வெளிச்சம் பரவட்டும் பகுதி,61

சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த பிறகு தனது மகன்களை வீட்டை விட்டு விரட்டி விட்டார் என் தாத்தா என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன் .இந்நிலையில் அவர்கள் வறுமையில் வாடும் போது என் பெரியப்பாவுக்கு 1936 இல் சுயமரியாதை சீர்திருத்த திருமணம் நடந்தது என்பதையும் சொல்லி இருக்கிறேன். அதற்கு அடுத்த வருடம் எனது அப்பா  சீனிவாசனுக்கு திருமணம். அப்போது வேலை வெட்டி இல்லை. வீட்டை விட்டு விரட்டப்பட்டடார்கள். அதனால் பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக எனது அப்பாவின் தாய் மாமனுக்கு பெண்கள் இருந்தார்கள். அதில்  என் அம்மாவை பெண் கேட்டார்கள். அப்போது எங்கள் தாத்தா அம்மாச்சி எல்லோரும் சற்று உயர்வான நிலையில் இருந்தார்கள். தாராசுரத்திற்கு பக்கத்தில் தான் கும்பகோணம் தான் அவர்கள் ஊர். அவர்களிடம் போய் பெண் கேட்டபோது அவர்கள் போட்ட கண்டிஷன் நீங்கள் வைதீக முறைப்படி தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் நாங்கள் பெண் தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள் . எங்கள் ஒப்புக்கொண்டார். திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது . என் பெரியப்பா இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார் . திருமண நாள் முதல் நாளில் இரவு பெண் வந்து எங்கள் வீட்டில் இறங்கி விட்டார். மறுநாள் காலை திருமணம் . பெண்வீட்டார்கள் வந்து விட்டார்கள் இங்கு பார்த்தால் எந்தவிதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை. பெண் வீட்டாரருக்கு ஒரேஅதிர்ச்சி . அவர்கள் கேட்டார்களாம். வைதீக முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது ஏதோ நீங்கள் தில்லுமுல்லு செய்வதாக  தெரிகிறது. நீங்கள் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறீர்கள தவிர, ஐயர் வந்த பாடு இல்லை ஆகவே ஐயர் இல்லாமல் நாங்கள் திருமணம் நடத்த விட மாட்டோம் என்று சொல்லி பெண் இருந்த வீட்டை சுற்றி மறித்து விட்டார்கள் .வாசலில் உட்கார்ந்து விட்டார்கள். ஆனால் எனது பெரியப்பா அவரது சகோதரர்கள் எல்லாம் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால் தலைவர் ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள .இதனிடையில் பெண்ணைப் வெளியில்விடாமல் மறித்து நின்றுவிட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே எனது பெரியப்பாவின் உத்தரவுப்படி பெண் தங்கி இருந்த அறையின் மேல் ஓட்டை பிரித்து அதன் மூலம் உள்ளே சிலர் இறங்கி கதவை திறந்து விட்டு பெண்ணை வெளியில் அழைத்து வந்தார்கள். வெளியில் வந்தவுடன் எனது பெரியப்பாவின் உத்தரவுப்படி எனது அப்பா பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி விட்டார் .ஒரே கலவரம் ஆகிவிட்டது .பெண் வீட்டார்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்  நீங்கள் ஏமாற்றி செய்த திருமணம் ,ஒரே தில்லு முல்லு நீங்க எல்லாம் வந்ததால் உங்களை நம்பி பெண் கொடுத்தது தப்பாக போய்விட்டது .ஆகவே நாங்கள் பெண்ண விடமாட்டோம் .நாங்கள் பெண்ணை அழைத்துச் சென்று விடுவோம் என்று ஒரே தகராறு செய்து ஆரம்பித்து விட்டார்கள். திருமணம் முடிந்துவிட்டது. வாசற்படியிலேயே வெளியில் வந்தவுடன்  திருமணம் முடிந்து விட்டது. பிறகு ஒரு மாதிரியாக சமாதானமாகி எனது பெரியப்பா நீங்கள் உங்கள் பெண்ணை கேளுங்கள் அவர்கள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார் .எனது அம்மாவிடம் எனது அம்மாச்சி அவர் பாட்டி எல்லோரும் இருந்தார்கள் .அவர்கள் எங்களுடன் வந்துவிடு  இவர்கள் ஏமாற்று பேர்வழிகள். இவர்களுடன் வாழ முடியாது .நீ  எங்களோடு வந்துவிடு என்று சொல்ல சிறிது நேரம் பொறுத்திருந்து எனது அம்மா அவர்களுக்கு அப்போது 15 ,16 வயது இருக்கும்.அம்மா சொன்னது  என்னை மாமா திருமணம் செய்து விட்டார். தாலியும் கட்டி விட்டார்கள். இனிமேல் நான் என்ன செய்வது. இனி என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள். ஆகவே  நான் இங்கே இருந்து விடுகிறேன். உங்களுடன் வரமாட்டேன் என்று சொல்லி தீர்க்கமாக சொல்லிவிட்டார்கள் . கோவ்மடைந்த அவர் பாட்டி அப்படி என்றால் நாங்கள் போட்ட நகைகள் கல்யாண புடவையிலிருந்து அத்தனையும் கழட்டி கொடு என்று  சொல்லிவிட்டார்கள். உடனே உள்ளே அழைத்துச் சென்று  போட்டிருந்த நகைகள் திருமண புடவையிலிருந்து அத்தனையும் எனது அம்மா கழட்டி கொண்டு வந்து அவரது அவருடைய தாயிடம் ஒப்படைத்து விட்டார் . எனது அம்மா குரூப் வெளியேறிவிட்டது.அதன் பிறகு வந்திருந்தவர்களுக்கு சாப்பாடு போட்டார்கள். இப்படியாக எங்கள் அப்பா சீனிவாசனின் திருமணம் என் பெரியப்பா தலைமையில் இனிதே  நடந்தது. இதுதான் எங்கள் வீட்டு கலாட்டா கல்யாணம்.மணமக்களுக்கு 8பிள்ளைகளுடன்,தற்போது நாங்களும் எங்கள் பேரக்குழந்தைகளோடு சுகமாக வாழ்கிறோம்

Comments

  1. படமே எடுக்கலாமே...அம்மாடி...உங்கள் அம்மாவுக்கு ஒரு "ஜே'!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63