இந்திய பெண்கள் சொத்துரிமை-15

நீதிபதிகளின் வார்த்தைகளில் சொல்வது என்றால் கோபார்சனர் உரிமை என்பது பிறப்பில் வருவது. அதை யாராலும், எந்த அடிப்படையிலும் , எதன் குறுக்கீட்டாலும் அது தடைபடாது. எப்போது கோபார்சனர் என்று குறிப்பிட்டு விட்டார்களோ அப்போதே அவருக்கு சொத்தில் உரிமை வந்து விடுகிறது. அந்த சொத்தின் உரிமை அவரது தகப்பனார் இறந்தாலோ ,இருந்தாலோ மட்டும் வருவதில்லை. அல்லது அந்த சொத்தின் உரிமை அவர் உயிரோடு இருந்தால்தான்  அந்த சொத்தில் மகள்கள் உரிமைகோரலாம் என்று சொல்ல முடியாது .ஏனென்றால் எப்போது பிறந்தாரோ அப்போதே அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை அவளுக்கு வந்துவிட்டது. முந்தைய நீதிபதிகள் பல வழக்குகளில் குறிப்பிட்டது போல ஒரு பெண்ணுக்கு சொத்தில் உரிமை வர வேண்டும் என்றால் அவரது தகப்பனார் உயிரோடு இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது தேவையற்றது. எப்படி ஒரு ஆண் தன் பிறப்பிலேயே குடும்ப சொத்துக்கு உரிமை ஆகிறாரோ அதேபோல ஒரு பெண்ணும் பிறந்த உடனேயே குடும்ப சொத்துக்கு உரிமையாளராகி விடுகிறார். அந்த உரிமை அடைய அவரது தகப்பனார் உயிரோடுதான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பல தீர்ப்புகளால் ஏகப்பட்ட பெண்கள் தனது உரிமையை இழந்து விட்டார்கள். இந்த வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்த சொத்தில் பெண் தனது உரிமையை நிலைநாட்ட பாகப்பிரிவினையும் கேட்க முடியும். ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் தகப்பனார் இறந்த பிறகும் அந்த குடும்பத்து சொத்து முறைப்படி  பாகப்பிரிவினை ஆகாமல் இருக்க வேண்டும் . அந்த சொத்தில் 09.09.2005 ல் இந்த சட்டம் வந்தபிறகு மகன்கள் மட்டும் உரிமை கேட்க முடியாது. ஆனால் முந்தைய பழைய வழக்கப்படி தகப்பனார் இறந்து இருந்தால் அந்த குடும்பத்து சொத்து notional partition, ஒரு கற்பனையான பாகப்பிரிவினை என்ற ரீதியில் மகன்களுக்கு போய் சேர்ந்து விடும். ஆனால் 2005 சட்டத்தின்படி அந்த சொத்து கற்பனையான பாகப்பிரிவினால் பிரிக்கமுடியாது.அதாவது 20 .12 2004க்கு முன் அந்த பாகப்பிரிவினை நடந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் 09.09. 2005 முதல் அந்த குடும்பத்து சொத்தில் சம உரிமை கேட்க மகள்களுக்கும் உரிமை உண்டு. இந்த தகப்பனார்  உயிரோடு இருந்தால்தான் மகள்களுக்கு பங்கு வரும் என்ற உலாவி வந்த கருத்துக்கு இந்த தீர்ப்பின் மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டது .ஏனென்றால் 2020 தீர்ப்பு வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட உச்சநீதிமன்றத்தில் திரும்பத் திரும்ப இதே பிரச்சினை எழுப்பப்பட்டு விட்டது. ஆகவே இதற்கு தீர்வு காணவே உச்ச நீதிமன்றம் ஃபுல் பென்ச் அமைத்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டியது .இதன் மூலம் பெண்கள் எப்போது பிறந்திருந்தாலும் அதாவது 1956 அல்லது அதற்கு முன்பு பிறந்திருந்தால் கூட இறந்து போன தகப்பனாரின் சொத்துக்கள் குடும்பத்து சொத்துக்களாக பிரிவுபடாமல் இருந்தால், 2005 க்கு பிறகு கூட எந்த மகளும் பாகப்பிரிவினை  கேட்பதற்கு உரிமை உண்டு. ஆகவே இந்த தேதியில் பிறந்த மகள் தான் இந்த தேதிக்கு பின்னர் முன்னர் பிறந்த மகளுக்கு கிடையாது என்ற தீர்ப்புகளும் அடிபட்டு போனது. இந்த தீர்ப்பின் மூலம் பெண்களுக்கு புதிய வெளிச்சம் தோன்றியது  தொடரும்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64