ஒளிக்கதிர் 47 எண்ணித்துணிக

மனம் படுத்தும் பாட்டை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். இப்போது மனம் எப்படி செயல்படுகிறது. எண்ணங்கள் சரியாக இருந்தால் மனம் துள்ளாது. அதனாலேயே எந்த விஷயத்திலும் எண்ணித் துணிக கருமம்  என்றார்கள். ஒரு காரியத்தை செய்யும் பொழுது அதில் குழப்பம் இருக்க கூடாது. இதுதான் இப்படித்தான் என்றிருந்து விட்டால் மனம் தள்ளாடாது .ஆகவே மனம் தள்ளாடும் படி அதற்கு நாம் தான் இடம் கொடுக்கிறோம். பெரும்பாலான விஷயங்களில் ஒரு தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நோயாளி ஆன முத்துராமன் தனது மனைவி தேவிகாவுக்கு தான் இறந்து விட்டால் அவருடைய பழைய காதலனான டாக்டர் கல்யாண குமாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி கேட்கிறான். அப்படி உறுதிமொழி கொடுத்ததில் முத்துராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் கல்யாண் குமாருக்கு இரண்டும் கெட்ட நிலை ஒன்றும் சொல்ல முடியாத சஞ்சலத்துக்கு ஆளாகிறான் .ஆனால் இந்த விஷயத்தில் தேவிகா ஒரு தீர்மானமான முடிவு எடுத்து விட்டார் .தான் மருமநம் செய்து கொள்ளப் போவதில்லை என்று. அதனால் அவர் முகத்தில் ஒரு அசாத்தியமான நம்பிக்கையும் துணிவும்,தெளிவும் இருக்கும். ஆகவே  அவருடைய எண்ணம் இனி மாறப்போவதில்லை .அவர் சஞ்சலத்திற்கு ஆட்பட போவதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மனம் தள்ளாடாது. ம மனம் தள்ளாட தள்ளாட சந்தேகங்களும் குழப்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கும் ஒரு இருட்டில் ஒரு பேய் நிற்கிறது என்றால், நமக்கு தெரியும் காலையில் பார்த்தோம் அங்கு ஒன்றும் பேய் இல்லை ஆனால் இரவில் மட்டும் எப்படி அங்க பேய் வந்து சேரும். அந்த இடத்தில் பேய் கிடையாது நிச்சயமாக , என்று நாம் உறுதியாக நம்பினால் அந்த இடத்தை கடக்க முடியும். நம்மால் ஒருவேளை பேய் இருக்குமோ அப்படி என்று மனம் சந்தேகித்து விட்டால் நமது எண்ணங்கள் எண்ணங்களும் தடைபடும் .ஆகவே எல்லாவற்றிற்கும் உறுதி இல்லாத மனமே காரணம் .கீதையில் கூட கண்ணன் ,மனம் சஞ்சலப்படும்போது எப்படி இருக்கும் என்றால் கடலில் மாட்டிய மரக்கலத்தை அலைகள் என்ற சஞ்சலம் ஆட்டிவைத்து அழித்துவிடும் சரியான நங்கூரம் இல்லாவிட்டால் . ஆகவே அர்ஜுனா நீ உறுதியான ஒரு முடிவு எடுக்க வேண்டும். உன் எதிரில் நிற்பவர்கள் உனது சொந்தக்காரர்கள் அல்ல. உணவு விரோதிகள் என்ற எண்ணம் வர வேண்டும். உனக்கு எதிரில் இருப்பவர்கள் போரில் உனக்கு தீமை செய்பவர்கள். ஆகவே இங்கே தீமையை எதிர்த்து நீ போராட வேண்டும். இந்த எண்ணம் உனக்கு உறுதியாக வர வேண்டும். அப்படி வந்தால் உன் மனது சஞ்சலப்படாது. எதிரில் இருப்பவனை வெட்டி வீழ்த்த வேண்டும் என்று ஒரே எண்ணம் மட்டுமே உனக்கு வேண்டும் .அப்படி இல்லாத பட்சத்தில் நீ எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் கோழையாக மாறிவிடுவாய் உறுதியான எண்ணம் வேண்டும் உறுதியான எண்ணம் வந்துவிட்டால் உனது மனது சஞ்சலப்படாது எதையும் வெற்றி கொள்ளலாம் எதையும் பிறகு

Comments

  1. என்னய மாதிரி நிறைய பேரு வ்ந்ததை வரவில் வைத்து, சென்றதை செலவில் வைத்து எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நீங்க ஒரு பார்த்த சாரதி. எப்படியோ வண்டிய ஓட்டுறீங்க. பாதி புரியுது, மீதி புரியலை... உடுங்க சார் எங்களை .......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63