வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர் பகுதி 62
திஜாராவின் கதைகளில் சிலிர்ப்பு என்ற கதை கவனிக்கத்தக்கது. அந்த கதையில் அப்பா தனது மகனை திருச்சி ஜங்ஷனிலிருந்து மாயவரத்துக்கு அழைத்துப் போகிறார் .பையன் தனது மாமா வீட்டில் பெங்களூரில் இருந்து அழைத்துவரப்பட்டு இப்போது மாயவரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் அந்த ட்ரெயினில்.
. அப்போது அந்த பையன் கேட்கிறேன் அப்பா மாமா நம்மள விட பணக்காரரா அப்பா , அப்பா சொல்கிறார் ஆமாம்பா நம்ம விட பெரிய பணக்காரர். நீஏன் அப்பா என்ன அங்க கொண்டு படிக்க வைத்திருக்கிறாய் அப்படின்னு பையன் கேட்க , நம்மகிட்ட வசதி இல்லப்பா அவர் கொஞ்சம் வசதியா இருக்காரு அதனால உன்னை படிக்க வைக்கிறார் பா . பையன் கேகிறான், ஆனா நான் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் மாமா எனக்கு ஒரு ஆரஞ்சு பழம் வாங்கி கொடு மாமா என்று கேட்டேன் ,ஆனா கடைசி வரைக்கும் அவர் வாங்கிய தரலப்பா அப்படின்னு அந்த பையன் மெதுவா அவங்க அப்பா கிட்ட சொல்றேன். அப்படியா அவர் கவனித்து இருக்க மாட்டார். இல்லப்பா எங்களுக்கு வீட்ல கூட சாதாரண சாப்பாடு தான் போடுவாங்க கொஞ்சம் பழையது கூட போடுவாங்க .அப்படின்னு பையன் சொல்றான். பையன் கேட்டானே எந்து ஒரு மூணு ஆரஞ்சு பழத்தை வாங்கி பையன் தூங்கி எழுந்து பிறகு சாப்பிட்டட்டும் அப்படின்னு பக்கத்துல வெச்சி இருக்காரு. பையன் முழிச்சிட்டான். சாப்பிடுப்பா என்று அப்பா சொல்ல, இல்லப்பா இத நான் எடுத்துட்டு போயி அம்மா கையில் கொடுத்து உறிச்சி நான் சாப்பிடணும். அப்படின்னு சொல்றான். பரவாயில்லையே பையன் உடனே கண்டதும் பார்த்த உடனே சாப்பிடணும்னு ஆசைப்படாம அவங்க அம்மா கையாள உரிச்சி சாப்பிடணும்னு வச்சிருக்கான் என்று பையனப்பற்றி கொஞ்சம் லேசா ஒரு பெருமிதம் அடைகிறார். அப்போது 10வயது இருக்கும் பெண் என் அருகில் உட்காரவைத்தாரவர் பாட்டி.எங்க அம்மா புறப்பட்டீங்க எந்த ஊருக்கு போறீங்க அப்படின்னு அந்த அப்பா கேக்குறார். அப்போ அந்த பாட்டி சொல்றாங்க அவ வந்து கல்கத்தா போறாங்க கொஞ்சம் பாத்துக்கோங்க போற வரைக்கும் அப்படின்னு சொல்றார். கல்கத்தாவா கல்கத்தாவுக்கு எதுக்குமா போற தனியாவா அப்படின்னு கேட்க, அவளுக்கு பழக்கம் இருக்குங்க போய்டுவா என்று பாட்டி சொல்ல,எதுக்கு அனுப்புறீங்க இங்கிருந்து கல்கத்தா நீங்க போகலையா ன்னு கேக்குறாரு இல்லங்க வந்து ஒரு வீட்டு வேலைக்காக போறா என்று பாட்டி சொல்ல வீட்டு வேலைக்கா 10 வயசு கூட இருக்காது போல இருக்கு அதுக்குள்ள வீட்டு வேலை பாக்குறாங்க அப்படி என்ன வேலை, அந்த அப்பா கேட்க அவளுக்கு ஏற்கனவே மூணு வருஷம் ஜட்ஜ் வீட்டில் வேலை பார்த்து