வெளிச்சம் பரவட்டும் ஈசி சேர் பகுதி 53 A
அனார்கலி படத்தின் இம்ப்ரூவ்ட் வெர்ஷன் தான் மொகலே ஆஜம் இந்த படம் 1961 இல் வந்தது. அனார்கலி அரண்மனைக்கு வந்த பிறகு நடக்கும் சம்பவங்களை பற்றி எடுத்த பிரமாண்டமான படம். இதற்கு இணையான படம் இந்த 60 ஆண்டுகளில் இதுவரை வந்ததில்லை. பிரம்மாண்டத்தை சொல்லி மாளாது படத்தின் பிரமிப்பூட்டம் இசையாகட்டும், அரண்மனை கள் ஆகட்டும், அக்பராக நடித்த பிரித்திவிராஜ் கபூர் கம்பீரமான நடிப்பாகட்டும், அவரது மகன் சலீமாக நடிக்கும் திலீப் குமாரும் அக்பரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் ஆகட்டும், மெய்மறக்கச்செய்யும் பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அனார்கலி ஆக மதுபாலா சலீமாக திலிப் குமார். முந்தைய படத்தை விட இதில் என்ன விசேஷம் என்றால் அனார்கலி ஆக நடித்த மதுபாலா .மதுபாலாவின் முகம் அவரது தோற்றம் அவரது நடிப்பு எல்லாமே அழகு .ஒரு காஷ்மீர் ரோஜாவே ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார். அவ்வளவு அழகு ஆனால் அந்த அழகு சந்தோசமாகவே அந்த படத்தில் காட்டப்படவில்லை. பெரும்பாலும் சோகத்திலேயே தான் இருப்பார். ரோஜா மலரில் கண்ணீர் துளிர்களா. அதுபோல் எப்போதும். அந்த முகம் வாடினாலும் அதிலும் ஒரு அழகு இருக்கும் மதுபாலாவின் முகத்தில் அவர் சலீமுடன் காதல் காட்சியின் நடிப்பதாக இருக்கட்டும் ,ஆடல் பாடல்களில் அருமையாக நடிப்பதில் ஆகட்டும் ,அக்பரின் மகனே தான் காதலிக்கிறோம் என்று தெரிந்த பிறகு அக்பரை பார்க்கும்போது பருந்தைக்கண்ட கோழி குஞ்சு போல் நடுங்குவதும் எல்லாமே, எல்லா இடத்திலுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சலீம் அனார்கலி காதல் தெரிந்தவுடன் அவரை தனி அறையில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். அக்பர் அனார்கலியை சிறையில் சந்திப்பார். ஒரு கடைசி சான்ஸ் அவருக்கு கொடுக்கிறார். அதாவது அவள் அரண்மனை நாட்டிய மண்டபத்தில் கொழுமண்டபத்தில் நாட்டியமாட வேண்டும் அப்போது தான் சலீமை காதலிக்கவில்லை என்று தனது பாடல் மூலம் உணர்த்த வேண்டும் ,அப்படி செய்தால் உனக்கு விடுதலை என்று சொல்லி விடுகிறார் .அது போல் கொலு மண்டபம் நிறைகிறது. கொலுமண்டபம்ன்னா அடடா அதன் பிரம்மிப்பை சொல்லி மாளாது. அது ஒரு கண்ணாடி மாளிகையில் எடுக்கப்பட்ட கொலு மண்டபம். இந்த படத்திற்காக அப்போது விளம்பரம் செய்து இருப்பார்கள் இந்த ஒரு காட்சிக்கு மாத்திரம் 125 லட்சம் ரூபாய் செலவு செய்தார்களாம். அப்படி என்று அந்த காலத்தில் போஸ்டர் ஒட்டி இருப்பார்கள். உண்மையிலேயே பிரமிக்கும் அளவுக்கு இருக்கும். அப்போது இதுவரையும் அக்பரைப் பார்த்து நடுங்கி வந்த அந்த மதுபாலா நாட்டியமாடும் போது அவருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிச்சல் வந்தது என்று தெரியாது, அது காதல் கொடுத்த வேகமா அது நேசத்தின் வெளிப்பாடா, காதலை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்பது போல் காதல் கொண்டாலே பயம் என்ன என்ற ரீதியில் ஒரு பாடலைப் பாடி அக்பரை கொலு மண்டபத்தில் நேருக்கு நேர் கேட்கிறாள் பாடலின் மூலமாக. சபையே திகைத்து விடும் .அக்பர் கொந்தளிப்பில் இருப்பார். சலீமுக்கு அப்போதுதான் அந்த உண்மை தெரிய வரும். இந்த காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அந்த கண்ணாடி மாளிகையை சுற்றி சுற்றி காட்டுவார்கள். வாழ்க்கையில் நாம் இனி ஒரு முறை பார்க்க கூட முடியாது .அதுபோல காட்சிகளைஇனிகாணமுடியாது. இது போல் ஒரு படத்தையும் நாம் பார்க்க முடியாது. இவ்வளவு பிரமாண்டங்களையும் மீறி ஒரு எளிமையான மதுபாலாவின் நடிப்பு பார்போரின் கண்களில் அருவி கொட்டும் அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் மதுபாலா. வாழ்க மதுபாலா
Comments
Post a Comment