இந்திய பெண்கள் சொத்துரிமை,10
ஆக்ட் 1/90மூலம் பெண்களுக்கு உரிமை கொடுக்கப் பட்டும், அதன் பலனை முழுமையாக அடைய முடியவில்லை. இதில் வந்த முதல் தீர்ப்பு1991(1)law weekly page97ல் நீதியரசர் ஜே சீனிவாசன் கொடுத்த தீர்ப்பு வெளிவந்துள்ளது .அதன்படி கூட்டு சொத்துரிமைதாரர் மகள் அதிலும் திருமணமாகாத மகள் 25 3 89 முதல் கூட்டு குடும்பத்தின் மகனுக்கு இணையாக சொத்துரிமை அடையலாம் .25 3.89 க்கு முன் திருமணமான மகள்களுக்கு இந்த உரிமை கிடையாது. ஆகவே மகள்களில் இரு மகள்களுக்கும் இடையில் பேதம் இருந்ததாக சட்ட வல்லுநர்கள் கணக்கிட்டார்கள். இந்த வழக்கில் திருமணம் ஆகாத மகள் மகனுக்கு இணையாக பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கு கடைசியில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது இந்த சட்டத்தின் பலனை அந்த மகளுக்கு கொடுக்கவில்லை. அதில் எழுதப்பட்ட தீர்ப்புப்படி 25 3 89 இல் திருமணம் ஆகாமல் இருந்த போதிலும் அவரது தந்தை 76 லேயே இறந்து விட்டதால் இந்த மகளுக்கு இந்த சட்டத்தின் பலனை கொடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.தந்தை உயிரோடு இருந்தால்தான் கொடுக்கமுடியும் என்று தீர்ப்பு வந்தது. ஆனால் அதே நேரத்தில் நீதியரசர் ஒன்றை கவனிக்க தவறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். சட்டம் திருத்தப்பட்டபோது மகனுக்கு இணையாக மகளும் கூட்டுசொத்து உரிமை உள்ளவராக ஆகிறார் என்று தான் சட்டம் திருத்தப்பட்டதே ஒழிய இன்னென்ன மகளுக்கு மட்டும் உரிமை உள்ளது என்று சொல்லவில்லை. மகனுக்கு மட்டும் உரிமை கொடுத்து விட்டு மகளுக்கு உரிமை கொடுக்காதது ஏன் என்ற கேள்வி எழும்புகிறது .கூட்டு சொத்து உரிமைக்காரர்களாக மகனும் மகளும் இணையாக இருக்கும் பொழுது தகப்பனார் 1976 இல் இறந்த போது மகனுக்கு மட்டும் உரிமை கொடுத்த நீதிபதி மகளுக்கு கொடுக்க தவறிவிட்டார் .அதற்கு காரணம் சொல்லும்போது ஒரு தந்தை இறந்து விட்டால் அவரது கூட்டு குடும்பத்து உரிமை அவர் இழந்துவிட்டதாக அர்த்தம் என்று கூறியுள்ளார் . ஆகவே உயிரோடு இல்லாதவரை கூட்டுகுடும்ப உறுப்பினர் என்று கொள்ளமுடியாது என்று விளக்கம் சொல்லப்பட்டது.ஆனால் இதற்கான விளக்கம் 2020 உச்சநீதிமன்றத்தில்தான் கொடுக்கப்பட்டது .அதாவது ஒரு மகள் சட்டத்தின்படி எப்போது கூட்டுக்குடும்பத்து உரிமையாளர் என்று கொடுக்கப்பட்டு விட்டதோ எப்போது சமனுக்கு நிகராக மகளும் அடையலாம் என்று சட்டம் சொல்லிவிட்டதோ எப்போது அவள் அவள் மகனுக்கு இணையாக,Right by birth equal to that of a son ரைட் பை பரத் பிறப்பு உரிமை அதாவது மகனைப்போலவே மகளும் என்று பிறந்தாலோ அன்றே உரிமை அடநதுவிட்டாள்.ஆகவே அந்த உரிமை அடைவதற்கு அவளுடைய தகப்பன் உயிரோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இந்த principle அன்றே எடுக்கப்பட்டிருந்தால் பலபெண்கள் வாழ்க்கையில் ஒளி கிடைத்திருக்கும். இந்த தீர்ப்பு வர 30 ஆண்டுகள் ஆகிவிட்டது .ஆனால் இதற்கு முன்னோடி ஆன சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆரம்பத்திலேயே, மகள் தனது உரிமையை அடைய வேண்டும் என்றால் அப்போது அவளது தகப்பனார் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஒரு இன்டர்பிரேட்ஷன் கொடுக்கப்பட்டு அதனால் மகள் தனது உரிமையை இழந்து விட்டாள். இதன் பிறகு வந்த தீர்ப்புகளும் இதனை ஒட்டியே வந்ததால் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு interpretationல் பிற்காலத்தில் வந்த தீர்ப்புகளும் இதனை ஒட்டியே வந்தது. அரசு ஒரு சட்டம் போட்டு பெண்களின் நிலை உயர்த்துவதற்காக அவருடைய கல்வி அறிவு சொத்து அறிவும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டாலும் இது போன்ற இடையூறுகளால் பெண்களுக்கு மீண்டும் மீண்டும் சறுக்கல் ஏற்பட்டது .ஆகவே அரசின் பலனை முழுமையாக அவர்கள் அடைய முடியவில்லை .தனது வாதத் திறமையை காட்டுவதிலும் நீதிபதிகள் அந்த interpretationல் ஆழ்ந்த புலமையை காட்டுவதாலும் சில சட்டங்கள் அடிபட்டு போய்விடுகிறது .ஒரு சட்டம் இயற்றும் போது மேலிருந்து வாரியாக அதன் உள்நோக்கம் என்ன என்பதை தெரிந்து சாதாரண மக்களுக்கும் புரிவது போல் தீர்ப்பு இருக்க வேண்டுமமே ஒழிய சட்டம் சரியாக இயற்றப்படவில்லை இதில் ஓட்டை உடைசல் என்று நீதிபதிகள் தனது ஆங்கில புலமையை காட்ட ஆரம்பிப்பதால் 30 வருடமாக இந்த ஒரு பாயிண்ட்டில் தனது உரிமை இழந்த பெண்கள் ஏராளம் .சட்டமே ஒரு சில தவறுகளாக இருந்த போதிலும் பெண்கள் உரிமையை எப்படி எல்லாம் அடைய முடியும் என்று தனது மூளையை யோசித்து தீர்ப்புகள் வரவேண்டுமே ஒழிய எப்படி எல்லாம் கொடுக்கக் கூடாது என்று நெகடிவ் ஆக திங்க் பண்ணி தீர்ப்புகளும் வழங்கக் கூடாது. இந்த தீர்ப்பு வந்த நாளில் இது பற்றி பெரிதாக பேசப்பட்டது .பலன், பெண்கள் தனது உரிமையை அனுபவிக்க முடியாமல் போனதுதான். தொடரும்
இதை வாசித்தால் நீதி, நீதியரசர்கள் மீது கோபம் தான் மிஞ்சுகிறது. see the spirit not the word என்பார்கள். ஆனால் நீதி மன்றங்களில் எல்லாமே வெறும் வார்த்தைகளும் வார்த்தை ஜாலங்களும் மட்டும் தான் மிச்சமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ReplyDeleteச்
ReplyDeleteThis is our anguish but we cannot express. I have searched many after after this judgment but no one surpassed this judgment.
ReplyDelete