். அதிலும் சிலப்பதிகாரம் ,தமிழ் இலக்கியங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் எழுதுகிறார். இதுபோல் மற்ற நண்பர்கள் எழுதுவது இல்லை.. சரி நம் கதைக்கு வருவோம். நண்பர்களிடம் போய் நாம் நமக்கு தெரிந்ததை சொல்ல அவர்கள் நம்மை ஏதோ மிகப் பெரும் அறிவாளிகள் போல நம்மை நினைத்துக் கொள்வது எனக்கே கஷ்டமாக இருக்கிறது .ஆகவே இதை எல்லாம் குறைத்துக் கொள்ளலாமா என்று எனக்கு மனதுக்குள் ஒரு குழப்பம் .சரி இதில் ஒரு குழப்பம். அப்படி இருக்கும் நேரத்தில் நாம் நம்மை விட உயர்வான ஒரு மனிதரை குருவாக தேட வேண்டும் யாரை தேடுவது  என்பதிலேயே எனக்கு பெரும் குழப்பம் .அறிவார்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள் .அவர்கள் அன்பார்ந்த நண்பர்களும் கூட. அப்படி அவர்களிடம் போய் நமது குழப்பத்திற்கு ஒரு விடை தேட முடியாது, ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள். அவர்களும் இருக்கிறார்கள், அவர்களிடம் கேட்டால் என்ன ஆகும். நமக்கு சாதகமாகவே சொல்வார்கள் அதனால் நானும் ஒரு குருவை தேடி தேடி அலைந்தேன். அவர் தன்னலமற்றவராக இருக்க வேண்டும். கடைசியாக நண்பர் ரவி அவர் ஒரு நண்பரை அடையாளம் காட்டினார் அவர் பெயர் திரு. மருதமுத்து செட்டியார் ,நகைக்கடை உரிமையாளர் எனது பழைய வீட்டின் பக்கத்தில் தான் கடை வைத்திருக்கிறார் . மிகச்சிறந்த பண்பாளர் .மிகச்சிறந்த கொடையாளி எல்லா காரியங்களிலும் முன் நின்று நடத்துபவர். பேச்சுக்கள் தெளிவாக இருக்கிறது. மரியாதையாக வஇருக்கிறது. இவரை எனது நண்பர் ரவி எனக்கு போனில் அறிமுகப்படுத்தினார். என்னிடம் மிகவும் மரியாதையாகவும் அன்புடனும் பழகினார் .அடிக்கடி இவருக்கு போன் செய்து பல விஷயங்களை பேசுவேன் ஆனால் இன்னும் அவரை நான் சந்திக்கவில்லை .கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமை பார்த்ததில்லை என்பது போல, எனது வீட்டுக்கு பக்கத்தில் தான் கடை வைத்திருக்கிறார் எனது நண்பர்களுக்கு எல்லாம் வேண்டியவர், ஆனாலும் எனக்கு இன்னும் சந்திக்க வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்டவர் நமக்கு குருவாக இருந்தால் என்ன என்று யோசித்தேன் .நமக்கு குருவாக இருப்பதற்கு பல யோசனைகள் சொல்வதற்கு இவரே தகுதியானவர் என்று நான் முடிவு செய்தேன். ஒருநாள் அவரிடம் ஃபோன் பண்ணி ஐயா இது போல சில குழப்பங்கள் எனக்கு இருக்கு .இதை யாரிடம் நான் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று யோசனை செய்ததில் நீங்கள் தான் அதற்கு சரியான ஆளாக இருப்பீர்கள் .ஆகையால் எனது குரு போல நீங்க எனக்கு இதுக்கு தகுந்த ஆலோசனைகள் சொல்லணும், அப்படின்னு கேட்டேன் . அவர் என்ன செய்தார்  ஐயா என்னை போய் நீங்க குருவாக சொல்லாதீர்கள், உங்களைவிட ரொம்ப வயதில் குறைந்தவன் நான் அதற்கெல்லாம் தகுதியானவன் அல்ல  என்று சொல்லிவிட்டார்.சரி குருவாக இருக்க வேண்டாம் ஒரு நல்ல நண்பராக இருந்து எனக்கு யோசனை சொல்லுங்களேன். அப்படின்னு ஒரு சின்ன விஷயத்தை பத்தி கேட்டேன் .தெளிவா பதில் சொன்னார் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் பதில் சொன்னார் .அவர் பதில் சொல்லியே விதம் அருமையாக இருந்தது. இப்பேற்பட்டவர் தான் குருவாக இருக்க முடியும் அவர்களுக்கு மட்டுமே அந்த தகுதி உண்டு 
.எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா இது போதும் இனிமேல் எந்த காரியங்களுக்காக வாவது நான் யோசனை கேட்டால் எனக்கு நீங்கள் தகுந்த யோசனை சொல்லுங்கள் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் அவர் எனது தம்பி காமராஜின் நண்பர் .அதனால் அவர் என்னை அண்ணனாக பாவிக்கிறார். அதிகம் உயர் கல்வி கற்றவர் அல்ல, ஆனாலும் உலக அறிவு சிந்தனைகள் எல்லாம் அதிகமாக இருக்கவே எனக்கு மிகவும் பிடித்து போய் போய்விட்டதால் எனக்கு ஒரு கவலை விட்டது. ஆனால் இப்போது எனக்கு ஒரு சந்தேகம். மனம் என்பது தனியா நம் உடலை விட்டு தனியாக பிரிந்து இருக்கிறதா . ஏன் இந்த குழப்பம் வந்தவுடன் நாம் மனக்குழப்பம் ஆகிவிட்டது என்று சொல்கிறோம் ? நமது எண்ணங்களிலேயே மனது என்று ஒன்று தனியாக கிடையாது .ஆனால் நான் தெரிந்து கொண்டவரையில் நமது எண்ணங்களின் சில மாறுபாடுகள். செய்யலாமோ செய்ய வேண்டாமா என்ற எண்ணம். எண்ணத்தில் மாறுபாடு, அந்த எண்ணத்தின் மாறுபாடு வந்த பிறகு மனம் குழம்பி விட்டது என்கிறோம். இதை நாமே சரி செய்து கொள்ள முடியும். நாம் எடுத்த முடிவு சரியா தவறா  என்பதை நாம் முறையாக ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக , ஆயிரம் சொல்லுவாங்க அதுக்காக வேண்டி நமது எண்ணங்களையும் நாம் மாற்றிக் கொள்ள முடியாது. ஒருவேளை நமக்கு வேண்டியவர்கள் நமக்கு எடுத்த முடிவு தவறு என்று சொல்லும் போது எண்ணம் மாறுபாடு வருகிறது. அதுவே தான் மனக்குழப்பம் என்று நாம் சொல்கிறோம். அதனால் இப்பவும் சொல்கிறேன் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால் மனக்குழப்பம் கிடையாது. மன குழப்பம் தெளிந்து போய்விடும் .ஆகவே தெளிவான முடிவு எடுக்க ,தொடர்ந்து முடிவெடுக்க முடிவு செய்து விட்டேன். இப்போது எந்த குழப்பமும் இல்லை குருவை தேவைப்படும்போது நாடுவேன் தொடரும்

Comments

  1. பார்த்து சொல்லுங்க

    ReplyDelete
  2. ஐயா,யாராச்சும் இருக்கீங்களா

    ReplyDelete
  3. நீங்க சரியா ஆய்ட்டீங்க. ஆனா எங்களை ஒரேயடியா குழப்பத்துக்குள்ள தள்ளிட்டீங்களே ... நியாயமா, சார்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63