இந்திய பெண்கள் சொத்துரிமைAct39/2005

ஆக்ட் 39 பார் 2005 சட்டம் கொண்டுவரப்பட்டதும் முந்தைய தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் காலாவதி ஆகிவிட்டது தற்போது புதிய சட்டப்படி தகப்பனார் இறந்து விட்டால்  அவரது கையில் உள்ள கூட்டு குடும்ப சொத்துக்கள் மகனோடு சேர்த்து மகளுக்கும் பிரிக்கப்படும் என்று இருந்தது . பிறகு வந்த தீர்ப்பில் 2008 3 லா வீக்லி  பேஜ் 1054  சட்ட நுணுக்கங்கள் ஆராயப்பட்டு , சட்டம் வருவதற்கு முன்பு தகப்பனார் இறந்து இருந்தால் அவருடைய சொத்திலும் பங்கு கிடைக்குமா என்பதே .இதிலும் நான் முன்பே சொல்லியது போல ஆக்ட் 1/90 படி கொடுக்கப்பட்ட ஜஸ்டிஸ் சீனிவாசனின் தீர்ப்பே இதற்கும் மேற்கோள் காட்டி இருந்தார்கள் .ஒரு இறந்து போன தகப்பனார் கூட்டு குடும்ப அதிகாரி என்று கருதிக் கொள்ள முடியாது .அவர் இறந்துவிட்ட பிறகு அவருக்கு கூட்டு குடும்பத்தில் கர்த்தா என்ற உரிமையும் இல்லை ,ஆகவே அவர் கையில் கூட்டுக் குடும்ப சொத்துக்கள் இருந்து இருந்தாலும் அவர் தற்போது இறந்து விட்டதால் அவருடைய வாரிசாக மகனுக்கு சமமாக மகளை நடத்த முடியாது. அந்த தகப்பனார் உயிரோடு இருந்தால் மட்டுமே மகளை மகனுக்கு சமமாக நடத்த முடியும். அப்போதுதான் மகனுக்கு இணையாக மகளுக்கும் பங்கு கொடுக்கப்படும் ,என்று DB தீர்ப்பில் சொல்லிவிட்டார்கள்.1989 இல் போட்ட சட்டம் முந்தைய தீர்ப்பின்படி வழி வழியாக 2005 சட்டத்திலும் தொடருவது ஒரு துரதிருஷ்டம். சட்டம் வருவதற்கு முன்பே தகப்பனார் இறந்து விட்டதை கவனித்த நீதிபதிகள் அந்த மகளுக்கு பிறப்பு உரிமை ,( Right by birth) மகனுக்கு சமமாக பிறப்பிலேயே உரிமை உண்டு என்று இருப்பதை ஏன் பார்க்க தவறி விட்டார்கள் என்று எனக்கு தோன்றுகிறது .அதே தகப்பனார் இறந்து போயிருந்தாலும் மகன்களுக்கு மட்டும் உரிமை உள்ளது என்று பார்த்த நீதிபதிகள் மகனுக்கு இணையாக பிறப்பு உரிமை, மகளுக்கும் உரிமை வந்துவிட்டது என்று ஏன் யோசிக்கவில்லை.அதன்படி அந்த மகளும் கூட்டுக் குடும்ப சொத்தை அடைய தகுதி உடையவராகிறார் என்று பார்க்க ஏன் தவறி விட்டார்கள் என்று தோன்றவில்லை . இந்த தீர்ப்பு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு. ஆகவே பின்னால் வரும் தீர்ப்புகளும் ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் எழுதப்படவில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக இந்த ஜட்ஜ்மெண்டை இந்த தீர்ப்பை பாலோ செய்து தீர்ப்பு எழுதினார்கள். அதனால் சென்னை உயர்னீதிமன்றத்தை பொறுத்தவரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை .2005 க்கு முன்பு தகப்பனார் இருந்திருந்தால் 2005 க்கு முன்பு பிறந்த பெண்கள் எந்த விதமான உரிமையும் அடைய முடியவில்லை. மேலும் இந்த சட்டம் 09.09.2005க்குபிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமா என்பதும் அலசப்பட்டது.இந்த மாதிரி தீர்ப்புகள் நீதிபதிகளின் பார்வையின் கோளாறா அல்லது சட்டத்தின் கோளாறா என்று விளங்கவில்லை.பின்னால் வரும் சில தீர்ப்புக்களை காணலாம். தொடரும்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64