அனுபவம் இருக்குங்க ,நல்லா சமாளிச்சிடுவாஎன்று பாட்டி சொல்ல என்னது பத்து வயசுக்குள்ளேயே மூணு வருடம் அனுபவமா அதுல வீட்டு வேலையா வீட்டு வேலை என்ன செய்வே அப்படின்னு அப்பா கேட்க எல்லா வேலையும் பாப்பாங்க வீட்டுக்கு வந்து பாத்திரம் கழுவுவது துணிமணிகளை துவைச்சு போடுறது சேலை துவைத்து போடுறது எல்லா வேலையும் பாப்பாங்க. வேலை பார்த்த மாதிரி பேசுற ,அப்போ சரிமா ஏன் இப்படி இருக்க நல்லா ஹெல்த்தியா இல்லையே நீ அப்படின்னு அவரு கேக்குறார .அந்த பொண்ணு சொல்லுது அவங்க எப்போதுமே எனக்கு வந்து மீந்த சோறு பழைய சோறு தாங்க போடுவாங்க . வேற போட மாட்டாங்க சரி நம்ம கஷ்டம் நம்ம வேலை பார்க்கிறோம் அப்படின்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க .அப்பட்ன்னா இன்னும் கொஞ்சம் வேணும்னு கேட்பியா என்று அந்தாப்பா கேட்க, மாட்டாங்கன்னு சொல்லிவிடவே அதைக்கேட்ட அந்த அப்பாக்குள்ள ஒரு ஒரு சிலிர்ப்புஏற்படுகிறது. அடுத்தவர்களிடம் கேட்கக் கூடாது எதையும் கேட்கக்கூடாது அப்படிங்கற ஒரு வைராக்கியத்தில் வாழ்கிறது அந்த குழந்தை. ரொம்ப பெருமையா அப்பறம் கேக்குறாரு இப்ப இங்க இருந்து எப்படி அங்கே யரையாவது தெரியுமா அவங்கள உங்களுக்கு தெரியுமான்னு கேட்க அந்தப்பாட்டி, அதெல்லாம் ஒருத்தரும் தெரியாதுங்க என்ன போனா வேலை பார்க்க வேண்டியதுதானே .சொல்ற வேலைய பாத்துட்டு அடக்கமா இருக்க வேண்டியது தான். அப்படின்னு சொல்லி இருக்காங்க எங்க வீட்ல. கொஞ்ச நேரம் ஆச்சு அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் நம்ம வாங்கி கொடுக்கணுமே சூடா ஏதாச்சும் வாங்கி கொடுக்கணும் அப்படின்னு அப்பா நினைக்கிறார். அப்போ இந்த பக்கத்துல கான்டினுக்கு அழைச்சிட்டு போயி அவளையும் தனது மகனையும் அழைச்சிட்டு போயி ரெண்டு பேருக்கும் காபி வடைஎல்லாம் வாங்கி கொடுக்கிறார் .அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க அடுத்தவங்க கிட்ட எல்லாம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க எங்க வீட்டிலே, அப்படின்னு வறுமையிலும் செம்மை மறுபடியும் அந்த பொண்ணு ஆச்சரியப்பட வைக்கிறா. அந்த அந்த அப்பா சரிம்மா பரவால்ல.ஏதாவது சாப்பிடுன்னு சொல்ல ,எனக்கு ஒரு தயிர் சாதம் வாங்கி கொடுங்க அப்படின்னுகேக இரண்டு பேருக்கும் வாங்கி கொடுக்கிறார் . அந்த பெண் நிதானமாக சாப்பிடுகிறாள்.ஆனால் இவர் பையனோ புரை ஏறிப் போகிறது
உடனே அந்தப் பெண் ஓடிப்போய் கொஞ்சம் தண்ணிய கொண்டு வந்து அவனுக்கு வாயில ஊட்டி விட்டு தலையை லேசா தடவி விடுறாள்.இத பாத்தா அப்பாவுக்கு ரெண்டு பேரும் சம வயசுதான்
