வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர் பகுதி 58
1920 களில் இந்த பெயரை கேட்டாலே பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனம் அத்தகைய பெருமைக்குரியவர். புதுக்கோட்டையில் பிறந்து புதுக்கோட்டை சமஸ்தான முதல் பட்டதாரி ஆகி பின்பு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர் என்ற பட்டம் பெற்றவர் .மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரானார் .அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். அப்போது இருந்தே அவருக்கு பெண் உரிமைகளிலும் அவர்கள் முன்னேற்றத்திலும் அதிகமான நாட்டம் இருந்தது. மேற்படிப்புக்காக லண்டன் சென்றபோது டாக்டர் ரெட்டி அவரை சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார் .அப்போது அவர் போட்ட கண்டிஷன்கள் ஆணும் பெண்ணும் சமம் ,பெண்ணின் உரிமையில் நீங்கள் தலையிட கூடாது, ஆணுக்குரிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும், இதற்கு உடன் பட்டால் மட்டுமே திருமணம் என்ற கண்டிசனோடு திருமணம் நடைபெற்றது. பின்பு அவரது பொது வாழ்க்கையை தொடர்ந்தது .பெண் உரிமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். விதவைகள், ஆதரவற்றோர் ,அனாதைகள் ஆகியோர்களுக்கு தகுந்த முறையில் பாதுகாத்து பராமரிக்க அவ்வை இல்லம் என்று துவங்கினார். அது இன்று ஆலமரமாய் வளர்ந்து இருக்கிறது .எந்த விஷயத்திலும் தனக்கென எதையும் விரும்பாமல் சமூக சேவை ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து வந்தார். இதனால் காந்தியின் அன்பை பெற்றார். ஏராளமான அனாதை இல்லங்கள் தோன்றியது. பெண்கள் பற்றிய எந்த விஷயமாக இருந்தாலும் இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளில் உலக அரங்குகளில் இவரது பேச்சு ஒலித்தது .இப்படிப்பட்ட பெண்ணின் பெருமைக்குரியவர் டாக்டர் .இவரது சேவையை கண்ட அப்போது இந்த நீதிக்கட்சியின் சார்பாக இவருக்கு மேலவை அங்கத்தினர் பதவி கிடைத்தது .சிறந்த பேச்சாளர் எதையும் போராட வேண்டும் என்று விருப்பம் உள்ளவர். மக்கள் புற்றுநோய் வந்து மரணமடைந்தது கண்ட அம்மையார் லண்டன் சென்று இதற்கான முறையாக கற்று அதன் பிறகு அடையாறு புற்றுநோய் இல்லத்தை இவர் துவங்கினார். இன்று இந்தியாவிலேயே மிகப்பெரும் புற்றுநோய் ஆஸ்பத்திரியாக திகழ்கிறது. இவ்வளவு உள்ள பெருமை வாய்ந்தவர் அம்மையார் .இவரது சேவையை பாராட்டி இந்தியா இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. எத்தனை கட்சிகள் தங்களுடைய இயக்கத்தில் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த போதும் எல்லாவற்றையும் அன்புடன் மறுத்து விட்டார் .சமூக சேவை ஒன்றே குறிக்கோள். அதிலும் குறிப்பாக விதவைகள்,அனாதைகள் அவர்களுக்கு மறுவாழ்வு இது போன்ற செயல்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். பெண்ணுரிமை பெண்களுக்கான பாதுகாப்பு இவை ஒன்றே வாழ்நாளில் குறிக்கோளாக இருந்தார் .குழந்தை திருமண ஒழிப்பு கொண்டுவந்தார். மேலவையில் அங்கத்தினராக இருந்த போது தான் தேவதாசிகள் படும் அவதியை கண்டு பணக்கார,மிட்டா மிராசுகளின் ஆதிக்கத்தை கண்டு மனம் வெறுத்து, அவர்களுக்கு ஒரு நல்வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டம் என்று ஒரு தனி நபர் மசோதா கொண்டு வந்தார் .அதனை அப்போது இருந்த சத்தியமூர்த்தி ஐயர் மற்றும் சில பார்ப்பனர்கள் சேர்ந்து இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். தேவதாசிகள் இறைவனுக்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்களது சேவை இறைவனுக்கு தேவை .ஆகவே தேவதாசிகளை ஒழிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கடுமையாக வாதாடினார் .பிறகு அம்மையார் தந்தை பெரியாரை நாட அவர் ஒரு யோசனை சொன்னார். அதாவது இனி இந்த பிரச்சனை வரும்போது நாங்கள் வேண்டிய அளவுக்கு சேவை செய்து விட்டோம் ஆகவே இனி இறைவனுக்கு சேவை என்றால் உங்கள் வீட்டுப் பெண்களை வைத்து சேவை செய்யுங்கள் என்று சொல்லச் சொல்ல ,அது போல் விவாதத்தில் சத்தியமூர்த்தி ஐயரை நேருக்கு நேர் கேள்வி கேட்டார் அம்மையார். இந்த வார்த்தையை சொல்லிவிட்டு உங்கள் வீட்டுப் பெண்களை அனுமதிப்பீர்களா , அனுமதியுங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல சட்டம் நிறைவேறியது.வாயடைத்து போனார்கள் பார்ப்பனர்கள். ஆனால் சட்டசபையில் சட்டமாக் நிறைவேற்ற முடியாமல் இன்றைக்கு இருப்பது போலவே அன்றைக்கும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஆளுநர் கையெழுத்திடாமல் மறுக்கப்பட்டது .அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு ஓமந்தூரார் ஆட்சியில் தான் தேவதாசிகள் ஒழிப்பு சட்டம் நிறைவேறியது. அத்தகைய பெருமைக்கு உரிய முத்துலட்சுமி ரெட்டியார் இந்தியாவின் பெருமைக்குரிய பதவிகளை அலங்கரித்தவர். அம்மையாரின் புகழ் காலம் காலமாக நிலைக்கும் அம்மையாரின் புகழ் ஓங்குக.
அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டிருந்த செய்திகளைத் தொகுத்து வழங்கியமைக்குப் பாராட்டுகள். "ஆடு" கையெழுத்து போடவில்லை என்பது புதுச் செய்தியாக இருந்தது. "ஆட்டுத் தொல்லைகள்" நிரந்தரமாகிப் போச்சே ... என்ன தான் செய்வதய்யா ...?
ReplyDelete