வெளிச்சம் பரவட்டும். 31

கும்பகோணத்தில் ஓடும் அரசலாறு நதியின் கரையில் உள்ள தாராசுரம் என்ற சோழ காலத்து புகழ்பெற்ற ஊரே என் தாத்தா கோவிந்தசாமி வாழ்ந்த ஊர் .கிட்டத்தட்ட செல்வந்தரான எனது தாத்தா மளிகை கடை தொழிலை நடத்தி வந்தார். இதன்பிறகு வீட்டுக்கு பின்னால் இரண்டு செக்குகள் எப்போதும் எண்ணெய் ஆட்டிக் கொண்டே இருக்கும் .எண்ணெய் பிசினஸ் வேறு . அததோடு சேர்ந்து மளிகை கடை.யில்  ஏராளமாக வசதியோடு வாழ்ந்தார் .அதற்கு அடையாளம் அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு வரிசையாக 7 மகன்கள் ஒரு மகள். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் மூன்று மகள்கள். தீவிரமான கடவுள் பக்தரான எனது தாத்தா திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அடிமையானார். எப்போதும் அவர் வாயிலிருந்து கோவிந்தா கோவிந்தா என்ற நாமமே எதிரொலிக்கும்.ஓய்வு நேரங்களில் மடத்தில் உள்ள ஒரு ஈசி தேரில் படுத்துக் கொண்டு கடவுள் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட தீவிரமான கடவுள் பக்தரான அவர் 63 நாயன்மார்களில் ஒருவரான கலிய நாயனார் எங்கள் வம்சத்தை சேர்ந்தவர் .அதற்காக அவர்  பெயரில் மடம்  ஒன்றை ஸ்தாபிதம் செய்தார். அதற்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தண்ணீர் குளத்தை வெட்டினார். அந்த மடத்திற்கு குருபூஜைக்காக வேண்டி செலவுகளுக்காக கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தார். அதில் ஒரு தென்னந்தோப்பும் அடக்கம். இவ்வளவு செய்த பிறகும் தனது சொந்த செலவில் வாங்கிய பிறகும் இதற்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தனது ஜாதிக்காரர்களுக்குள் ஐந்து குடும்பத்தை தேர்ந்தெடுத்து அந்த ஐந்து குடும்பத்தில் பிரதிநிதிகளாக ஒருவரை நியமித்து ஒரு டிரஸ்ட் வீட ஏற்படுத்தினார் .அந்த டிரஸ்டில்  தனது குடும்பத்தில் எனது அப்பா சீனிவாசன் அவர்களை எங்கள் குடும்பத்தின் சார்பாக டிரஷ்டியாக நியமித்தார் .இது எல்லாம் நடந்தது 19 25 டு 30 வாக்கில் . எனப்பாவுக்குபிறகு நாந்தான் அதிகாரபூர்வமான டிரஸ்டி.அந்த மடத்தில் குருபூஜை அப்போது சாமியார்கள் வந்து தங்கி நான் பார்த்திருக்கிறேன். குருபூஜை என்று எல்லா வீடுகளுக்கும் அழைப்பு விடுப்பார். குடும்பத்து உறுப்பினர்கள் எல்லோரும் கலந்து கொள்வோம் ஆனால் எங்களது தந்தையர்கள் யாரும் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள். அந்த கதைக்கு பின்னால் வருவோம். இப்படிப்பட்ட தீவிரமான கடவுள் பக்தரான எனது தாத்தாவுக்கு விரோதிகள் வீட்டிலேயே முளைத்தார்கள் .மிகப்பெரும் சக்தி வாய்ந்த எனது தாத்தாவை எதிர்த்து அவரது கடவுள் பக்தியையும் மூடத்தனத்தையும் அவரது பிள்ளைகளே எதிர்த்து பேச ஆரம்பித்தார்கள். அதற்கு தலைவர் எனது பெரியப்பா சக்கரபாணி அவர்கள் .அண்ணன் தம்பிகள் ஏழு பேரும் எனது பெரியப்பா சக்கரபாணியின் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மீறி பேச மாட்டார்கள் . சொன்னதை செய்வார்கள் ஆகவே எல்லா சகோதரர்களும் எனது பெரியப்பாவின் கட்டளைப்படி எனது தாத்தாவை எதிர்க்க ஆரம்பித்தார்கள் .1929 லேயே நீதிக்கட்சியில் சேர்ந்து  நீதி கட்சிக்காக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதிலும் தீவிரமாக தனது அப்பாவின் திருப்பதி பக்தியை கிண்டல் செய்து தெருமுனைப் பிரச்சாரம் செய்து கேலி செய்து ஊர் மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். ஏனென்றால் வெளியில் பிரச்சாரம் செய்து செய்கிறீர்களே உங்கள் வீட்டில் உங்கள் தந்தை இவ்வளவு கடவுள் பக்தி உள்ளவராக இருக்கிறாரே அதற்கு என்ன பதில் என்று ஊரார் கேட்டதற்காக தனது தந்தையை எதிர்த்து நாத்திக பிரச்சாரம் செய்தார்கள். அதனால் குடும்பத்தில் பிளவு அதிகமாகியது. ஆகவே தான் கலியநயினார் மடம் ஸ்தாபிக்கப்பட்பட்டது .