வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர், பகுதி 60
1920 களில் நீதி கட்சி தொடங்கி தமிழகமே பரபரப்பாக இருந்த காலம். அப்போது எனது அப்பாவுடன் சேர்ந்து ஏழு பேர் அண்ணன் தம்பிகள். அவர்கள் அனைவரும் நீதி கட்சியில் சேர்ந்து அதன் கொள்கை பரப்புபவர்கள் ஆனார்கள். ஆனால் எனது தாத்தாவோ மிகப்பெரிய வைதீகர். 63 நாயன்மார்களில் ஒருவரான கலிய வாயனார் எங்கள் குலத்தை சேர்ந்தவர் என்று அதற்காக எங்கள் ஊரிலேயே ஒரு சிறிய மடம் அமைத்து ,அதை பராமரிக்க நிலங்களும் ஒரு ஒரு குளமும் வெட்டியுள்ளார். அப்படிப்பட்ட வைதீகரான எனது தாத்தாவின் ஏழு மகன்களும் முதலில் அவருக்கு எதிராக கொடி பிடித்தனர். ஆகவே தனது பிள்ளைகள் மேல் வெறுப்புற்ற எனது தாத்தா ஏழு பேர்களையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விட்டார். அதுமட்டுமல்லாமல் இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் வெளியேறலாம் .நானும் இந்த மடத்திலேயே தங்கி கொண்டு எனது காரியங்களை பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டார். அவர்களுக்கென்று தனது சொத்தின் ஒரு ஒரு பகுதியை ஒதுக்கி கொடுத்து விட்டார் .எனது பெரியப்பா தலைமையில் ஏழு பேரும் வெளியில் வந்து விட்டனர். பிழைக்க வழி இல்லை மிகவும் கஷ்டமான சூழ்நிலை அவர்கள் அவரவர்களுக்கு கிடைத்த வேலைகளை பார்த்து வந்தார்கள். ஆனாலும் இந்த கட்சி வெறி அடங்கவில்லை. அவர்கள் அதிலிருந்து எந்த காலத்திலும் பின்வாங்கவும் இல்லை .எனது பெரியப்பாவின் தலைமையில் கட்சி ஒன்றே கட்சியின் கொள்கைகளை பரப்புவதே நமது வேலை என்று அந்த கடமை உணர்ச்சியோடு இருந்தார்கள். அந்த நேரத்தில் எனது அப்பாவுக்கு மூத்தவரான ஜி. வரதராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க எனது பெரியப்பா முயன்றார். ஆனால் வீட்டை விட்டு வெளியில் விரட்டப்பட்டவருக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. பிறகு எப்படியோ எங்கயோ ஒரு சொந்தத்தை பிடித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது 13 12 1936 அமாவாசை தினம் இப்படி ஒரு புரட்சிகரமான திருமணம் தாராசுரத்தில் நடக்கிறது என்பது கும்பகோணம் வட்டாரத்திற்கு புதிது. ஏனென்றால் இதுதான் முதல் திருமணம் இந்த திருமணத்தை வேடிக்கை பார்க்க கும்பகோணம் மக்கள் நிறைய கூட்டமாக கூடிவிட்டார்களாம் . திரு. கே.கே. நீலமேகம் தலைமையில் திருமணம் நடந்தது. இதில் முக்கியமாக வாழ்த்துக்கள் சொன்னவர்கள் திருமதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் ஒருவர். மூடநம்பிக்கை ஒழிப்பு , முக்கியமாக தேவதாசி ஒழிப்புக்கு முன் நின்று போராடிய அம்மையார் ,அவர்கள் எங்கள் வீட்டு திருமணத்தில் வந்து வாழ்த்துரை வழங்கியதாக இன்றைய விடுதலையில் இந்த செய்தி வந்திருக்கும் பொழுது உண்மையிலே எனக்கு பெருமிதம் ஆக இருக்கிறது .அந்த அம்மையாரை பற்றி அந்த அம்மையாரின் தியாகத்தை பற்றி எவ்வளவோ சொல்லலாம். அப்படிப்பட்டவர் அப்படிப்பட்டவரோடு சேர்ந்து அவரது கட்சிக்காரர்களும் கும்பகோணம் வட்டார கட்சிக்காரர்களும் கூடி நின்று வாழ்த்தினார்களாம். முக்கியமாக இதில் சொல்ல வேண்டியது மணமகனின் நண்பர் ஒருவர் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார் .அவர் சௌராஷ்டிரா இனத்தை சேர்ந்தவர் .இந்த திருமணத்திற்கு வந்து பார்த்ததற்காகவே அவர்கள் ஜாதியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு ஒரு நேரத்தில் அவரை ஏதோ சடங்குகள் எல்லாம் செய்து அவரை மீண்டும் ஜாதியில் சேர்த்துக் கொண்டார்களாம் .ஆகவே சுயமரியாதை திருமணத்தை பார்ப்பதே தீட்டு, பார்ப்பதே பாவம் என்று இருந்த காலத்தில் எனது பெரியப்பாவின் திருமணம் நடந்தது. அவருக்கு 10 குழந்தைகள். தற்போது அவரது பேரன்கள் எல்லாம் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். ஆகவே சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதால் வாழ்க்கையில் எந்தவிதமான குறைபாடுகளும் ஏற்படாது என்று காட்டுவதற்காகவே இந்த திருமணம் நடத்தப்பட்டது. அதன் பிறகு எங்கள் வீட்டில் நடந்த அத்தனை திருமணங்களுமே சுயமரியாதை திருமணங்கள் தான். கிட்டத்தட்ட இன்று வரை நூறாவது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஒரு பின்குறிப்பு எனது தாத்தா ஆரம்பித்த கலியநாயனார் மடம் இன்றும் தாராசுரத்தில் எங்கள் வசம் தான் இருக்கிறது .எங்களுக்கு கடவுள் பக்தியோ பூஜைகளில் நம்பிக்கை இல்லை .ஆனாலும் அவர்களது தந்தையின் விருப்பத்திற்காக அந்த மடத்தை இன்று வரை அவர் சொன்னது போலவே அவரது பிள்ளைகளும் பராமரித்தார்கள். பிறகு பேரன்கள் நாங்களும் பராமரித்தோம். இப்போது எங்கள் பிள்ளைகளும் அதை பராமரித்து வருகிறார்கள். வாழ்க சுயமரியாதை
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளவும்!!!
ReplyDeleteபடிச்சிங்களா ஐயா
ReplyDelete