வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர், 59
1950 முதல் 80 வரை தமிழகமெங்கும் பரவி கிடந்த மந்திரச்சொல். எம்ஜிஆர் சினிமா உலகத்தின் வரலாற்றிலேயே சாதனை புரிந்த மன்னர் . சினிமாவில் கொடிகட்டி பறந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு சினிமாவில் நடிப்பு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை .ஆனாலும் படிப்படியாக முன்னேறினார். அதே நேரத்தில் அவர் ஒரு சுயமரியாதைக்காரர் என்பதால் யாரிடமும் போய் அவர் அடிமை யாக இல்லை .மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்கள் கெடுடபிடியானவர் அவருடைய படத்தில் சர்வாதிகாரி என்ற படத்தில் அவர் ஒப்பந்தமானார். அந்த படத்தில் அவர் சர்வாதிகாரியை எதிர்த்து போராடும் தளபதியாக நடித்திருப்பார். படம் பிரமாதமாக இருக்கும் .பெரிய நடிகர்கள் அதில் இவர் எதிரிகளை எதிர்த்து கத்தி சண்டை போடும் காட்சிகள் அருமையாக இருக்கும். தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம்.ஓயாது. ந அவ்வளவு அற்புதமாக கத்தி சண்டை போடுவார் .இதற்க்கு பின் வந்த மந்திரி குமாரி படத்தில் கலைஞரின் கதை வசனம் எழுத இவர் நடித்தார் அந்தப் படத்திலும் செய்யாத குற்றத்திற்காக ராஜ தண்டனை அடையும்போது அவர் கோர்ட்டில் பேசும் வசனம் கணீரென்று இருக்கும். அவர் பிறகு தனக்கு அரசியல் அரசியல் ஈடுபாடு உண்டு என்பதை தன் படஙதாகளில் இடம்பெற செய்தார். அதனால் அன்று வேகமாக வளர்ந்து வந்த அண்ணாவின் தலைமையில் உருவான தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார் .திமுகவின் ரசிகர்களும் இவருக்கு சேர இவர் புகழ் ஓங்க தொடங்கியது. 1955 இல் வந்த மதுரை வீரன் படம் இவருக்கு எல்லா புகழையும் ஈட்டி கொடுத்தது. இவருடைய ரசிகர்களும் திமுகவின் உள்ள கட்சிக்காரர்களும் சேர எம் ஜி ஆர் மாக்ளிடம் ஒரு இடத்தை பிடித்து விட்டார். இப்படியே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் .அவரே ஒரு படத்தை டைரக்ட் செய்தார்.அந்த படம் தான் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஒரு வருட காலம் ஓடி மிகப் பெரும் செல்வத்தையும் பொருளையும் புகழையும் வாரி வழங்கிய நாடோடி மன்னன் படம். அந்த படத்தை அவரே டைரக்ட் செய்து அவரே தயாரித்து அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் .அந்த ரெட்டைவேட நடிப்பில் காட்சியும் அவருடைய அபாரமான கத்திச்சண்டை வீச்சும் மிகவும் பிரம்மிக்கத்தக்கவையா இருக்கும் .அந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு ஒரு தனித்தீவில் எடுத்திருப்பார்கள் கலரில். கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் படு பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இவர் நாடோடியாக இருந்து மன்னனாக மாறிய பிறகு அரச சபையில் ஒரு நடக்கும் கூட்டத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை விவரிப்பார். அந்த அவருடைய திட்டங்கள் முழுவதும் சோசியலிச பாணியிலேயே அமைந்திருக்கும் இவை எல்லாம் சினிமா என்று யாருமே நினைக்கவில்லை .அதே நேரத்தில் இவர் 19 77 க்கு பிறகு அதேபோல் இவர் ஆட்சிக்கு வந்து முதலமைச்சரான பிறகு நாடோடி மன்னன் படத்தில் தான் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்வேன் என்று சொன்னாரோ அத்தனையும் செய்தார். வருங்காலத்தை உணர்ந்தே இவர் படங்களை நடிக்க தொடங்கி விட்டார் 1956க்கு பிறகு இவர் படம் செலக்ட் செய்யும் விதம் அத்தனையும் இவரது கைவண்ணம் இருக்கும். மிகவும் திறமையானவர் நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு பல வெற்றி படங்கள் குறிப்பாக 1965 இல் வந்த எங்க வீட்டுப் பிள்ளை பிறகு நம் நாடு உலகம் சுற்றும் வாலிபன் என்று பல படங்களில் நடித்து தனது தனித்திறமையை தக்க வைத்துக் கொண்டார். திமுக எம்எல்ஏ ஆகவும் ஆனார் .பிறகு திமுகவில் அவருக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் திமுகவை விட்டு வெளியேறி அண்ணா திமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். தனி ஒரு மனிதனாக .அப்பொழுது மக்கள் பேராதரவு கொடுத்தனர். உடனே வந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் வீழ்த்தி அபார சாதனை புரிந்தார் .அப்படி அவர் அரசியலலிலும் கால் வைத்து விட்டார். ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் ஆகிவிட்டார் .ஆனால் அவர் ஒரே நாளில் கட்சித் தலைவர் ஆகிவிடவில்லை. இந்த உழைப்பு சர்வாதிகாரி மந்திரி குமாரி படத்தில் நடிக்கும் போது காலத்திலேயே அவருக்கு உருவாகிவிட்டது ஆகவே தனது பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று அப்போதே படங்களில் நடிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக நடிப்பார். குறிப்பாக படங்களில் தனது இமேஜ் குறையாமல் பார்த்துக் கொள்வார். அதே நேரத்தில் தான் சம்பாதித்த பணங்களை வாரி வழங்கினதனால் அவர் வள்ளல் எம்ஜிஆர் என்று பொதுமக்களால் பாராட்டப்பட்டார். அப்படிப்பட்ட எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு பொதுமக்கள் அவருக்கு ஏகோபித்த வரவேற்பு கொடுத்தனர் .ஆகவே சினிமா புகழ் மட்டும் வைத்துக் கொண்டு வரவில்லை .ஆரம்ப காலங்களில் இருந்து அவர் கடவுள் மறுப்பு இயக்கம் சுயமரியாதை சிந்தனை எல்லோருக்கும்,எல்லாம், எல்லோரும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற சோசியலிச பாணியில் அவரது படங்கள் இருக்கும் . எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு பல பல சேவைகளை பொதுமக்களுக்கு செய்தார் ஏனென்றால் அவர் ஆரம்ப காலத்தில் பசியால் துன்பப்பட்டவர் என்ற காரணத்தால் எம்ஜிஆர் சத்துணவு படிக்கும் பிள்ளைகளுக்கு ஏற்பாடு செய்தார். இதுபோல் ஏழைகளுக்காக எண்ணற்ற உதவிகள் செய்து மறைந்தவர். எம்ஜிஆர் .அவர் சாதாரண நடிகர் மாத்திரம் அல்ல . மனித நேயமிக்கவர். எண்ணற்ற பேர்களுக்கு உதவி புரிந்தவர்.அவர் ஒரு அருமையான சோசியலிஸ்ட் வாழ்க எம் ஜி ஆர் புகழ் .
மறைந்தாலும் அவர் பேரை ஊர் சொல்லவேண்டும்
ReplyDelete