இந்திய பெண்கள் சொத்துரிமை,7
1956 இல் வந்த இந்து வாரிசு உரிமை சட்டப்படி பெண்களுக்கு ஓரளவே உரிமை கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு இதைக் கொண்டு புதிய விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இந்த சட்டத்தினால் sec.6 படி ஒரு கூட்டு குடும்பத்தார் 1956 க்கு முன்னால் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களின் மதிப்பு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேராது. கூட்டு குடும்பத்தாருக்கு போய் சேர்ந்து விடும் .இந்த இடத்தில் ஒரு proviso clause வைத்தார்கள் .அதன்படி 1956க்கு பிறகு இறந்து போனவருக்கு பெண் வாரிசுதாரர்கள் இருந்தால் அவருடைய சொத்து ஆண் வாரிசுதாரர்களோடு சேர்ந்து பெண் வாரிசுதாரர்களுக்கும் சமமாக அடைய வேண்டும் என்ற கிளாஸ் இருந்தது இதில் his interest என்று சொல்லப்பட்டிருக்கும் .இந்த அவரது இன்ட்ரஸ்ட் என்பது உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றங்களிலும் பலவிதமான இன்டர்பிரேஷனுக்கு ஆளானது. ஹிஸ் இன்ட்ரஸ்ட் என்பது அவருக்கு ஒதுக்கப்பட்ட பாகம் ,அவருக்கு பாகப்பிரிவினைல் ஒதுங்கி இருந்தால் எவ்வளவு கிடைத்திருக்குமோ, அந்த பாகம். கூட்டு குடும்பத்தில் அவருக்கு உள்ள பாகத்தை கணக்கிட்டு பெண்கள் அடைய வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நோக்கம் .ஆனால் உயர், உச்சநீதிமன்றங்களில் அந்த இன்ட்ரஸ்டிளிலும் மகன்களுக்கும் சேர்த்து பங்கிட்டனர் .ஆகவே பெண்களுக்கு அவருடைய தந்தையின் சொத்தில் பூரணமாக அனுபவிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த proviso கிளாஸ் போட்டதால் கூட்டுக் குடும்பம் என்ற செல்லரித்துப் போன ஒரு வார்த்தை, நடைமுறைக்கு ஒரு முடிவு வந்தது. எப்படி என்றால் இந்த சட்டத்தின் நுணுக்கத்தை நேரடியாக சில நீதிபதிகள் அதன் கருத்தை உணர்ந்து சரியான முறையில் தீர்ப்பிட்டார்கள் .அதான் எப்படி என்றால் 1956க்கு பிறகு ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கூட்டு குடும்பத்தில் இருந்து கிடைத்த பாகத்தை அவருடைய சொந்த சொத்தாக கருத வேண்டும். அவருக்கு மகன்கள் இருந்த போதிலும் அந்த சொத்தை கூட்டுக் கு டும்ப சொத்தாக கருதக்க கூடாது என்று சில அதிரடியான தீர்ப்புகள் வந்ததும் உண்டு .உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில்2010(5)law weeklyல் _ ஜஸ்டிஸ் பழனிவேலு தனது தீர்ப்பில் ஒரு கூட்டுக் குடும்ப சொத்து பாகப்பிரிவினையில் பிரிக்கப்பட்டால், அந்த சொத்து அவருடைய சொந்த சொத்தாக பாவிக்க வேண்டும் கூட்டு குடும்ப உரிமை என்ற தகுதியை அந்த சொத்து இழந்துவிட்டது .ஆகவே அந்த சொத்தில் மனைவி மகள் மகன்களோடு சேர்ந்து சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார். சட்டத்தின் நோக்கம் இதுதான் .அதை விட்டு அவருடைய சொத்தில் மகன்களுக்கு என்று தனியாக எதுவும் கொடுக்கக் கூடாது என்று ஒரு அதிரடியான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வந்தது .