வெளிச்சம் பரவட்டும் 35

பக்க மீரா கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது அல்லவா .நான் பிறப்பதற்கு முன்பே வந்த சினிமா படம் .நான் சிறுவனாக இருக்கும்போது பெரியவர்கள் பேசிப்பாங்க எம் எஸ் சுப்புலட்சுமி நடிச்ச படம் மிகவும் அருமையான படம் ஏராளமான பாடல்கள் என்று.அப்போ நம்ம வயசுல இந்த மாதிரி பாடல்கள் நிறைந்த படங்கள் தவிர்த்து சிவாஜி எம்ஜிஆர் படங்கள் தான் பெரும்பாலும் நாங்க பார்ப்போம். கல்லூரி காலங்களில் ஒரு நாள் இந்த படத்தின் கதை வசனத்தை மட்டும் கேட்டேன். அப்போது முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. படத்தையும் பார்த்தேன். அடடா என்ன ஒரு படம் எல்லாருக்கும் தெரியும் மீரா வந்து கிருஷ்ண பக்தை என்று. அந்த கிருஷ்ண பக்தை கூட இப்படி இருந்திருப்பாளான்னு நமக்கு தெரியாது.நம்ம கற்பனையிலும் யோசிக்க முடியாது இந்த மீரா.அந்த மீராவாக எம் எஸ் சுப்புலட்சுமி மேவார் மகாராஜாவை கல்யாணம் பண்ணிட்டு வாரா. அவளோட அழகு அறிவுக்காக தான் மகாராஜா கல்யாணம் பண்ணிக்கிறாரு. ஆனா அவர் நேரில் பார்க்கும்போது அந்த அழகு பிரமை யூட்டும் அழகு ,அவர் எதிர்பாராத அழகு, யார் பார்த்தாலும் கையெடுத்து கும்பிடுவார்கள் அப்படி ஒரு அதிசயமான ஒரு இன்னசென்ட்டான முகம். எப்பவெல்லாம் சுப்புலட்சுமி மீராவை மகாராஜா மிகவும் காதலோடு அணுகும் போதெல்லாம் அவள் சிறுவயதில் இருந்தே கிருஷ்ண பக்தையாக வளர்ந்ததால் அவளுக்கு இந்த காதல் விளையாட்டுகள் எல்லாம் தெரியவில்லை. அப்போது கூட அந்த மாதிரி நேரங்களில் கூட அவள் இதோ கண்ணனுக்கு ஒரு பூஜை செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சிரித்த முகத்தோடு போய்விடுவார் .இதற்காக மகாராஜாவின் காதலை வெறுத்தாரா என்று கூட தெரியாது அவருக்கு காதல் என்பதும், இல்லறம் என்பதும் அது கூட அவருக்கு தெரியவில்லை .எப்போது பார்த்தாலும் பக்திதான் பாடல்கள்தான். மகாராஜா ஏதும் பேச விழையும் போதெல்லாம் அவள் கண்ணனின் பெருமைகளைப் பற்றிய பேசுகிறார். எல்லையற்ற ஒரு ஆனந்தத்தில் மகாராஜா இருக்கிறார் அவரிடம் நாம் இதெல்லாம் பேசலாமா கூடாதா என்பதெல்லாம் அவள் அறியவில்லை .ஆனாலும் கண்ணனின் புகழைப் பற்றியே பேசுவதால் மகாராஜாவுக்கு அவர் மீது வெறுப்பு வந்து விடுகிறது .ஒரு கட்டத்தில் அவள் நான் பூஜை செய்ய வேண்டும் எனக்கு பக்கத்திலேயே ஒரு கோயில் கட்டி கொடுங்கள் என்று மகாராஜாவிடம் கேட்க அதற்கும் சரி என்று ஒரு கோவிலை கட்டி கொடுத்து விடுகிறார் மகாராஜா .அப்படி யாவது தன் வழிக்கு இணங்குவாள் என்ற ஆசையினால் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் .கோவில் கட்டி முடிந்த பிறகு கிட்டத்தட்ட மீரா கோவிலிலே தங்கி விடுகிறார். அவருக்குத்தான் மகாராஜாவை திருமணம் செய்திருக்கிறோம் நமக்கு ஒரு இல்லறம் உண்டு அவருடைய தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதெல்லாம் அவர்கள் அவளுக்கு அதெல்லாம் தெரியவே இல்லை. புரியவும் இல்லை .கண்ணனின் ஆழ்ந்த பக்தியில் மூழ்கி போய் பரவசப்படுகிறார். எந்த நேரத்திலும் கண்ணன் ,கண்ணனை பற்றி பாடல். இதனால் அவருக்கு ஏராளமான பக்த கோடிகள் கோவிலில் சேர்ந்து விடுகிறார்கள் .