வெளிச்சம் பரவட்டும் 34
சிறுவயதில் எங்களுக்கு பொழுதுபோக்கே காலையில் எழுந்தவுடன் சினிமா போஸ்டர் ஒட்டுவதை பார்ப்பதுதான்.1962,ம் ஆண்டு
. அப்போது எனக்கு 12, 13 வயது இருக்கும். எங்கள் ஊர் குளக்கரைக்கு எதிரில் பெரிய வால்சுவற்றில் ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி இருந்தார்கள் .அதாவது இப்போது சினிமாஸ்கோப் என்ற பெயரில் ஒட்டுவார்களே அதுபோல போஸ்டர் .சாதாரணமாக எங்கள் ஊரில் டூரிங் தியேட்டர் என்பதால் சின்ன சின்ன போஸ்டர்கள் மட்டுமே ஓட்டுவார்கள். இந்த படத்தில் போஸ்டர் நான் வியந்து பார்த்தேன். அப்போது அதில் போட்டிருந்தது 125 லட்ச ரூபாய் செலவில் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்ட படம் என்று இருந்தது .அப்போது அதன் மதிப்பு தெரியவில்லை இருந்தாலும் இந்த போஸ்டரின் மதிப்பு தெரிந்தது. எனக்கு இந்த படத்தை எப்படி பார்ப்பது என்று யோசித்தேன் ஆனால் அதற்கு வழி இல்லை. எனென்றால் டவுனில் வரும் படங்களை பார்ப்பதற்கு எனது அப்பா அனுமதிக்க மாட்டார். டூரிங் தியேட்டர் படம் மட்டும் தான் பார்க்க அனுமதிப்பார்கள் .ஆகவே இந்த படம் நாளடைவில் மெள்ள் மெள்ள என் நினைவை விட்டு அகன்றது. பின்பு கல்லூரி சென்ற பிறகும் இந்த படம் திரையிடப்படவில்லை என்பதால் அதனை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் சட்டக் கல்லூரியில் சென்னையில் சேர்ந்த பிறகு தான் நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த அத்தனை ஹிந்தி படங்களும் அத்தனை பழைய தமிழ் படங்களையும் எல்லா தியேட்டரிலும் விடாமல் பார்த்தேன். அப்படி நான் தேடி கண்டுபிடித்த படம் தான் இந்தி திரைப்படம் மொகலே ஆஜம் படம் பார்த்த உடனே வியந்து போனேன். அவ்வளவு ஒரு பிரம்மாண்டமான ஓப்பனிங் .கிரேட் அக்பர் பிரித்விராஜ் கபூர் அவருடைய மகனாக சலீமாக திலீப் குமார் அவருடைய காதலி அனார்கலி ஆக கிரேட் ஆக்டர்ஸ் மதுபாலா
ஓப்பனிங் சீனிலேயே படத்தின் பிரம்மாண்டத்தை காட்டி விடுவார்கள் .அக்பர் ஒரு யானையில் ஏறிக்கொண்டு போர்களத்திற்கு செல்லும் காட்சி மியூசிக் என்றால் அப்படி ஒரு மியூசிக் .கம்பீரமானது, படத்தில் வரும் யானையா, அக்பரா அல்லது இந்த மியூசிக் கா, என்று போட்டி போடும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும். படமும் அற்புதமான படம். அக்பரின் மகன் சலீம் ஒரு நடன மங்கை அதிலும் அடிமை நடன மங்கையை காதலிக்கிறான். இந்த விஷயம் அக்பருக்கு தெரிய வர உடனே அவளை பாதாள சிறைக்குள் போட்டு விடுகிறார். அவளுக்கு கையிலும் காலிலும் இரும்புச் சங்கிலிகள் போட்டு பிணைத்து விடுகிறார் .அந்த அனார்கலி தான் மதுபாலா தி கிரேட் மதுபாலா அழகின் உச்சமான மதுபாலா, அதுவரை அதுபோன்ற ஒரு அழகான நடிகையை நான் பார்த்ததில்லை கொட்டிக் கிடக்கும் அழகு .ஆனால் இந்த படத்திலும் அவர் மகிழ்வாக இருந்து பார்த்ததைவிட சோகமான மதுபாலாவே பார்க்க முடிந்தது. ஆனால் அந்த சோகத்திலும் இவ்வளவு அழகை காட்ட முடியுமா என்பதை எனக்கு வியப்பாக இருந்தது .அதாவது ஒரு மாதுளை மலர் மலர்ந்தால் அந்த ரத்த சிவப்போடு எப்படி இருக்குமோ அப்படி ஒரு மதுபாலா அப்படி ஒரு அனார்கலி .யார் தான் இளைஞர்களாக இருப்பவர்கள் ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் அவர் முகத்தில் ததும்பும் அந்த ஏக்கமும் அடக்கமும் அவருடைய அழகுக்கு அழகு சேர்க்கும். அப்படிப்பட்ட அனார்கலி தன்னிலை உணர்ந்தவர் .