இதுதான் காலத்துக்கு பொருந்தும் சட்டம் எளிமையான முறையில் அதில் அந்த தீர்ப்பில் கூறியிருப்பார் ஆனால் மிகச்சிறந்த வல்லுனர்களாக தங்களை கருதிக் கொண்ட நீதிபதிகள் ஹிஸ் இன்ட்ரஸ்ட் என்ற வார்த்தைக்கு புதிது புதிதாக அர்த்தங்களை கொடுக்க ஆரம்பித்தார்கள். தங்களுக்கு உள்ள வாத திறமையும் ஆங்கில புலமையும் ஒப்பிட்டு இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நீதிபதியும் ஹிஸ் இன் டிரஸ்ட் என்ற வார்த்தைக்கு மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தார்கள். இதனால் கோர்ட்டில் வாதம் செய்யும் போது, இதை எப்படி புரிந்து கொள்வது எந்த தீர்ப்பை எடுத்துக் கொள்வது என்று அறியாமல் கீழ் கோர்ட்டு நீதிபதிகள் திணறுவார்கள். ஆகவே ஒரு முடிவு இல்லாமலே ஓடிக் கொண்டிருந்தது. இதற்கும் ஒரு முடிவு வந்தது .உச்ச நீதிமன்றத்தில் உத்தம் என்பவர் தொடுத்த வழக்கில் ஒரு தீர்ப்பு வெளியானது. அதன்படி ஏ என்பவர் கையில் கூட்டு குடும்பத்தில் இருந்து அவருக்கு கிடைத்த பாகம் இருந்தது. அவர் 1973இல் இறந்தபோது அவருக்கு மனைவி மகன்கள் மகள்கள் இருந்தார்கள் .இதை எப்படி பிரிப்பது என்று தீர்ப்பு வெளியானது அதன்படி 73 ல் ஏ என்பவர் கூட்டுக் குடும்ப சொத்தோடு இறந்து விட்டால் அவரோடு சேர்த்து கூட்டு குடும்ப சொத்து என்ற கான்செப்ட் செத்துவிட்டது .அந்த நேரத்தில் அவருடைய சொத்துக்கள் அவருடைய தனிப்பட்ட சொத்துகளாக கருதப்பட வேண்டும். ஆகவே அவருடைய வாரிசுகள் எல்லோருக்கும் அவருடைய சொத்தில் உரிமை உள்ளது .இனி கூட்டுக் குடும்பத்து சொத்து என்ற சொல் கிடையாது என்று2016(4)law weekly page306ல் வெளியானது 1956ல் போட்ட ஒரு செக்க்ஷன் ஆறில் பிரிவுக்கு ஒரு முழுமையான தீர்ப்பு வர 60 ஆண்டு காலம் ஆகியிருக்கிறது .ஆகவே சட்டங்கள் எளிமையாக இயற்றப்பட வேண்டும். இந்த தீர்ப்பினால் இதற்கு முன்பாக வந்த பல தீர்ப்புகள் அடிபட்டு போய் விட்டன .இருந்த போதிலும் கூட்டு குடும்பத்தில் சொத்து என்று சொல்லிக் கொண்டு இனியும் தவறான தீர்ப்புகள் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோல் நிறைய தீர்ப்புகள் உதாரணம் காட்ட முடியும் .இந்த மதிப்புக்கு மிக்க தீர்ப்புகள் வழக்கமான தீர்ப்புகளை விட்டு மாறுபட்டவை. சட்டத்தின் நோக்கம் என்பதை என்ன என்று புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் தீர்ப்புகளை வழங்குவது தான் நல்ல நீதி. வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக்கொண்டு ஒரு சட்டத்திற்கு விதவிதமான அர்த்தங்களை கொடுத்து அவர்களுடைய புலமையை காட்டிக்கொள்ளலாமே ஒழிய சாதாரண மனிதனுக்கு தீர்ப்பு கிடைக்காது. அதனால்தான் இந்த இரண்டு தீர்ப்புகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். இது போல் சிதறி கிடக்கும் நிறைய தீர்ப்புகள் உள்ளது .எப்படியோ ஒரு வழியாக பெண்களுக்கு உரிமை கொடுத்ததன் மூலம் ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த கூட்டு குடும்பத்து உரிமை என்ற சொல் நீர்த்துப் போகவும் உதவியது இதற்கெல்லாம் ஒரு சிகரம் வைத்தது போல் தமிழ்நாட்டில் ஒரு சட்ட திருத்தம் வந்தது தொடரும்
How is it
ReplyDelete