வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

எனது சிறிய வயதில் பரபரப்பாக பேசப்பட்ட படங்கள் பராசக்தி மதுரை வீரன் நாடோடி மன்னன் இந்த மூன்று திரைப்படங்களை பற்றி அப்போது அதிகமாக பேசுவார்கள் பராசக்தி வந்த வருடம் 1952 மதுரை வீரன்  வந்த வருடம் 19 56 ஆகவே அந்த இரு படங்களையும் நான் சிறிய வயதில் அதிகமாக கேள்விப்பட்டது இல்லை. கொஞ்சம் வயதானபிறகு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகுதான் பராசக்தி படத்தையும் மதுரை வீரன் படத்தையும் தெரிந்து கொண்டேன். 1958 ல் வெளிவந்த படம் நாடோடி மன்னன். இந்த படம் வந்தபோதில் எனக்கு அப்போது சிறிய வயது தான் என்றாலும இந்த படம் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எப்படி என்றால் இந்த படம் வெளிவந்து சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் ஊர் டெண்ட்கொட்டகைக்கு வந்து ரிலீஸ் ஆனது .அப்போது யாரைப் பார்த்தாலும், திமுக வேறு வளர்ந்து கொண்டிருந்த நேரம் எனக்கு இந்த அரசியல் தெரியாது என்றாலும் இப்ப இந்த  படத்தை பார்ப்பதற்கு டென்ட் கொட்டகையில்.அவ்வளவு கூட்டமாக இருக்கும். சாதாரணமாக டென்ட் கொட்டகையில் படம் போட்டால் எங்கள் ஊரில் நான்கு நாட்கள் தான் ஓடும். ஆனால் நாடோடி மன்னன் திரைப்படம் பார்ப்பதற்கு இந்த கிராமங்கள் தோறும் சுற்றுவட்டார கிராமங்கள் அத்தனையிலும் அந்த படம் மாறி மாறி வெளிவந்தது. இதனை பார்ப்பதற்கு ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு,4,5   கிலோமீட்டர் போய் பார்ப்பார்கள் .யாரைப் பார்த்தாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாடோடி மன்னன் ,எம்ஜிஆர் ,நாடோடி மன்னன் எம்ஜிஆர் பற்றிய பேச்சாகவே இருக்கும். அப்போது இந்த படத்தை பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை. ஆகவே பார்க்க முடியாமல் வாய்ப்புகள் தவறிவிட்டன. நான் அந்த படத்தையே 5,6 வருடகாலம் சென்றுதான் பார்த்தேன். என்ன ஒரு படம் .எப்படிப்பட்ட ஒரு கதை . அரசாங்கத்தின் கொடுமையை எதிர்த்து ,மக்களாட்சியை பற்றி தெளிவாக விளக்கிய படம் .ஏழைகள்  அரசாங்கத்தை வெறுத்து ஜனநாயக ஆட்சிக்கு திரும்பும் புதுமையான படம். எம்ஜிஆர் வசனங்கள் அற்புதமாக இருக்கும் அதைவிட பாட்டுக்கள் மிகவும் பிரமாதம். பொதுவுடமை கருத்துக்களை ,பாட்டுகளால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுத  மிகவும் பிரபலமானது.அதில் நடித்த மிகப் பெரும் நடிகர்கள் எம் ஜி ஆர் பானுமதி போன்றவர்கள். ஒரு ஒரு சீர்திருத்த படம் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்திய படம் அந்த படம் என்று கூட சொல்லலாம். முக்கியமாக அவர் நாடோடி மன்னன் என்ற இரட்டை வேடம் வேறு.  இடைவெளிக்கு பிறகு கலரில் வேறு வந்த படம்.அதனாலும் அந்த படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். நாடோடியாகவும் நடிப்பார். அப்போது நாடோடி வந்து மன்னன் இடத்தில் அமரும் சூழ்நிலை ஏற்பட்ட பிறகு தனது கருத்துக்களை தொகுத்து அரச சபையில் ஒரு பிரகடனம் செய்வார். அந்த பிரகடனத்தை கேட்கும் போதே பொதுவுடைமை கருத்துக்கள் எவ்வளவு ஆழமாக எம்ஜிஆர் அந்த காலத்திலேயே எடுத்திருக்கிறார் என்பது மிகவும் ஒரு பெரிய விஷயமாக தான் பேசப்பட்டது. பொதுவுடமை கருத்துக்களையும் ஏழைகளின்  நல்வாழ்வுக்கும் அந்த அரசு சபையில் அவர் பேசும் வசனங்களே பிற்காலத்தில்  அண்ணா திமுக காலத்தில் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற காட்சியை ஆரம்பித்தபோது அதே கொள்கைகளை வைத்துக் கொண்டார் .ஆம் வசனம் அப்படி இருக்கும். எம்ஜிஆரின் குரல் ஒரு வெண்கல குரல் .அந்த வசனங்களை ஆணித்தரமாக பேசும் போது வெண்கல குரல் ஒலிக்கும் சத்தம் போல கேட்கும். மிகவும் பிரமாதமான படம். இதில் அராஜகத்தை ஒழித்து மக்களாட்சியை நிறுவுவது மக்கள் புரட்சிபடையின் பணி. அதை திறம்பட எடுத்திருப்பார் எம்ஜிஆர் எனக்கு தெரிந்த சிறுவயதில் மிகவும் மிக மிக பரபரப்பாக பேசப்பட்ட படம் நாடோடி மன்னன் தான் .இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 25 வாரங்கள் எல்லா இடங்களிலும் ஓடியது .இதற்கு முன்பு இதே நிலையில் ஓடிய படம் மதுரை வீரன் என்று சொல்வார்கள் மதுரைவீரனை பற்றி எனக்கு அவ்வளவு தூரம் விவரம் தெரியவில்லை என்றாலும் முதல் முதலில் எம்ஜிஆருக்கு ஒரு பெரிய மாபெரும் வெற்றியை கொடுத்த படம் மதுரை வீரன் .மதுரையில் தங்கம் தியேட்டரில் 200 நாட்கள் கடந்து ஓடியதாகவம் சொல்வார்கள். அதற்குப் பிறகு நாடோடி மன்னன் தான் மக்களிடையே பெரும் தூண்டுதலையும் பெரும் பரபரப்பையும் உண்டாக்கிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பின்னாளில் எம்ஜிஆர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆன பிறகும் ஏழைகள் பால் அவர் அதிகமான அன்பு கொண்டிருந்தார் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் அவர் செய்தார் . இந்தப்படத்திற்கு பிறகு புரட்சி நடிகர் என்ற பெயரும் பெற்றார்.எம்ஜிஆர்.

Comments

  1. கடைசியில் பொய் சொல்லாமல் முடித்திருக்கலாமே!

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=-P2SvlqtSRc

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63