இந்திய பெண்கள் சொத்துரிமை9

1956 ஆக்ட் படி செக்சன் 16 படி ஒரு கூட்டு குடும்பத்தில் உள்ள ஒருவர் தனது உரிமை அல்லது தனக்கான உரிமை கூட்டு குடும்ப சொத்தில் தனக்குள்ள பங்கு எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. மேலும் கூட்டுக்குடும்பத்துல் his interedt என்பதற்கு முழுமையான அர்த்தமும் கொடுக்கப்படவில்லை .ஆகவே கூட்டுக் குடும்பத்தில் உள்ள தனக்குரிய பாகத்தில் மட்டும் அவர் மற்றவர்களுக்கு கொடுக்கலாமா அல்லது கூட்டுக் குடும்பத்தைச் சொத்தில் அவருக்கென ஒதுங்கும் முழு பாகத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாமா என்ற நிலை சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அருணாச்சலத்தம்மாள் vs ராமச்சந்திரன் பிள்ளை என்ற வழக்கில் ஹிஸ் இன்ட்ரஸ்ட் என்பது ஒரு கூட்டு குடும்பத்தில் ஏ பி சி டி என்று நால்வர் இருந்தால் டீ இன் பங்கை தனியாக கொடுத்து விட வேண்டும் .அதுவே அவரது இன்ட்ரஸ்ட் ஆகும். அப்படி கொடுக்கப்பட்ட அவரது சொத்தில் தான் 1956க்கு பிறகு தனது பிள்ளைகளும் மனைவியும் மகள்களும் செக்ஷன் 8 படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பானது .இந்த தீர்ப்பு 76 லா வீக்லி பக்கம் 109 இல் வெளியாகி உள்ளது .இதன் அடிப்படையில் பல வழக்குகள் பின்பற்றவில்லை. ஆனால் இந்த தீர்ப்புதான் சரியானது என்று 2008 3  லா வீக்லி பக்கம் 698 பக்கத்தில் ஜஸ்டிஸ் சொக்கலிங்கம் எடுத்து கையாண்டு உள்ளார்

Comments

  1. இப்படிக் குழப்பங்கள் வரும்படி ஒரு சட்டம் இருந்தால் ஆளுக்கொரு நீதியென்று ஒவ்வொரு நீதியரசரும் அவர்கள் விருபபத்த்ற்கேற்ப தீர்ப்பை அளிக்க மாட்டார்களா? இப்படி ஐயம் இருப்பின் அதை முறையாக "கனம் கோர்ட்டார்" அவர்கள் அனிவரும் இணைந்து அவைகளை ஐயமில்லாத அளவிற்குத் திருத்த மாட்டார்களா? நீதி கிடைப்பதே கஷ்டம என்ற நி;லையில் இப்படி வேற்ய் குழப்பங்களா?

    ReplyDelete
  2. போட்ட கருத்துகளையெல்லாம் "காக்கா" தூக்கிட்டு போய்டுதா?
    காக்கா மேல ஒரு ரிட் போடணும், வக்கீலய்யா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64