இந்திய பெண்களின் சொத்துரிமை13
நான் முன்பே சொன்னது போல சட்டங்கள் எவ்வளவு போட்டாலும் அதை சரியான முறையில் அணுகினால் தான் அதன் பலன் கிடைக்கும். பெண்களுக்கென்று சொத்துரிமை கொடுக்கப்பட்டும் சட்டங்கள் மறுபடியும் 2005 இல் திருத்தப்பட்டும் அவர்களுக்கு முழுமையான விடிவு காலம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு2012(5)Law weekly page378,2013(4)Law weekly page113,2012(3)LW.page632 இதில் சொல்லப்பட்ட தீர்ப்புகளில் இருந்து தெரிய வருகிறது .பெண்களின் உரிமை பற்றி பக்கம் பக்கமாக எழுதி இருந்தாலும் இதில் எந்த கேசிலும் பெண்களுக்கு right by birth ரைட் பை பரத் என்ற வார்த்தைக்கு விளக்கம் எந்த தீர்ப்பு எந்த தீர்ப்பிலும் இல்லை. மாறாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையிலேயே திரும்பத் திரும்ப அதே சொல்லிச் சொல்லி அந்த தீர்ப்புக்கு மாறாக சொன்னால் ஏதோ பங்கம் வந்துவிடுமோ என்பது போல மாறாமல் அதே கருத்தை எடுத்து ஒப்பிட்டு உள்ளார்கள். அடுத்து ஒரு வழக்கு2012(2)LW page 750 இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் திருமணமாகாத பெண்களும் திருமணம் ஆன பெண்களும் உண்டு .இந்த வழக்கு சென்னை ஹை கோர்ட்டில் விசாரிக்கும் போது முதலில் பெண்களுக்கான ஆக்ட்1/90 படி விசாரிக்கப்பட்டு திருமணமாகாத பெண்ணுக்கு உரிமை கொடுக்கப்பட்டது .இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சென்ட்ரல் ஆக்ட் 39 /2005 வந்துவிட்டது .அதன்படி மகள்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது .அதில் sec.6 படி திருமணமான பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. மாறாக பொதுவா by birth daughters have the same right in the same manner with the son என்றுதான் உள்ளது. இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு முதலில் போடப்பட்ட தமிழ்நாடு சட்டம் தற்போது நடைமுறையில் இருப்பதால் பழைய சட்டமே செல்லும் என்ற ரீதியில் திருமணமான பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது .ஆனால் நீதிபதி ஒன்றை கவனிக்க தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். புது சட்டம் 2005ல் போடும்போது அதில் இது சம்பந்தப்பட்ட பழைய சட்டங்கள் காலாவதி ஆகிவிடும் sec.4படி, ஆனால் நீதிபதி அவர்கள் தனது தீர்ப்புறையில் இரண்டு சட்டங்களையும் கைக்கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளார் இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை .ஒரே பிரச்சனைக்கு 2சட்டம் ஒரே நேரத்தில் எப்படி பொருந்தும் .இந்த தீர்ப்பு எனக்கு உடன்பாடு இல்லை இதை மறுபரிசீலனை செய்யலாம் என்று நினைக்கிறேன் .இதுபோல வினோதமான தீர்ப்புகள், பெண்களுக்கு விரோதமான தீர்ப்புகள் தான் வந்தது ஒழிய அவர்களுக்கு விடிவு காலம் 2020 இல் தான் வந்தது தொடரும்
வக்கீலின் வாதம் ஒரு விளக்கு
ReplyDeleteவிளக்கெல்லாம் சரி. ஆனா உங்க நீதியரசர்கள் அதை எண்ணெய் இல்லாத விளக்காக மாற்றி விடுகிறார்களே .... //பொதுவா by birth daughters have the same right in the same manner with the son என்றுதான் உள்ளது. இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு முதலில் போடப்பட்ட தமிழ்நாடு சட்டம் தற்போது நடைமுறையில் இருப்பதால் பழைய சட்டமே செல்லும் என்ற ரீதியில் திருமணமான பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது .// ???
Deleteகிடைத்ததா
ReplyDeleteஆக ... வெளிச்சம் வந்து விட்டது; ஆனால் இன்னும் பரவலாக பரவ உங்கள் நீதியரசர்களே தடையாக இருக்கிறார்கள். சரிதானே...???
ReplyDeleteபின்னூட்டம் போட்டா உடனே அது எங்களுக்குத் தெரியணும்லா... ஆனா இங்கென்ன...நிறைய வாய்தா வாங்கிட்டு, ரொம்ப லேட்டா தான் தெரியுது. நல்ல ஏற்பாடா செய்யுங்க .. வக்கீலய்யா.
ReplyDelete