ஆனா ஏழ்மையா இருந்தாலும் இந்த மாதிரி எல்லாம் காரியங்கள் செய்யணும்னு அந்த பொண்ணுக்கு ஒரு பண்பாடு இருக்கு .ஆனா நம்ம பையன் வந்து தயிர் சாதத்தை சாப்பிடறதுக்கு திணறுகிறான் அப்போ வசதியும் வாய்ப்புகளும் ஒரு ஏழைகளுக்கு மறுக்கப்பட்டது அது கொடுமை தானே .இருந்தபோதிலும் ஆனால் அந்த பெண்ணைக்கே உரிய அந்த பாங்கோட ஓடிப்போய் இதெல்லாம் கொடுத்து அவனை வந்து ஆசுவாச படுத்துறா.அப்போ அந்த பெண் குழந்தைகள் எவ்வளவு ஒரு கனிவாவும் பணிவாகவும் இருந்து இதெல்லாம் கத்துக்கொள்கிறது அப்படின்னு நினைக்கிறாரு .அப்போ அந்த பையன் சொல்றான் அப்பா இந்த பொண்ணு என்னப்பா எனக்கு பத்து வயசு தான் ஆகுது அவளுக்கும் பத்து வயசு தான் ஆகுது ஆனா ரொம்ப பேசுற .அவளை ரொம்ப புடிச்சிருக்கு பா அப்படின்நு பையன் சொல்றான். அப்ப அவன் அப்பா நினைக்கிறாரு இந்த குழந்தையும் நம்ம வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் நம்மளே வளர்த்தா என்ன படிக்க வச்சா என்ன அப்படின்னு நினைக்கிறாரு . நம்மலே நம்ம வீட்டு பிள்ளை வந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பிச்சிருக்கோம் அப்படி இருக்கிற நேரத்துல வந்து நம்ம எப்படி இந்த பிள்ளையை வளர்க்கறது இருந்தாலும் நம்ம எதாச்சும் அந்த புள்ளைக்கு கொடுப்போம் அப்படின்னு சொல்லிட்டு அம்மா நான் உனக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைக்கிறேன். நீ ட்ரெயின் டிராவலுக்கு போற வரைக்கும் இந்த ஒரு ரூபாய நீ வச்சுக்கோ அப்படின்னு சொல்லி எடுத்துக் கொடுக்கிறார். அப்போ அந்த பொண்ணு சொல்ற அடுத்தவங்க கிட்ட எல்லாம் எதுவும் வாங்கக்கூடாது சார் .எனக்கு வந்து ரெண்டு வேளைக்கு ரெண்டு நாளைக்கு சாப்பாடு கட்டி கொடுத்திருக்காங்க. எனக்கு ஒன்னும் தேவை இல்ல தண்ணி தானே நான் வாங்கி குடிச்சுடுவேன் கவனமா நான் போய் இறங்கிடுவேன் சார் அப்படின்னு அந்த பொண்ணு சொல்ற .ஆனா அன்பின் மிகுதியால அவங்க பாட்டி வந்து வாங்கிக்கமா என்று சொல்லஅதன் பிறகு அவர் பையன் என்ன பண்றான் அப்பா நீ மட்டும் நீங்க மட்டும் ஒரு ரூபா குடுத்தீங்க இல்ல நானும் வந்து ஆரஞ்சு பழத்தை எல்லாம் அவளுக்கு கொடுக்கவா அப்படின்னு கேக்க, அப்போ மனதில் ஈரம் .அந்த பையனுக்கு கசிஞ்சிருச்சு. ஆசையா சாப்பிடணும்னு வாங்கி வச்ச பழத்தை வீட்டுக்கு போய் அம்மா கையால உரிச்சு சாப்பிடணும்னு நினைச்ச பழத்தை இந்த குழந்தை கொடுக்கணும்னு நினைக்கிறானே பரவால்ல நம்ம பிள்ளை வந்து ஒரு கருணையோடு வளருவான் இனிமே அப்படின்னு நினைக்கிறாரு அப்பா இருந்தபோதிலும் அந்த பெண்ணோட சிறு பெண்ணாக இருந்தாலும் வறுமையில் இருந்தாலும் அவருடைய பேச்சும் பணிவும் அவரது கண்கள்ல நீரை வரவழைத்தது. இந்த கதை தி.ஜா.ரா.எழுதியது.இந்த கதை பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்
வாசிச்சிருக்கேனய்யா.
ReplyDelete