புமைப்பித்தன் கதைகளில் என்னக்கவர்ந்தது சாபவிமோசனம் என்ற சிறுகதை. விஸ்வாமித்திரனால் அரக்கர்களை அழிக்க காட்டுக்கு செல்லும் ராமலட்சுமணர்கள்,அரக்கர்களை அழித்துவிட்டு செல்லும் வழியில் கௌதம முனிவர் இருக்கும் இடம் செல்லும்போது பலத்த காற்று வீசியது .அப்போது ஏற்பட்ட தூசு  படலத்தால் அங்கிருந்து ஒரு பெண் தோன்றினாள் அவளே  அகலிகை. இந்திரனாள் ஏற்பட்ட அவமானத்தால் கௌதம முனிவரிடம் சாபம் பெற்று கல்லானவள் இன்று ராமனின் கால் தூசு பட்டு மீண்டும் பெண்ணானால். பிறகு ராமனை தக்க முறையில் கவனித்து அனுப்பி வைத்தனர். ராமன் மிதிலை நோக்கி சென்ற பிறகு கௌதம முனிவருக்கும் அவரது மனைவி அகலிகைக்கும் சரியான உறவு ஏற்படவில்லை. இருவரும் தத்தம் மனதில் நாம் செய்தது தவறோ தவறோ என்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது ஆகவே இருவரும் மனம் விட்டு பேசவில்லை . இந்நிலையில் அகலிகை கங்கை நதியில் நீராட செல்லும் போது அங்கிருந்தவர்கள் அகலிகையை ஒரு ஒரு  பாவியை பார்ப்பது போல பார்த்தார்கள் அவர்களின் பார்வையில் இருந்த கொடுமை அகலிகையை துன்புறுத்தியது. இப்படியே 14 ஆண்டுகள் காலம் கழிந்தது. மிதிலைக்குச் சென்ற சீதை யை மணம் முடித்து பின்பு  காட்டுக்குச் சென்றவுடன் ராவணனால் சிறை எடுக்கப்பட்டு  மீண்டும்  ராமனால் அழைத்துவரப்பட்டாள்.ராமனும் சீதையும் அயோத்திக்கு வந்த பிறகு இருவரும் ஒரு நாள் அகலிகையை பார்ப்பதற்கு அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள் அப்போது சீதை அகலிகையிடம் இலங்கையில் நடந்தவற்றை எடுத்துச் சொன்னாள். அப்போது சீதை தான் தீக்குளித்து வந்த விவரத்தையும் அவளிடம் கூறினார் அப்போது அகலிகை திடுக்கிட்டு காரணம் கேட்டாள்.தீக்குளிக்க சொன்னது யார் என்று கேட்டாள். ராமன்தான் என்று பதில் சொன்னால் சீதை. எதற்காக என்று கேட்டாள் அகலிகை உலகத்தாரின் கண்களுக்கு நான் குற்றமற்றவள் என்று எடுத்துக் காண்பிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது என்று சீதை மறுமொழி கூறினாள்.இதைக் கேட்டு அகலிகை மனம் வருந்தினாள்.  பிறகு சீதை புறப்பட்டாள்அங்கிருந்து. ஆனால் ராமனை பார்ப்பதற்கு அகலிகை வெளியே வரவில்லை ஏன் தெரியுமா அகலிகை மீண்டும் கல்லானால் இதில் ஒரு நுட்பம் எழுத்தாளர் வைத்துள்ளார் இந்த இடத்தில் அகலிகைக்கு சாபவிமோசனம்  கொடுப்பதற்காகவே ராமன் அந்த இடம் வந்தான் .ராமனின் கால் தூசி பட்டஇடத்தில் உடனே  அகலிகை சாப விமோசனம் அடைந்தாள். ராமனின் கால் தூசி கே இவ்வளவு சக்தி என்றால் ராமன் எப்படிப்பட்டவனாக இருந்திருக்க வேண்டும் ஆகவே தனக்கு சாப விமோசனம் கொடுத்த ராமனை கடவுளாகவே வண்ங்கினாள் அகலிகை .இப்போது சீதையை தீக்குளிக்கச் சொன்ன ராமன் என்னுடைய கற்பில் மட்டும் குற்றம் இல்லை என்று எதை வைத்து முடிவு கட்டினார் .தனது சொந்த மனைவியை நம்பாத ராமன் எப்படி அடுத்தவர் மனைவிக்கு சாப விமோசனம் கொடுத்தான். என்னை மன்னித்த அளவுக்கு தனது மனைவியை அவன் மன்னிக்கவில்லைய.  அப்படி என்றால் ராமன் கடவுள் என்ன மனிதனே கூட இல்லை எந்த ஒரு மனிதனுக்கு மன்னிக்க தெரியவில்லையோ அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்
 இப்படிப்பட்ட ஒரு  மனிதனால் எனது சாபம் விமோசனம் அடைந்து விட்டதா .அப்படி ஒரு சாப விமோசனம் எனக்கு தேவையில்லை ஆகவே நான் எப்போதும் போலவே கல்லாகவே இருந்து விடுகிறேன் என்று முடிவு எடுத்து விட்டாலோ இதை புதுமைப்பித்தன் அவர்கள் தனது தனது சிறுகதையில் ஒன்றும் சொல்லாமலே அகலிகை மீண்டும் கல்லானார் என்று மட்டுமே சொல்லி முடித்து இருப்பார் அற்புதமான கதை

Comments

  1. எப்படி இருக்கு

    ReplyDelete
  2. நல்லா இருக்கு. நாலு ஆளுக்கு இது தெரியணூம்ல....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64