இந்திய பெண்களின் சொத்துரிமை-11

ஆக்ட்1/90 பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை 50% அளவில் மட்டுமே வெற்றி பெற்றது திருமணமான பெண்களுக்கு அந்த சட்டத்தின் மூலம் எந்த விதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2005இல் ஆக்ட் 39 /2005 என்று மத்திய அரசு கொண்டு வந்தது .ஏனென்றால் இந்தியாவில் தென்னகப் பகுதிகள் அனைத்தும் பெண்களுக்கு உரிமை கொடுத்து சட்டத்தை இயற்றி விட்டது. அதன் பிறகும் நாம் வாளாவிருந்தாள் சரியாக வராது என்று நினைத்தார்களோ என்னவோ மாநில அரசுகளை பார்த்து மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது .அதன்படி 09.09.2005 முதல் ஒரு கூட்டு குடும்பத்தில் தகப்பனாரின் சொத்தில் மகளும் அவருடைய சொத்துக்கு பங்குதாரர் ஆகிறார் .அதாவது அவரது மகனுக்கு சரிசமமாக ஈக்குவலாக Right by birth ரைட் பை பரத் ஒரு பெண் பிறந்த உடனே மகனைப் போலவே கூட்டு குடும்பத்திலேயே உரிமைதாரராகிவிடுகிறார். மகனைப் போலவே மகளுக்கும் எல்லாவிதமான உரிமைகளும் உண்டு .அதன்படி09.09. 2005 முதல் ஒரு பெண் கூட்டு குடும்பத்தாரி ஆகிவிட்டார் .அதன்படி இந்த தேதியில் அவள் உயிரோடு இருந்தால் போதும் .அவள் திருமணமானவளா ஆகாதவளா என்ற பிரச்சனை இல்லை .அதிலும் சில கண்டிஷன்ஸ் இருந்தது அதன்படி 20 12 2004 இக்கு முன் பாகப்பிரிவினை நடந்திருந்தால் அந்த பாகப்பிரிவினையை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது .அதேபோல் பழைய சட்டப்படி நோஷனல் பார்ட்டிஷன் என்று (notional partition) சொல்லப்படுமேயானால் அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் .அல்லது கோர்ட்டில் முறைப்படி பாகப்பிரிவினை ஆகியிருக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் எல்லா குடும்ப சொத்துக்களும் பாகப்பிரிவினையின்  கீழ் வந்துவிடும். அப்போது அப்பாவின் கையில் தாத்தாவின் சொத்துக்கள் இருந்த போதிலும் எல்லா சொத்துக்களும் மகனுக்கும் மகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் இந்த சட்டம் வந்த பிறகு பழைய 1 /90 காலாவது ஆகிவிட்டது .புதிய சட்டப்படி மகளுக்கு Right by birth வந்துவிட்டது .அப்போது அதில் ஒரு குழப்பம் வந்தது .அந்தப் பெண் 09.09. 2005/ல் தேதியில் பிறந்திருக்க வேண்டுமா அல்லது அதற்கு முன்பு பிறந்தாலும் அந்த பெண்ணுக்கு சொத்துரிமை வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது . முதல் கேள்வி போதாதா இந்த ஒரு கேள்வியே சுற்றி சுற்றி சுழண்டு அடித்தது சூறாவளியாக .பெண்களுக்கு உரிமை கொடுத்தும் எந்த பெண்ணுக்கு அந்த உரிமை செல்லும் என்று கோர்ட்டு கோட்டாக ஏறி இறங்கினார்கள் பெண்கள் தொடரும

Comments

  1. பாருங்க ஐயா

    ReplyDelete
  2. //ஆக்ட்1/90 பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை 50% அளவில் மட்டுமே வெற்றி பெற்றது திருமணமான பெண்களுக்கு அந்த சட்டத்தின் மூலம் எந்த விதமான நிவாரணமும் கிடைக்கவில்லை.// .... self contradictory ..?

    ReplyDelete
    Replies
    1. Married daughter could not reap the benefits till 2020 Supreme court judgment

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64