Facebook. கதிர்44

நண்பர் வி. சந்திரசேகரன் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி எனது ஒரு ப்ரொபைல் பிக்சரையும் வைத்து விட்டார். .ஆரம்ப காலத்தில் எப்படி போஸ்ட் போடுவது என்று சொல்லிக் கொடுத்தார். முதலில் இயற்கை காட்சிகளை ஷேர் பண்ணுவதாக இருந்தேன். கொஞ்ச நாள் தொடர்ந்தது அதன் மூலம் நண்பர்கள் கிடைத்தார்கள். கொஞ்ச காலம் கழித்து அவர்கள் போஸ்ட் போடுவதை பார்த்து அதை போல் போஸ்ட் போடக் கற்றுக் கொண்டேன். பேஸ்புக் அருமையான் கனெக்டர். இதன் மூலம் நண்பர்கள் தனது எண்ணங்களை , தமது ஊர் செய்திகளை சொல்லி பரிமாறி கொள்வது. இதன் மூலம் நல்ல நட்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு சில நட்புகள் அபூர்வமாக கூட கிடைக்கும் இதையெல்லாம் தாண்டி கொஞ்ச காலம் கழித்து அவர்கள் வீட்டு நல்லது கெட்டது கூட நம்ம அழைக்கும் சூழ்நிலை கூட உருவாகுதுண்டு. பேஸ்புக்கில் நண்பர்களா என்று ஆச்சரியப்படலாம். எனக்கு பேஸ்புக்கில் தொடர்ந்து நண்பர்கள் மட்டுமல்ல ஒரு நண்பர்கள் குழுவே கிடைத்தது. இரு நண்பர்கள் சேர்ந்து என்னை இந்த குழுவுக்கு அழைத்துச் சென்று ஒரு கிட்டத்தட்ட முப்பது பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு அறிமுகப்படுத்த இப்போது குழுவில் நான்  ஒரு அங்கத்தினர். அந்த அளவுக்கு நேசிக்கும் நண்பர்களும் ஃபேஸ்புக்கில் உண்டு. இது ஏதோ சும்மா வேடிக்கை பாக்குற விஷயம் மட்டும் இல்ல. இதுல பலவிஷயங்கள் அடங்கி இருக்கு. உலகத்தை தெரிந்து கொள்ளலாம். அதுபோல் எனது நண்பர் சந்திரசேகர் மூலமாக மதுரை அட்வகேட் பிரபு ராஜதுரை நண்பரானார் .அவர் போடும் போஸ்ட்கள் சற்று வித்தியாசமாக இருக்கும் ஒரு எழுத்தாளர் பாணியில் கூட இருக்கும் என்று சொல்லலாம் .நமக்கு இதுபோல எல்லாம் போட தெரியலையே அப்படி என்ன நினைத்த காலங்கள் உண்டு. ஏனென்றால் அவர்கள் சிலர் அடிப்படையில் தனக்குள்ள அறிவை வெளிப்படுத்துவதற்கான முக்கியமான சாதனமாகவும் இந்த facebook இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். தனக்கு தன்னால் முன்பு எழுத முடியாததை தற்போது நண்பர்கள் இடையே எழுதி பிரபலமாக்கிக் கொள்வதும் உண்டு .அந்த பிரபு ராஜதுரை போஸ்டில் நான் பார்த்தது ப்ரொபசர் சாம் ஜார்ஜ் அவரது நண்பராக இருந்த படியால் prof. போஸ்ட்கள் நான் அடிக்கடி பார்ப்பேன் .மிகவும் அறிவுபூர்வமாக இருக்கும் சமயத்தில் ஏதாவது ஏட்டிக்கு போட்டியும் பேசுவார் .உலகத்தை செய்திகளும் அள்ளி வீசுவார். சமயத்தில் அவர் போட்டோவோட போஸ்ட்கள் போடுவார். அப்ப அவரை பார்க்கும்போது இந்த வெளிநாட்டில் இருக்கிற நண்பர்கள் அவங்க போடுற இதுல ஒரு அரைக்கால் சட்ட போட்டுக்கிட்டு எப்படி ஒரு ஆங்கில பாணியில்தான் இருப்பார். சமயத்தில்  நேசிப்பதும் உண்டு .சில நேரங்களில் எரிச்சல் மூட்டவும் செய்வார் . அவர் கொஞ்ச காலம் கழித்து  பிளாக்கர் மூலம் எழுதியதை போட ஆரம்பித்தார். அப்போதுதான் எனக்கு பிளாக்கர் என்பது இதில் இருப்பதே எனக்கு தெரியும். பிளாகர் என்பது ஒரு தனியான ஒரு கூட்டமைப்பு அதில் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கான விமர்சனங்களும் சந்திக்க வேண்டி இருக்கும். இப்படி பிளாக்கரில் எழுதி மிகவும் புகழ் அடைந்தவர் சாம் ஜார்ஜ். படிப்பதற்கு இன்ட்ரஸ்ட் ஆக இருந்தது  அப்படின்னு சொல்லிட்டு அவரிடம் பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து நண்பரானேன். உண்மையிலேயே அறிவாளி தான். பிறகு அவர் பெரிய நாத்திகவாதி என்பதும் தெரியவந்தது .ஒரு கிறிஸ்தவர் இவ்வளவு பெரிய நாத்திகராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை  அவருடைய புகழ் மெல்ல மெல்ல எனக்கு தெரிய தொடங்கியது .புத்தகங்கள் எழுதுபவர் என்ற செய்தியை நான் அறிந்தேன் .பிறகு இவர் மீது ஒரு தனிப்பட்ட அபிமானமும் ஒரு மரியாதையும் வந்துவிட்டது .அவரை நான் போனில் கூட தொடர்பு கொள்வேன் .