வெளிச்சம்பரவட்டும் ஈசி சேர் பகுதி.53

இந்தியில் வந்த அனார்கலி படத்தை யூடியூபில் பார்த்தேன் .அதில்  அனார்கலி ஆக நடித்த பினாராய் சலீம் ஆக நடித்தவர் பிரதீப் குமார். போருக்கு வந்த இடத்தில் சிப்பாய் என நினைத்து அக்பரின் மகனை காதலிக்கிறார் அனார்கலி.இருவரும் பூங்காவில் சந்திக்கும்போது இவளது இனிமையான பாடலைக் கேட்ட அக்பர் அந்த இடத்துக்கு வந்து அவருடைய பாடலை ரசிக்கிறார். அக்பர் யார் என்று தெரியாமலே அவருடன் விளையாட்டு தனமாக பேசுகிறார் அனார்கலி. சலீம் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடுகிறார். இந்தப் பாட்டு யாருக்காக நீ பாடுகிறாய் என்று அக்பர் கேட்கும் போது எனது காதலனுக்காக நான் பாடுகிறேன் என்று அவர் பதில் சொல்கிறார். அப்போது உன் காதலன் எப்படி இருப்பான் நீ அவனை நேசிக்கிறாயா எந்த அளவுக்கு அவனை நேசிக்கிறாய் அவனைப் பற்றி நீ எதுவும் சொல்ல முடியுமா என்று அக்பரும் அவருடன் உரையாடுகிறார். அக்பர் வந்தது தெரிந்து சலீம் அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறான் .எங்கே உனது காதலனை வரச்சொல் பார்ப்போம் என்று அவர் கேட்க உடனே ஒரு பாடலை பாடி அக்பர் கண் முன் நிறுத்துகிறார் .ஆனால் அவன் ஒரு முகமூடியை போட்டுக் கொண்டிருப்பதால் தனது மகன் என்று தெரியவில்லை அக்பருக்கு. சிறிது காலம் கழித்து சலீம் அனார்கலி காதல் தீவிரமாகிறது இதை மந்திரி மான்சிங் கடுமையாக எதிர்க்க மகாராஜாவுக்கு தெரிந்தால் உன் தலை போய்விடும் என்று எச்சரிக்கிறார். ஒரு வழியாக சலீம் அரண்மனைக்கு திரும்பி விடுகிறான். அதன் பிறகு அனார்கலியின் நினைவாகவே இருந்த சலீம், கடுமையான காய்ச்சலில் விழுந்து விடுகிறான். இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வைத்தியர்கள் கைவிரிக்க அப்போது மந்திரி ஆனவர் சொல்கிறார் இதுபோல் அனார்கலி என்பவரின் பாடல் தெய்வீகமானது அவளை விட்டு ஒரு கானம் இசைக்கு சொல்லலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார் .அதன்பிறகு அனார்கலி கிராமத்தில் இருந்து கொண்டு வந்து சலீம் முன் பாட வைக்கிறார்கள் .அவள் தனது காதலனை நினைத்து காணாமே என்று உருகி பாடும் பாடல் அவனது உயிரை காப்பாற்றி விடுகிறது. அப்போது அருகில் சென்று சலீமை பார்க்கச் சொல்ல அவள் அவனைப் பார்த்தவுடன் திகைத்து விடுகிறாள். ஒரு மகாராஜாவின் மகன் ஒரு சிப்பாய் என்று சொல்லி நம்மை ஏமாற்றி ஏமாற்றி விட்டானே என்ற வருத்தம். அதன் பிறகு அவள்  அடையும் கலக்கம், இதெல்லாம் நடக்கக் கூடியதா என்ற கவலை அவரது ஏக்கம், அவ்வளவு உணர்ச்சிகளையும் அந்த நடிகை பினராய் இவ்வளவு துல்லியமாகவும் பார்ப்போர் கண் கலங்கும் விதமாகவும் நடிப்பார் என்று நான் நினைக்கவே இல்லை .அருமையான நடிப்பு ஒவ்வொரு முறையும் அக்பர் அக்பர் தன்னிடம் அன்பாக பேசும் போதும் அவள் கலக்கமடைகிறாள். இது எங்கே போய் முடியும் என்று அவளுக்கே தெரியவில்லை. சிறந்த நாட்டிய தாரகையாக அரண்மனை நர்த்தகியாக அவளை நியமிக்கிறார். அக்பர். தினம் அவரது ஆடல் பாடல் நடக்கிறது .