ஈசிசேர்.ஒளிக்கதிர் 49A
சென்ற மாதம் எனது தங்கையின் கணவர் திரு ஜெயபால் அவர்கள் இறந்து விட்டார்கள். அதற்கு துக்கத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு துக்க காரியங்கள் அந்த தெரு முறைப்படி எல்லாம் பக்காவாக நடந்தது .சம்பிரதாயங்கள் சடங்குகள் எல்லாம் எதையும் விட்டு வைக்காமல் எதை எல்லாவற்றையும் கட்சிதமாக செய்து முடித்தார்கள். நேரம் தான் இரண்டு மணி நேரம் ஆனது. அப்படி எல்லாம் முடிந்த பிறகு யார் கொள்ளி வைப்பது என்ற கேள்வி வந்த பிறகு அவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள் .அவரது மகன் முன்பே இறந்து விட்டார். அவருக்கு ஒரு பையன் இருக்கிறார், அதாவது பேரன் .பேரன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று முடிவானது .ஆனால் அந்த பேரன் தீர்க்கமாக சொல்லிவிட்டான் , நான் காலேஜ் செல்வதால் கொல்லி வைப்பதற்கு முன் மொட்டை அடித்துக் கொள்ள மாட்டேன் மேலும் இதன்பிறகு தொடரும் சம்பவங்கள் அனைத்தையும் இன்றே முடித்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டான். ஆனால் கடைசி காலத்தில் அவரது அப்பா அதாவது எனது தங்கையின் கணவர் தனது இரண்டாவது பெண் வீட்டில் இருந்தார். அந்த இரண்டாவது பெண் தான் அவரை முழுவதுமாக இரண்டு மூன்று வருடங்களாக கவனித்து வந்தார். ஆகவே அவர் எடுத்த முடிவு யாரும் கொள்ளி வைக்க வேண்டாம் நானே சொல்லி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டார் .ஆனால் வைதீக சம்பிரதாயங்களில் ஈடுபட்ட ஒருவர் அதுவும் ஒரு பெண், கொள்ளி வைப்பதா என்று லேசாக முணுமுணுத்தார்கள். ஆனால் அந்த பெண் தைரியமாக சுடுகாடு வரை வந்து விட்டார் . சுடுகாட்டுக்கு வந்து எல்லா சாங்கியங்களும் செய்து அந்த பெண்ணே கொள்ளி வைத்தார் .இது உண்மையிலேயே எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக பெண்கள் எங்கள் வீடுகளிலும் பெரும்பாலும் சுடுகாட்டுக்கு வர மாட்டார்கள். நாங்கள் திக காரர்கள் என்பதனால் எங்கள் வீட்டில் கூட யோசிப்பார்கள். ஆனால் இந்த பெண் துணிச்சலாக சுடுகாடு வரை வந்தது மட்டுமல்ல தன் தகப்பனாருக்கு தானே கொல்லியும் வைத்தார். அதே மாதிரி அந்த சடங்குகளிலும் எல்லாவற்றிலும் பங்கு கொண்டார். இப்படித்தான் பெண்கள் ஒருவரும் இருக்க வேண்டும் .துணிச்சலாகவும் யார் கையும் எதிர்பார்க்காமலும் சுயமரியாதையோடும் இருந்தால் எல்லா பெண்களுக்குமே நல்ல ஒரு வழி கிடைக்கும். அடுத்தவர்களின் நம்பியே வாழ்வது என்பது பெண்களின் இயல்பு ஆனால் எதற்கும் துணிந்து அவரது தனது தகப்பனாருக்கு அவரே கொல்லி வைத்த விதம் எனது சிந்தையைக் கவர்ந்தது. ஆகவே நான் பார்த்த எங்கள் வீட்டு பெண்களில் எனது அக்கா மகள் ஆனந்தி ஒரு வீர மங்கையாகவே என் கண் முன் தெரிகிறார்
Comments
Post a Comment