இந்திய பெண்கள் சொத்துரிமை.4
இந்து பெண்களின் சொத்துரிமை சட்டம் 1937 இன் படி அவர்களின் இரண்டு வாழ்வில் இருந்து மீண்டு வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. குறிப்பாக சொத்துரிமையில் கணவரின் சொத்தில் பெண்கள் சாகும் வரை அனுபவிக்கலாம் என்று இருந்ததே பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது மனைவி கணவனின் காலத்துக்கு பிறகு பாகப்பிரிவினை கூட கேட்கலாம் .ஆனாலும் , அது ஒரு எல்லைக்கு உட்பட்டது தான் பாகப்பிரிவினைக்கு பதிலாக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை காப்பாற்ற ஜீவனாம்சமாக ஏதாவது சொத்துக்களை கேட்டுப் பெறலாம் இது போன்ற உரிமை 19 53 (2) . பக்கம் 459 இந்த வழக்கில் தான் 1937 இல் போட்ட சட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அதுவரை 1937 இல் இருந்து வழக்கு என்ற முறையில் கோர்ட்டில் கிடப்பில் போடப்பட்டது .இதை தவிர மாறி மாறி வரும் தீர்ப்புகள் பெண்களை அந்த சொத்துக்களையும் அனுபவிக்க விடாமல் இருந்து வந்தது. இதில் குறிப்பாக அவர்கள் வாழ்நாள் ஜீவனாம்சத்துக்காக கொடுக்கப்பட்ட சொத்து அவர்கள் கைவசம் இருந்த போதிலும் அதை மற்ற குடும்ப பாகஸ்தர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார். ஆகவே பெண்களால் நி ம்மதியாக அந்த சொத்தை வைத்து வாழ முடியவில்லை .இதற்கு ஒரு முடிவு வந்தது இதுவரை இந்த முடிவு வர 20 வருடங்கள் ஆனது பெண்களின் இந்த நிலையை கண்டு 1956 இல் இந்து வாரிசு உரிமை சட்டம் வந்தது அதன்படி 1937 க்கு பிறகு ஜீவனாம்சமாக ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை செக்க்ஷன் 14 (1) படி அவருக்கே அந்த சொத்து முழுமையாக்கப்பட்டது .இனி ஏதும் தடை இல்லை அந்த சொத்தை 56க்கு பிறகு அவர் முழு உரிமையுடன் அனுபவிக்கலாம் .அது அவர் சொந்த சொத்து யாருக்கு வேண்டுமானாலும் அவர் கொடுக்கலாம் தானமாகவும் கொடுக்கலாம். எல்லாவிதமான பூரணமான உரிமை அவருக்கு வந்துவிட்டது .அது குடும்ப சொத்து அல்ல. அது இனி அந்தப் பெண்ணின் சொத்து. ஆனால் அதிலும் ஒரு ரைடர் கிளாஸ் போட்டார்கள் சில சொத்துக்கள் மற்றவர்களால் தானமாகவோ பரிசாகவோ கொடுக்கப்பட்டால் அந்த சொத்து 1956 க்கு பிறகும் முழுமை அடையாது என்பதுதான் இந்த ரைடர் கிளாசின் அம்சம். பல பெண்கள் தனது சொத்துக்களை முழுமையாக அடைய நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய ஆகிவிட்டது 56 இல் போட்ட சட்டம் 1977 இல் சுப்ரீம் கோர்ட்டில் துளசம்மா என்ற பெண் போட்ட வழக்கில் தான் ஒரு முடிவுக்கு வந்தது அதன்படி மனைவிக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்து அவரது முழு உரிமையாகும் என்ற தீர்ப்பு வர இருபது ஆண்டுகளுக்கு மேலானது
சட்டம் வந்து விட்டது. ஆனால் இன்னும் முழுப்பயனுக்கு வந்து விட்டதா என்பதே ஒரு கேள்விக் குறி.
ReplyDeleteஏனைய பதிவுகளை எப்படி, எங்கே பார்ப்பது?
ReplyDelete