ஒளிக்கதிர்50 இந்தியதேர்தல் 2024

இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. ஆட்சியில் இருக்கும் பிஜேபி மோடி ஒரு கூட்டணியாகவும் ராகுல் காந்தி தலைமையில் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டனர். இதில் மோடி கூட்டணிக்கு 292 இடங்களும், ராகுல் காந்தி கூட்டணிக்கு 232 இடங்களும் கிடைத்தன. ஆகவே 370 இடங்கள் பெற்று தனிப்பெரும்பான்மை அமைத்து ஆட்சி செய்யலாம் என்ற பிஜேபியின் கனவு தகர்ந்தது. ஒருவேளை அப்படி வைத்திருந்தால் மோடி இன்னேரம் இந்தியாவின் சர்வாதிகாரியாக ஆகி இருப்பார். அவர்கள் நினைத்ததை செய்ய முடியும். ஏனென்றால் அந்த பெரும்பான்மை இல்லாமல் இருக்கும்போதே அவர்கள் ஆடாத ஆட்டம் ஆடினார்கள். இப்போது கேட்கவே வேண்டாம் .ஆகவே 242 சீட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்கள் ஆட்சி அமைக்க முடியாது. ஆகவே ஏற்கனவே ராகுல் காந்தி கூட்டணியிலிருந்து பிரிந்த பீகாரின் நிதிஷ்குமாரும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் அவர்கள் கையில் ஒரு 40 சீட்டு இருந்ததால் அவர்களோடு இணைந்து வரும் எட்டாம் தேதி ஆட்சி அமைக்கிறார்கள். இதில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு என்ன சந்தோஷம் என்றால் இனி பிஜேபி தான் நினைத்ததை செய்ய முடியாது. ஒவ்வொரு காரியத்திற்கும் அவர்கள் கூட்டணி கட்சிகளை சம்மதத்தை கேட்க வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறும். இதைபி.ஜெ.பி விரும்ப மாட்டார்கள்.  ஏனென்றால் அவர்களுக்கு ஆட்சி தான் முக்கியம். கூட்டணி கட்சிகளின் விருப்பப்படியே இனி ஆட்சி நடக்கும். தான் நினைத்ததை செய்ய முடியாது எதிர்க்கட்சிகள் செய்ய நினைத்ததை இனி ஆளுங்கட்சியில் உள்ள நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடு மூலம் காரியங்களை செய்யலாம். ஆகவே இப்போது இந்தியாவில் ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் மக்கள். இரண்டாவது மோடி , தான் சாதாரணமாக பிறந்தவர்கள் அல்ல தான் ஒரு கடவுளின் அவதாரம் என்று சொன்னது
.இப்போது அவருடைய மேக்கப் கலைந்தது .இப்போது அதிகாரம் இல்லாத, அரிதாரம் பூசாத கடவுளாக அலைகிறார். முகம் வெளுத்து விட்டது .அவருடைய பொய்கள் ஜனங்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது .அவர் அயோத்தியில் ராமர் கோயிலை தான் தான் கட்டியது போல மக்களிடமே சொல்லி வந்தார். அந்த கோவிலுக்கு ராஜா , ராமர் அல்ல மோடி தான் என்ற சொல்லி வந்த பொய்யை ஜனங்கள் ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக அந்த ராமர் கோயிலை சுற்றியுள்ள ஐந்து தொகுதிகளிலும் மோடி கட்சியை தோற்றுப் போய்விட்டது .ஆகவே தான் இந்தியாவிலேயே வலிமை மிக்க மனிதர் என்ற பிம்பம் கலைந்தது. இனியாவது அவர் இந்த சர்வாதிகா தன்மையை விட்டு சாதாரண மனிதராக இறங்கி வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள் இந்திய மக்கள். மேலும் இவர் பிரைம் மினிஸ்டர் கேர்ஸ் பண்ட்  இன்று ஒரு தனியாக அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதை யாரும் செக் பண்ணி விடாத வகையில் தனியா வைத்திருக்கிறார். அதனுடைய வரவு செலவுகள் இனி என்ன என்பதை கூட்டணி கட்சிகள் கேட்பார்கள். மேலும் இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உட்பட எல்லா நீதிபதிகளையும் மிரட்டி அல்லது வேறு வகையில் அவர்களுக்கு ஊக்குவித்து தனக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்து வைத்திருந்தது இனி நடக்காது. இனி நீதிமன்றங்கள் சுதந்திரமாக இயங்கும் .அது மட்டுமல்லாமல் இவர் ராணுவத்தையும தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மேலும்  மக்களுக்கு பிடிக்காத விஷயங்களை  அவர்களிடம் திணிப்பது மோடியின் வேலை. இவை எல்லாம் இனி குறையும் இப்போது இந்தியாவில் ஜனநாயகம் மீண்டும் தழைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய மக்கள் இருக்கிறோம் .மீண்டும்

Comments

  1. காத்திருக்கும் இந்தியமக்கள்

    ReplyDelete
  2. கிடைத்ததா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63