இந்த மடத்தை தனது மகன்கள் வீணாக்கி விடுவார்கள் என்பதற்காக தனது ஜாதிக்காரர்களை சேர்த்துக்கொண்டு டிரஸ்ட் அமைத்தார் .அதில் நம்பிக்கையாக தனது குடும்பத்திற்கு வேண்டியவராக தனது மகன் சீனிவாசனை நியமித்தார். பிறகு ஒரு கட்டத்தில் மகன்கள் இடையே பிளவு அதிகமாக தான் கட்டியிருந்த பெரிய வீட்டை விட்டு ஊருக்கு வெளியே அமைந்திருக்கும்  மடத்திலேயே தங்க குடிவு செய்து விட்டார். அப்போது தனது மகன்கள் 7 பேரையும் அழைத்து இனி எனக்கும் உங்களுக்கும் சரியா வராது ,ஆகவே நான் வெளியேறி விடுகிறேன் என்று சொல்லிவிட்டே வந்து விட்டார். பிறகு அவர்களையெல்லாம் அழைத்து தனக்குள்ள சொத்து பத்துக்களை அவருக்கு உள்ள ஏழு பேருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார். தனது பெரிய வீட்டை யும், வீடு உள்பட.  அப்போது 7 பிள்ளைகளில் இருவருக்கு தான் திருமணம் ஆகியிருந்தது . திருமணம் ஆகாத மகன்களுக்கு ஒரு உதவி தொகை கொடுத்தார் . இதன்பிறகு உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை இனி நான் இருக்கும் கலிய நாயன்மார் மடம் பக்கம் யாரும் வந்து என்னை பார்க்க கூடாது. உதவி செய்கிறேன் என்று என்னிடம் அணுக கூடாது. என்னிடம் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விட்டேன். இனி உங்க வழி வேறு என் வழி வேறு என்று சொல்லிவிட்டு தனது இரண்டாவது மனைவியுடன் கல்யாண நயினார் மடத்தில் வந்து தங்கி விட்டார் .இறுதி வரை அந்த மடத்திற்கு பூஜை செய்து கொண்டு தனது காலத்தை கழித்தார் .அந்த வயலில் இருந்து வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு காலத்தை கழித்து விட்டார். அவருடைய மகன்களில் இருந்து  எந்த விதமான உதவியும் அவர் கடைசி வரை எதிர் பார்க்கவில்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரை இந்த ஏழு பேரும் அவர் இருக்கும் இடம் போக மாட்டார்கள். ஆனால் நாங்கள் பேரப்பிள்ளைகள் வீட்டில் எல்லாம் போய் பார்த்து வரச் சொல்வார்கள் . நாங்கள் அடிக்கடி சென்று வருவோம் எனது தாத்தா இறந்த போது எனக்கு 10 வயது. எங்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார் .ஆனால் போகும்போதே எங்கள் எல்லோருக்கும் ஒரு உத்தரவு என்னவென்றால் அவர் பூஜை செய்யும் நேரம் போக கூடாது. ஏனென்றால் அவர் பூஜை முடித்ததும் நெய்வேத்தியத்திற்காக சிறிது சமைத்து வைத்திருப்பார்கள் .அதில் எங்கே நாங்கள் போய் பங்கு போட்டு விடுவோமோ என்று எங்கள் வீட்டில் எல்லாம் எங்களுக்கு கட்டுப்பாடு. நாங்கள் பெரும்பாலும் அதே போலவே நடந்து கொள்வோம். வருடம் ஒருமுறை நடக்கும் அந்த குருபூஜையில் எங்கள் குடும்பத்தார் எல்லோரும் கலந்து கொள்வோம். எங்கள் தந்தையர்களிடம் சொன்னதைப் போல் அவர் கடைசி வரை வாழ்ந்தார் .அவருக்கு என்பது பிராயம் முடிந்த பிறகு பிள்ளைகள் எல்லோரும் சென்று அவரிடம் என்பதுக்கு என்பது திருமணம்  செய்ய உத்தரவு கேட்டார்கள் .அவரும்  சம்மதித்தார் .அதன் பிறகு அவர் இறப்புக்கு தான் பிள்ளைகள் வந்தார்கள் .சிறப்புடன் அடக்கம் செய்தார்கள் இதுபோல் ஒரு தனிப்பெரும் ராஜ்ஜியத்தோடு வாழ்ந்தவர் எனது தாத்தா கோவிந்தசாமி. மிகப்பெரிய ஆளுமை .அவரது நினைவாக எங்கள் ஊரில் அவர் பெயரில் ஒரு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது . இனி வருவது புரட்சிகாலம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64