இந்திய பெண்களின் சொத்துரிமை.-12
இந்திய பெண்களுக்கு சொத்துரிமை 2005இல் திருத்தப்பட்டபோது அதில் விளைந்த ஒரு நல்ல அம்சம் தந்தை குடியிருந்த வீட்டில் மகன்கள் தொடர்ந்து குடியிருக்கும் நிலையில் வீட்டை விட்டு திருமணமாகி சென்ற பெண்கள் மகள்கள் அந்த வீட்டில் பங்கு கேட்டு உரிமை கூற முடியாது. ஏனென்றால் அது மகன்களுக்கு தந்தை வழியில் கிடைத்த சொத்தாகையால் அதே வீட்டில் தொடர்ந்து குடி இருந்து வர வேண்டும் என்ற பழமையான நோக்கில் பழைய சட்டம் sec. 23-ல் சொல்லப்பட்டது .பழைய சட்டத்தின்படி திருமணம் ஆகாத பெண்கள் , விதவைகள் அல்லது வாழ வழியற்ற மகள்கள் மட்டும்,தந்தை வீட்டில் வந்து குடி இருக்க தங்கிக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரு பெண் திருமணமாகிவிட்டால் அந்த வீட்டில் பாகம் கேட்டு போராடலாமே தவிர அதற்குரிய பங்கை மட்டுமே பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அந்த வீடு பாகம் பிரிக்கப்படாது. இது பழைய சட்டம். 2005 இல் திருத்தப்பட்ட சட்டப்படி எப்பொழுது ஒரு மகளுக்கு அவளுடைய சகோதரனோடு இணையான சொத்துரிமை கொடுக்கப்பட்டு விட்டதோ அப்போதே இந்த sec. 23 க்கு வேலை கிடையாது . அவள் தந்தை குடியிருந்த வீட்டிலும் பங்கு கேட்டு போராடலாம் .அதற்கான வழிவகை செய்தது திருத்தப்பட்ட சட்டம் . ஆகவே,ஒரே அடியாக sec.23 நீக்கப்பட்டது அதன்படி திருமணமான மகள்களும் பார்ட்டிஷன் கேட்டு அந்த வீட்டுக்காக போராடலாம் .இந்த சட்டம் வந்த புதிதில் சென்னை ஹைகோர்ட்டில் கீதா வெர்சஸ் சேகர் என்ற வழக்கு வந்தது .அந்த வழக்கில் எப்போது சட்டம் திருத்தப்பட்டு விட்டதோ செக்ஷன் 23 நீக்கப்பட்டு விட்டதோ அப்போது இருந்த பெண்களுக்கு தங்கி இருந்த வீட்டிலும் பாகம் உண்டு என்று தீர்ப்பு சொல்லப்பட்டது .
.இந்த தீர்ப்பு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது அதன் தீர்ப்பு 2009(3)LWபக்கம்807ல் வெளியாகி உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்து எழுதும்போது இந்த சட்டத்தில் ஏன் இந்த சரத்து நீக்கப்பட்டது என்பதற்கு நீதிபதிகள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்கள். இதில் நீதிபதிகளின் தீர்ப்பு, ஒரு சட்டம் கொண்டு வரும்போது அதன் பின்புலம், அதை எதற்காக கொண்டுவரப்பட்டது என்று ,true spirit, உண்மையான நோக்கம் அறிந்து ,அதனை புரிந்து செயல்பட வேண்டும். லா கமிஷன் ரிபோர்ட் படி மகள்கள் தந்தையின் வீட்டில் பங்கு கேட்டும் , அதன் உரிமையிலும் தலையிட பெண்களுக்கு உரிமை உண்டு . அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டும் .அந்த உரிமை சட்டப்படி மறுக்கப்படக்கூடாது. சட்டத்தின் நோக்கம் அதன் பலனை பெண்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே.இந்த sec23 நீக்கப்படாவிட்டல் கோர்ட்டில் மீண்டும் மீண்டும் தடை செய்வார்கள் ,குறிக்கிடுவார்கள். பலவிதமான யுகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே செக்ஷன் 23 சட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. இது பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் .அதிலும் ஒரு முந்தைய கேசில் 2005க்கு முன் தீர்ப்பு வந்திருந்த போதிலும் அந்த தீர்ப்பின்படி மகளுக்கு ரைட் ஆஃப் ரெசிடெண்ட்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் 09.09. 2005க்கு பிறகு அந்த தீர்ப்பு முழுமை பெற வேண்டுமென்றால் அதாவது ஃபைனல் டிகிரி ஆக வேண்டுமென்றால் அந்த நேரத்திலும் பெண்கள் தனது உரிமையை கோரலாம் .வழக்கு நடக்கும் காலத்தில் இருந்த வீட்டை பற்றி உரிமை கோராமல் இருந்தாலும் ஒரு டிகிரி பைனல் ஸ்டேஜ் வரும் போது அந்த நேரத்திலும் தன் பங்கை கேட்கலாம். அதன் அடிப்படையில் இந்த சட்டம் பெண்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது .இந்த சட்டப்படி பல தீர்ப்புகள் ஆரம்ப காலத்தில் மகன்களுக்கு சாதகமாக இருந்தாலும்09.09. 2005 க்கு பிறகு வெளியாகும் பைனல் டிகிரியை மனுக்கள் பெண்களுக்கு sec. 23 நீக்கத்தால் சாதகமாகவே அமைந்தது .அதிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் எடுத்துச் சொல்லப்பட்ட வாதம் 09.09/2005 க்கு பிறகு வெளியாகும் தீர்ப்புகளுக்கு தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஏற்கனவே வெளியான தீர்ப்புகளை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது என்று வாதிட்டார்கள் .வாதத்தின் நோக்கம் எப்படியும் பெண்களுக்கு இதை கொடுத்து விடக்கூடாது என்பதிலேயே,அதன் நோக்கத்திலேயே இருந்தது. ஆனால் திறமையான நீதிபதிகள் இந்த சட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டது .அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே வெளிவந்த தீர்ப்புகளில் முதல் நிலை தீர்ப்பு வெளியாகியிருந்தாலும் இறுதிநிலை தீர்ப்பணை ஆகாத வரையில் அது ஒரு முழுமையான தீர்ப்பு ஆகாது .ஆகவே இறுதிநிலை தீர்ப்பை அப்போது உள்ள சட்டத்தின்படி பலனை அடைந்து கொள்ளலாம் என்று வேறொரு வழக்கில் தீர்ப்பானதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் அந்த அப்பிலை தள்ளுபடி செய்தார்கள் .மகள்கள் பிழைத்தார்கள்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் 9 9 2005 இல் சட்டம் போட்டு அதன் பலன் உடனடியாக 2008 லேயே இதற்கு விளக்கம் கிடை த்துவிட்டது. இது ஒரு பெண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் . ஏனென்றால் இதற்கும் 20 வருடம் 30 வருடம் ஆகிவிட்டது என்றால் இதன் பலனையும் பெண்கள் அனுபவிக்காமல் போயிருக்கும்.ஆகவே இந்த தீர்ப்பு முழுமையாக வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு .தொடரும்
வாத்யாரே,பாருங்க
ReplyDeleteநல்ல பதிவு. உண்மையிலேயே வெளிச்சம் வந்து விட்டது,!
ReplyDeleteபார்த்து "கூவி"னேன். அதையெல்லாம் காணோமே ...
ReplyDelete