இளவரசன் தன்னை காதலித்தாலும் அதற்கு உடனே ஆட்பட மாட்டாள் இது எங்க கொண்டு விடுவோம் என்று அவளுக்கு உள்ளூர பயமாகவே இருக்கும் எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே என்று சலீம் கொடுத்த உற்சாகத்தினாலும் அவள் மனது இளகி விடவில்லை. தன்னடக்கமாகவே இருந்தாள் இருந்த போதிலும் அந்த கிரேட் அக்பர் அவளை சிறையில் அடைத்து விட்டார் .அப்போது அவருக்கு மந்திரி ஒரு யோசனை சொல்வார் அனார்கலிக்கு உயிர் பிச்சை கொடுங்கள். அவள் சிறந்த நடன அழகி .அவள் வாழ வேண்டும் அதனால் அவள் சலீமை காதலிப்பதை விட்டு விட்டால் அவளை விடுதலை செய்து விடலாம் என்று யோசனை சொல்கிறார். அதை ஏற்ற அக்பர் சிறைக்கு சென்று அனார்கலி சந்திக்கிறார். எந்த அனார்கலியை, இந்த இந்திய சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளும் அவ்வளவு பெரிய சாம்ராஜ்ய அதிபதி அக்பர், ஒரு ஏழை அதிலும் அடிமை அவளை போய் சந்திக்கிறார். அவளை சந்தித்து ஒரு கோரிக்கையை வைக்கிறார். கோரிக்கை இது தான் நீ என் மகனை மறந்து விட வேண்டும் அதற்கு பதிலாக உன்னை விடுதலை செய்து விடுவேன் என்று கேட்கிறார். பாவம் ஒரு பருந்தைப் பார்த்த கோழிக்குஞ்சு போல் நடுங்குவார் மதுபாலா .அந்த இடத்தில் ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தி தன்னிடம் வந்து இந்த இது போல் ஒரு கோரிக்கை வைக்கிறாரே என்று அதற்கு ஒப்புக்கொள்கிறார் .மறுநாள் தர்பாரில் அவளுடைய நடனம் அக்பரின் கோரிக்கை நீ நடனமாடிக் கொண்டு உனது எண்ணத்தை வெளிப்படுத்தி விட வேண்டும் நீ சலீமை காதலிக்கவில்லை என்பதை இந்த உலக அறிய நீ உனது பாடலில் சொல்லி விட வேண்டும் என்பது கட்டளை . தர்பார் ஹால் தர்பார் ஹால் என்றால் பார்த்து மயக்கம் படாதவர்கள் இருக்க முடியாது .அது ஒரு கண்ணாடி மாளிகையில் வைத்து அந்த ஷூட்டிங் எடுத்திருப்பார்கள் .கண்ணாடிகள் ஒரு முகம் நூறு முகத்தை ஆயிரம் முகத்தை காட்டுவது போல் அமைத்து இருப்பார்கள். அந்த செட்டிங்ஸ் ..தர்பார் கூடிவிட்டது மன்னர் அரியணையில் அமர்ந்திருக்கிறார் பக்கத்தில் சலீம் அவரது தாயார் மற்றும் தர்பார் காலில் அத்தனை அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அந்த அழகு நிலா அந்த அழகு மயில் தர்பார்ஹாலில் நாட்டியமாடுகிறது நாட்டியம் ஆடிக்கொண்டே தனது எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறாள் .ஆனால் அவள் எண்ணத்தை வெளியிட்டது, அக்பரின் எண்ணத்துக்கு விரோதமானது. அப்போது அவள் துணிந்து பாடுகிறாள். இந்த உலகத்தில் காதலை தவிர வேறு எதுவும் இல்லை .அதனால் காதல் கொண்டால் எனக்கு ஒன்றும் பயமில்லை .எனது உயிரே போனாலும் சரி எனது காதலை விட்டுக் கொடுக்க மாட்டேன். யாருக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற ரீதியில் அவரது பாடல் அமைந்துள்ளது.ஆகவே என் காதலை பறிக்குமுன் என் உன் உயிரை பறித்துவிடுங்கள் என்று சலீம் அருகில் சென்று அவன் இடுப்பில் வைத்திருந்த குத்துவாளை சரக்கென்று எடுக்கிறார் .எடுத்து அக்பரின் முகத்துக்கு நேரே சென்று அந்தக் கத்தியை நீட்டுகிறாள். தர்பார்மண்டப்மே அதிர்ந்து விடுகிறது .அக்பருக்கு அவமானமான அவமானம். ஒரு ஏழை சிறுமி அதிலும் ஒரு அடிமை தனது மகனை காதலிக்கிறேன் என்று தர்பார் ஹாலில் சொல்லிவிட்டாலே .