வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர் 55

நானும் எவ்வளவோ ஹிந்தி படங்களை பார்த்திருக்கிறேன் அதிலும் குறிப்பாக ராஜூ கபூர் நர்கீஸ் நடித்த நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் உள்ள நெருக்கம் எல்லோராலும் பேசப்பட்டது. பெரும்பாலும் காதல் காவியங்களாகத்தான் இருக்கும் அவர்கள் இருவரும் நடித்த படங்கள். அப்படி இருவரும் ஒன்றிப்போய் நடிப்பார்கள் .ராஜ்கபூர் எவ்வளவு பெரிய ஆக்டரோ அது போல் நர்கீசும் அந்த காலத்தில் பெரிய நடிகை. பெரும்பாலும் இருவரும் நடிக்கும் படங்கள் நளினமாகவே இருக்கும் ராஜ்கபூரின் ஒரு வெகுளித்தனமான நடிப்புக்கு தனது புத்திசாலித்தனத்தால் ஈடு கொடுத்து நடிப்பது போல் இருக்கும் நர்கீஸ் நடிப்பு. அதாவது தமிழ்நாட்டில் சிவாஜி பத்மினி ஜோடியை போல ஒருங்கிணைப்பு இருக்கும். அப்படி நான் பார்த்த படங்களில் ஒரு படம் தான் மதர் இந்தியா. மதர் இந்தியா படத்தில் பிரம்மாண்டங்கள் இல்லை பெரும் பெரும் அரண்மனைகள் இல்லை செல்வ செழிப்பு இல்லை ஆனால் ஒரு தரிசாக கிடைக்கும் நிலத்திற்கு மருமகளாக குடிபெயர்க்கிறார் நர்கீஸ். அப்போது விவசாயியான கணவனை வைத்துக்கொண்டு மழையும் இல்லாத ஒரு பகுதியில் அவர் படும் கஷ்டங்களை தெளிவாக காட்டியுள்ளார்கள் மதர் இந்தியா ப படத்தில் நர்கீஸ் அவரது நடிப்பை என்னவென்று சொல்வது. மழை இல்லாமல் இருக்கும் போது  கணவனும் மனைவியும் சேர்ந்து அந்த நிலத்தை உழுவதும், தன்னந்தனியே கிணறு வெட்டுவதும் , கைகளை இழந்த தனது கணவனை விட்டுக் கொடுக்காமல் அவருக்கு போஷாக்கு செய்வதும், அதே போல் தனது பிள்ளைகளையும் அன்புடன் கவனித்துக் கொள்வதும், கடன் வாங்கி கட்ட முடியாமல் கடன்காரனிடம் அவதிப்படும்போதும்,  மழை பெய்யாத  ஊரில் மழை கொட்டி ஊரை காலி செய்வதும் அவர் விவசாயத்தை காலி பண்ணி தன்னை ஓட்டாண்டியாகி போன நிலைமையிலும், இந்த குடும்ப சூழ்நிலை பொறுக்க முடியாமல் தனது கணவன் வீட்டை விட்டு ஓடிப்போன அந்த நேரத்திலும் மனம் தளராமல் மேற்கொண்டு மேற்கொண்டு முயற்சி செய்து அந்த குடும்பத்தை அந்த படத்தை அவர் ஒருவர் தனியே ஒருத்தியின் முயற்சியால் நகர்த்தி இருக்கிறார்கள். நான் சொல்லும் விவரிக்கும் இந்த காட்சிகளில் அவர் நடிக்கும் நடிப்பு  அலாதியானது . நாம் யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது .ஒரு கட்டத்தில் இரண்டு மாடுகளில் ஒரு மாடு இறந்து போய்விடும். அந்த இடத்தில் அவர் ஒரு மாடாக நின்று அந்த நிலத்தை உழும்போது,  இழுக்க முடியாமல் அந்த பாரத்தை  அவர் முகத்தில் காட்டும் அந்த 1008 உணர்ச்சிகள் ஒரு பெரிய கடுமையான ஆண் உழைப்பாளி கூட தனது  காட்ட முடியாது. அப்படிப்பட்ட ஒரு நடிப்பு. இந்த படத்தில் வேற  பெரிய பெரிய நடிகர்கள் நடித்திருந்த போதிலும் இதில் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு செய்தது நர்கீஸ் தான் அல்லது நர்கீஸ்காகவே எடுக்கப்பட்ட படமும் என்று கூட தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல தான் அடகு வைத்த நகையை தனது ஒரு மகன் திருடிக் கொண்டு வரும்போது அவனை அடிப்பதில் ஆகட்டும், பசி பசி என்று கதறும் போது அன்னியர் ஒருவரால் கொடுக்கப்பட்ட உணவை தனது மகன் வாங்கி விட்டானே என்ற ஆத்திரத்தில் சேற்றில் இருக்கும் கிழங்குகளை தோண்டி வந்து அதை சுட்டு தன் பிள்ளைகளுக்கு ஊட்டுவதாகட்டும் அடடா வறுமையின் கொடுமையை இதற்குமேல் யாரும் சொல்லமுடியாது. யார் வேண்டுமானாலும் பேசிவிடலாம் எழுதிவிடலாம். அதை  தனது நடிப்பில் கொண்டு ஒரு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல மெய்சிலிர்க்க வைக்கிறார் நர்கீஸ். படமே அவரால்தான் நகர்த்தப்படுகிறது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் தனது ஒரு மகன் திருடன் ஆகி விட்டான் அதிலும் ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு போகிறான் என்று தெரிந்த பிறகு அவனை துப்பாக்கி முனையில் சந்தித்து அவனை சுட்டு வீழ்த்தும் போதும் மதர் இந்தியா என்ற பட்டத்துக்கு தகுதியானவராய் திகழ்வார் .இந்த படத்தை பற்றி எவ்வளவோ சொல்லலாம் ஆனால் இவரைப்போல் வேறு யாரும் நடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. நல்லவேளை இந்த படத்தை தமிழில் டப் செய்யாமல் இருந்தார்கள். இந்த படத்தை பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்லலாம் அபூர்வமான நடிப்பு.மதர் இந்தியா நர்கீஸ் வாழ்க

Comments

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63