கோவிலை விட்டு அரண்மனைக்கு செல்லவே கூட நேரமில்லை அப்போது மிகவும் கோவப்பப்பட்ட மகாராஜா அவரை பார்த்து நீ பேசாம கண்ணனே கல்யாணம் செய்திருக்கலாம் என்று சொல்ல, அப்படின்னு சொன்ன உடனே அதற்கும் அவள் சிரித்துக் கொண்டே ஆம் நான் சிறுவயதிலேயே கண்ணனை திருமணம் செய்து கொண்டேன். அந்த அந்த சின்ன விக்ரம் தான் என்கிட்ட இன்னமும் இருக்கு. கண்ணனை நான் திருமணம் செய்து கொண்டேன் எனக்கு இனி திருமணம் என்பது யாரிடமும் கிடையாது .அப்படின்னு தன்னை மறந்து சொல்லி விடுகிறாள்.இதை கேள்விப்பட்ட மகாராஜா இவள் நிஜமாகவே கண்ணனை கல்யாணம் செய்துகொண்டாலோ என்ற எண்ணத்தில் அவரது கோயிலை பீரங்கி வைத்து இடித்து விடுகிறார் .அப்போதுதான் அவளுக்கு தன் நிலை புரிகிறது இனி நான் இங்கு இருக்க லாயக்கில்லை. நான் கண்ணனை நோக்கி போக வேண்டும் என்று இன்னும் கண்ணன் பிறந்த மதுரா நோக்கி செல்ல அவருடன் சேர்ந்து ஒரு பெரிய பக்த கோடிகள் பட்டாளமும் செல்கிறது. கண்ணன் பிறந்த இடம் பிருந்தாவனம் அப்படியெல்லாம் சுற்றி பார்த்து சுற்றி பார்த்து மீராவுக்கு அவரை பார்க்கவேண்டும் என்ற தாபம் ஏற்பட்டுவிடிகிறது. அந்த காட்சிகளில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் நடிப்பு அப்பாரமாக இருக்கும் . அவரது பேரழகை அவரது இயல்பான நடிப்பும்,பாடல்களும் மறைத்துவிடும்.அந்த  மீராவுக்கு கடைசியாக கண்ணன் இருந்த துவாரகை யை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் துவாரகை நோக்கி நடக்கிறாள்  துவாரகை நோக்கி நடக்கையில் அவருக்கு ஏற்படும் அந்த உற்சாகம் பக்தி எல்லாமே  அதாவது அதில் ஒரு வேட்கை இருக்கும். அது எப்படி சொல்லுவது என்றால் அவர் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைக்க ஓடுவது போல் , அந்த மாதிரி ஒரு கட்டத்துக்கு மீரா வந்து விட்டாள் .துவாரகை நெருங்க நெருங்க உச்சம் அடைகிறார். அவரது உயிர் அவளை விட்டு முன்பு போய் விடுவோம் என்பது போல காட்டியிருப்பார்கள். அந்த கண்ணனை நினைத்து துவாரகையின் வாசலில் கால் எடுத்து வைக்கும் போது அந்த துவாரகையே நடுங்குவது போல் காட்டுவார்கள். உடனே கண்ணா என்று கதறி கொண்டே அவர் வேகமாக கண்ணனின் சன்னிதானத்தை நோக்கி ஓட உயிர் மட்டும் உள்ளே நுழையும் .உடல் கீழே விழும் .இந்த காட்சியை மிகவும் சிறப்பாக படம் ஆக்கி இருப்பார்கள் பக்த மீரா என்பது ஒரு ஜீவாத்மா எல்லா ஜீவாத்மாக்களையும் பரமாத்மா என்ற கண்ணன் கடைசியில் சேர்த்துக் கொள்கிறான். இதுதான் கதையின் தாத்பரியம். ஆனால் இதுக்கு உயிர் கொடுத்தது எம் எஸ் சுப்புலட்சுமி. அவரை தவிர வேற யார் நடித்திருந்தாலும் இந்த படம் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது அவ்வளவு ஒரு அற்புதமான நடிப்பு . அந்த சிரித்த முகம் அவருடைய இனிமையான பாடல்களும் கதையோடு ஒன்றி போய், யாரையும் உலகத்தையே திரும்பி பார்க்காத ஒரு நிலை கண்ணனை மட்டுமே நினைவில் இருந்த நிலை. பாரதபிரதமர் நேரு ரசித்தபடம். கவிக்குயில் கயால் தென்னாட்டின் நைட்டிங்கேலென்று பட்டம் பெற்றார்.கல்கி பாடல்கள் எழுத எல்லீஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தபடம். என்ன ஒரு படம் ஐயா.என் கண்களில் நிற்கிறார் பக்தமீரா.

Comments

  1. மீரா உங்களை கவர்ந்தாளா

    ReplyDelete
  2. உங்கள் எழுத்து கவர்ந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64