அதிலும் இந்த அகிலமே நடுங்கும் அக்பருக்கு முன். நான் உனக்காக நடுங்க மாட்டேன் என்று அனார்கலி சொல்லிவிட்டதால் அவருக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து ரத்த சிவப்பாகிவிடும் முகம். அப்போது உடனே இந்த பாடல் முடிந்தவுடன் மீண்டும் அவளை சிறையில் அடைத்து விடுவார்கள். மதுபாலா அந்த கத்தியை நீட்டியது ஒரு மென்மையான புறா கத்தியை எடுத்து ஒரு ராஜாளியை குத்த வருவது போல இருக்கும். அப்படிப்பட்ட மென்மையான அனார்கலி, தனது காதலுக்காக அந்த மென்மையான இதயத்தில் ஒரு கடினமான சித்தம் காதலாக ஏறி இந்த உலகத்தை மறந்து விட்டாள். ஆகவே அவள் மீண்டும் சிறைப்பட்டாள். சிறைப்படுத்தப்பட்ட பின் மகன் சலீம் தர்பார் ஹாலில் தந்தையோடு நேருக்கு நேர் மோதுகிறார் நான் அவளைத்தான் மணப்பேன் என்று அக்பர் மறுப்பார். தந்தை மகனுக்கும் மோதல் முற்றுகிறது .அரங்கத்தை விட்டு வெளியேறுகிறார் சலீம் ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டர் அப்பால் உள்ள ஒரு கோட்டையை தன்வசப்படுத்திக் கொள்கிறார் பின்பு அக்பர் உடன் நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிடுகிறார் .அந்த போர்க்களத்தில் சந்திக்க தந்தையும் மகனுமே இருவரும் நேருக்கு நேர் போரிடுகிறார்கள்.ஆனால் அக்பர் இவள் இருந்தால் தான் பிரச்சனை என்று அனார்கலி யை உயிரோடு சமாதி வைக்க ஏற்பாடு செய்து விடுகிறார். இப்போது கிளைமாக்ஸ் சீன் கிளைமாக்ஸ்ல் மந்திரியின் யோசனை படி அவளை விட்டு விடலாம் என்று முடிவாகிறது. ஆனால் அதற்குள் அனார்கலிக்கு உயிருடன் சமாதி வைத்து விடுகிறார்கள். சலீம் அந்த இடத்திற்கு வந்து முட்டி மோதுகிறான் மயக்கமடைகிறான் அல்லது இறக்கிறான். அப்போது சமாதிக்கு பின்புறம் இருந்து ஒரு ரகசிய வழியாக அக்பர் அனார்கலி இடம் வருகிறார் .அப்போது அவர் சொல்கிறார் நான் ஒன்றும் இரக்கமற்ற பாவி அல்ல இந்த ராஜ்ஜியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு செய்தேன் இனி நீ இந்த ராஜ்யத்திற்குள் வராமல் வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள் என்று அவருடைய தாயாரிடமும் தங்கையுடனும் அனுப்பி விடுகிறார். அவள் நடைபிணமாக சோக சித்திரமாக இந்த உலகத்தை இழந்தவளாக அல்லது இறந்தவளாக அந்த அக்பரை ஏறிட்டு பார்க்கிறாளே ஒரு பார்வை உலகத்தில் உள்ள சோகங்கள் அத்தனையும் ஒன்றாக சேர்ந்து அவளுடைய முகத்தில் பிரதிபலிக்கும். ஆனால் பின்னால் இருந்து அந்த ஷாட் காட்டுவார்கள் அவள் உயிரோடு சென்றாளா அல்லது நடை பிணமாக சென்றாளா என்று தெரியாமல் காட்டி விடுவார்கள். இந்த படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் சலீம் முட்டி மோதி அவனும் இறப்பதாகத்தான் கதைகளில் இருக்கும் ஆனால் இதுபோல் அனார்கலிக்க உயிர் பிச்சை கொடுப்பதற்கு என்ன காரணம் வடநாட்டில் அக்பரின் புகழ் ஓங்கிருந்த ஒதுங்கி இருந்தது அக்பரின் பெருந்தன்மையை காட்டுவதற்காகவும் தான் ஒன்றும் காதலுக்கு விரோதி அல்ல என்று சொல்வது போலவும் கடைசி கிளைமாக்ஸ் காட்சி அமைந்திருந்தது .எனக்கு கிளைமாக்ஸ் காட்சி இஷ்டமில்லை. அந்த அமர காதல் தோற்கத்தான் வேண்டும் .அதனால் தான் இந்த உலகம் முழுவதும் அனார்கலி சலிமும் காதல் இன்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் என்னை கவர்ந்த முக்கியமான சீன் அந்த கண்ணாடி மாளிகையில் அக்பரை எதிர்த்து அந்த மதுபாலா பொருள் புதிர்ந்த ஒரு பாடலோடு ஒரு நடனத்தையும் ஆடி வியக்க வைக்கும் சீன் தான் என்னை கவர்ந்த சீன் தொடரும்
எப்படி சொல்லியிருக்கேன்
ReplyDeleteஅசத்தல் ஆஜம் ...
ReplyDelete