இதே நேரத்தில் சலீம் அனார்கலி காதலும் தொடர்கிறது இதை அறிந்த வில்லி அவளுக்கு ஒரு நடனத்தின் போது ஒரு போதை வஸ்து கலந்து கொடுக்க அனார்கலி தன் வயம் இழந்து,நடனத்தின்போது தனது காதலை சொல்ல போக அக்பர் வெகுண்டு எழுகிறார்.  உடனே அவளை பாதாளச்சிறையில் தள்ளி அவளது கை கால்களுக்கு விலங்கு போட்டு அவளை தனிமை சிறையில் அடைக்கப்படுகிறார். சபையில் .இதன்பிறகு மந்திரி சபை கூட்டப்படுகிறது .சிறையில் போட்டது தெரிந்த பிறகு மகன் சலீம் தனது தந்தை அக்பருடன் நேருக்கு நேர் மோதுகிறார் .தனியாக படையெடுத்து வந்து தன் தந்தையான அக்பரை எதிர்க்கிறார். தந்தையான அக்பர் தனி ஒரு மனிதனாக ஒரு யானையில் ஏறிக்கொண்டு மகனை எதிர்க்க வருகிறார். அப்போது அவர் அவனது அருமை பெருமைகளை சொல்லி இப்படிப்பட்ட உன் கையால் சாவது நல்லது என்று என்னை கொன்றுவிடு என்கிற ரீதியில் அக்பர் அவனிடம் பேச அவன் உள்ளம் இளக அரண்மனைக்கு திரும்புகிறார்கள். மந்திரி சபை கூடுகிறது மந்திரி சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட அனார்கலிக்கு உயிருடன் சமாதி என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் அக்பர் இதை ஏற்கவில்லை பின்பு எல்லோரும் கலந்து ஆலோசித்து அவளது தண்டனை உறுதி செய்கின்றனர்.அரசசபையில் விசாரண பதிவு செய்யப்படுகிறது. அப்போது அக்பர் இருவர் மீதும் தவறு இல்லை என்று இருவரையும் விடுதலை செய்து விடுகிறார் ஆனால் சதிகாரர்கள் இந்த விடுதலை செய்தி அனார்கலிக்கு எட்டும் முன் அவளுக்கு உயிருடன் கல்லறை கட்டி விடுகிறார்கள். இந்த செய்தியை சொல்வதற்கு ஓடோடி வந்த சலீம் அவருடைய சமாதியில் மோதி உயிர்த்துறக்கிறான். இதில் சில முக்கியமான அம்சங்கள் என்னவென்றால் இந்த காதல் உணர்வுகள் அப்படிப்பட்டதா.ரோஜா மணக்கும் என்று திரியும் நுகர்ந்து பார்த்த்தில்லை.அனார்கலி வேடத்திற்காகவே பிறந்தவரோ பினாராய் என்று காட்சிக்கு காட்சி தனது நடிப்பால் நிரூபிக்கிறார். கதாநாயகன் கூட இரண்டாம் பட்சம் தான். அக்பராக நடித்தவர் அனார்க்கலி மீது ஒரு பாசத்தோடு நடந்து கொள்வதும் வியப்பாக இருக்கும் .இந்த படம் 1953 இல் வெளி வந்தது .ஒரு ஏழையான அனார்கலி ஒரு ஏழை சிப்பாயை என்று நினைத்து காதல் செய்யும் போது அவருக்கு ஒரு  துள்ளல்,தைரியம் இருந்தது.அவன் ஒரு மகாராஜா பிள்ளை என்று தெரிந்த பிறகு அவள் நொறுங்கிப் போவது என்ன அழகாக படம் பிடித்து காட்டுகிறார் பினாராய் இதே படத்தை பிற்காலத்தில் நடிகை அஞ்சலிதேவி தமிழும் தெலுங்கிலும் தயாரித்து வெளியிட்டார் படம் நன்றாக இருக்கும் ஆனால் இந்த காட்சிகள் உணர்வுபூர்வமாக இல்லை. அதுவே இந்தி அனார்கலியின் வெற்றி.வாழ்க பினாராய்.

Comments

  1. அனார்கலியை விட கொட்டுக்காளி தான் பிடிக்குதுங்க, சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63