அப்போதே நிறைய விஷயங்கள் சொல்லுவார் அப்போதுதான் அவரது புலமை ஆங்கில புலமை அவருடைய அறிவார்ந்த கருத்துகள் எனக்கு புலப்பட்டது. அப்போது அவர் எழுதிய ஒரு புத்தகம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. அந்த புத்தகத்தை எனக்கும் அனுப்பி வைத்தார். நானும் படித்தேன் உண்மையிலேயே இதெல்லாம் எழுதறதுக்கு மகா துணிச்சல் வேணும் , பெரிய பெரிய ஆட்களே கை வைக்காத ஒரு சப்ஜெக்டை இவர் எடுத்து எழுதி அதை புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறார் .இவருக்கு  பலமான எதிர்ப்பும் வந்திருக்கிறது அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அஞ்சா நெஞ்சனாக சிங்கம் போல் இருந்தது கண்டு ஆச்சரியமடைந்தேன். ஒரு நாத்திக குடும்பத்திலேயே பிறந்து நாத்திககுடும்பத்திலேயே வளர்ந்து கடவுள் என்றால் என்னவென்று  அறியாத குடும்பத்தில் வந்த நாங்கள் கூட இது போல புத்தகம் எழுத வேண்டும் என்ற யோசனை வராத காலத்தில் ஒரு ஆன்மீகமான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவருக்கு எப்படி வந்தது. அட நாம் செய்ய தவறியதை  அவர் செய்திருக்கிறார் .அதனால் இவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் அது எப்படி நிறைவேற்றுவது. இவர் எழுத்தாளர் என்ற அளவில் தான்  அறியப்பட்டாரே தவிர வெளியிலறியப்படவில்லை.  ஆகவே நம்மால் முடிந்தது இவரை ஒரு பக்க பலத்தோடு ஒரு லைம் லைட்டுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அப்போது நான் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நானும் ஓய்வில் இருந்த காரணத்தால் இதை என்னால் நிறைவேற்ற முடியுமா என்று யோசித்தேன் .ஒரு காரியத்தை எடுத்து செய்ய வேண்டும் என்றால் அதற்கு நமது உடல் நலனும் ஒத்துக்கொள்ள வேண்டும். இதுவரை யாரையும் சந்திக்காத நான் சாம் ஜார்ஜுக்காக அவருடைய முயற்சியை வெற்றி பெற வேண்டி அவரை எப்படியாவது ஒரு வலுவான பின்னணிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். அதன் எதிரொலியாக திராவிட கழகத்தில் இவருக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தியுடலாம் இதுபோல  சப்ஜெக்டர்களுக்கு அவர்கள் தான் துணை நிற்பார்கள் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது .அதற்காக நான் கிட்டத்தட்ட ஒரு 50 பேரை ஆவது போனில் நான் காண்டாக்ட் செய்து இருப்பேன். போனில் எல்லாரையும் பிடித்தேன். அவர்கள் எல்லாரிடமும் பேசி மெல்ல அவரை எங்கள் வீட்டு திருமணம் ஒன்று கி. வீரமணி தலைமையில் சென்னையில் பெரியார் திடலில் நடந்தது அப்போது ப்ரொபசரை அங்கு அழைத்து அந்த மேடையில் ஏற்றி விட்டேன் எப்படியோ. அப்போது கண்டிஷன் வந்து யாரும் பேச வேண்டாம் தலைவர் வந்து தாலி எடுத்துக் கொடுத்து அதோட முடிந்து விடும் .ஆனால் புரபசரை அங்கு ஐந்துநிமிடம் பேசுவதற்கு  அனுமதித்தார்கள். இதுதான் என்னால் செய்யக்கூடிய காரியம்  உண்மையிலேயே அதற்கு ஒரு பலன் கிடைத்தது புரொபசரின் பேச்சுத்திறமையை கேட்ட தலைவர் அவர்கள் அவரை ஒரு இரண்டு மாதம் கழித்து திருச்சியில் நடைபெறும் இன்டர்நேஷனல் atheist conferenceக்கு திராவிட கழகத்தின் சார்பாக பேராசிரியரை அனுப்பி வைத்தார்கள். பேராசிரியரும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது திறமையைக்காட்டி ஓரளவுக்கு வெளியில் ஓரளவுக்கு புகழ் அடைந்தார். இவ்வளவுதான் அவருக்கு என்னால் செய்ய முடிந்தது இதுபோல் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போல் நல்ல நண்பர்களும் கிடைப்பது உண்டு. இன்றுவரை ப்ரொ. சாம் ஜார்ஜ் தான் எனக்கு குரு ,friend,philosopher guide நான் பேஸ்புக்கில் ஏதாவது எழுத சொல்லி தூண்டுபவர். என் குருநாதர் அவரே. அதனால் பேஸ்புக்கில் நாம் நல்ல முத்துக்களையும் கண்டெடுக்கலாம் அதற்கு உதாரணம் எனக்கு கிடைத்த நண்பர் prof. Sam George அவர்கள்.பிறகு

Comments

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63