வெளிச்சம் பரவட்டும் 33
என்னைக் கவர்ந்த முதல் மனிதர் வேறு யாருமல்ல எனது தந்தை சீனிவாசன் அவர்களே. சிறுவயதில் எனக்கு கராராகவும் கண்டிப்பாக தென்பட்ட எனது தந்தை எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் அவரை ஆச்சரியமாக தான் பார்த்திருக்கிறேன். வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்த போதிலும் நானே அவருக்கு செல்ல பிள்ளை. காரணம் நான் அவரைப் போலவே இருப்பதால் இருக்குமோ என்னவோ ஆனால் எனது தந்தை நல்ல கலராகவும் அழகாகவும் இருப்பார்.ஏன், எங்கள் குடும்பத்திலேயே அவர் ஒருத்தர் தான் நல்ல சிவப்பு .பார்ப்பதற்கும் அழகா இருப்பார். ஆனால் எனது அம்மா கருப்பாகத்தான் இருப்பார் பிள்ளைகள் எல்லோரும் கருப்பு தான் நான் உட்பட ஆனாலும் அவர் என்னிடம் தனிப்பட்ட பிரியம் காட்டுவார் .நான் கல்லூரியில் படிக்கும்போது பியுசியில் பெயில் ஆகிவிட்டேன் .இருந்தபோதிலும் எப்படியோ என்னை திரும்பத் திரும்ப படிக்க வைத்து பாஸ் செய்த பிறகு கல்லூரியிலும் சேர்த்து விட்டார் எனக்குபடிப்பில் ஆர்வம் இல்லாதபோதும். அவருடைய ஆசைக்காக பின்னர் பி எல் படித்தேன .அவரது ஆசையை பூர்த்தி செய்தேன். ஆனால் திருமண விஷயத்தில் எனக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்துவிட்டார் .நான் தட்ட மாட்டேன் என்ற நம்பிக்கையில் .ஆனால் நான் எனது அக்காள் மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்ன பிறகு என்னிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். இது ஒன்றுதான் அவரது விருப்பத்துக்கு மாறாக நாந் செய்தது . ஆனால் சிறிது நாளில் சரியாகி விட்டார் .எனக்கு வேண்டியது மட்டுமல்ல எனது மனைவி அவரது பேத்தி ஆகையால் அவருக்கு வேண்டியதையும் அவரே தான் செய்தார் . கல்லூரியில் படிக்கும் காலம் முதல் நான் ஒரு சுதந்திர பறவை .நான் எவ்வளவு செலவு செய்தாலும் என்ன ஏது என்று கேட்கவே மாட்டார் .அந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்து இருந்தார் .கடைசியில் எல்லோருக்கும் சொத்தை சரியாக பிரித்துக் கொடுத்தார் எனது தந்தையின் அறுபதாவது பிறந்தநாளின் போது என் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதேபோல் அன்றைய தேதியில் முடித்து வைத்தார். தனது 66 வயதிலேயே இறந்துவிட்டார் என் செல்ல தந்தை
எனது அப்பா ஒரு எளிமையானவர்
ReplyDelete