வெளிச்சம் பரவட்டும் .36
இதுவரை நான் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் சாரதா. இந்த படம் 1962 வாக்கில் வந்தது. இதில் நடித்தவர்கள் எஸ்எஸ் ராஜேந்திரன் விஜயகுமாரி கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்குனர். படத்தின் கதை சுருக்கமாக காதலித்து மணந்த கணவன் ஒரு விபத்தில் ஆண்மை இழந்து விடுகிறான். இது தெரிந்த கணவன் இனி தான் வாழ லாயக்கில்லை என்று தற்கொலை செய்து கொள்ளப் போகிறான். அப்போது அவனைக் காப்பாற்றிய நண்பன் இதற்காக எதற்கு தற்கொலை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக உன் மனதில் அவள் வாழ வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் அவளுக்கு மறுமணம் செய்து வைத்து விடலாமே என்று சொன்னவுடன் இந்த யோசனை அவனுக்கு மிகவும் பிடித்து விட மனைவியை திரும்பத் திரும்பத் திரும்ப வற்புறுத்தி அவரிடம் சம்மதம் வாங்குகிறான். அப்படி இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி அவளுடைய சம்மதத்தை பெறுகிறான் அதே நேரத்தில் தனது நண்பனிடம் ஒரு உறுதிமொழி வழங்குகிறான் இந்த அருமையான யோசனை சொன்ன நீ தான் எனது மனைவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவள் இதுவரை யாரும் தீண்டாத ஒரு பொற்சிலை. நீதான் அவளை புரிந்தவன். அவளை திருமணம் செய்து கொள்ளுவது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அவனிடமும் சம்மதம் பெறுகிறான். .திருமணம் நடந்ததா .இதில் வரும் சில காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். முதலில் கோடீஸ்வரன் வீட்டு மகளான விஜயகுமாரிதனது அப்பா ரங்காராவை எதிர்த்து பேசும் உணர்ச்சிகரமான உரையாடல்கள்.கடைசியில் உனக்கு என் சொத்தில் ஒருபைசா தரமாட்டேன் என்கிறார். திருமணம் முடிந்து அவரது அம்மா தன்மகளுக்கு சீர்வரிசை அடுக்கி அந்த பெட்டியை கொடுக்க திரும்புவார். அப்போது விஜயகுமாரி தனது நாத்தனாரிடமிருந்து ஒரு பழைய சேலையை உடுத்திக்கொண்டு,அம்மா பார்த்துக்கொள் உன் வீட்டிலிருந்து ஒரு பொருளும் எடுத்துச்செல்லவில்லை என்பார்.தாய் கதறுவார். ஆம் அம்மா, அப்பா சொன்னசொல்லை நான்காப்பற்றவேண்டும்,ஏன்னா நான் அவர் பொண்ணு என்று சொல்லிவிட்டு கணவன் வீட்டாரோடு நடந்து செல்லும்காட்சியை ரங்கராவ் பார்க்கும் காட்சியில் கல்லும் கரையும்.
சீன்2.கதானாயகனுக்கு சாந்திமுகூர்த்த ஏற்பாடு நடக்கும் அன்று கதானாயகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டுஇதயத்தில் பலத்த அடி.இவர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உயிரை இழப்பார் என்ற செய்தி.தாய் ராஜம்மா கருப்பு வளையல்களை வாங்கி விஜயகுமாரிக்குக் போட்டு அவன் உயிரை காப்பாற்றச்சொல்லி கெஞ்சும் காட்சி.இதுபுரியாமல் யாரும் இல்லாத நேரத்தில் எஸ்.எஸ். ஆர்.பூ வாங்கிகொண்டு வீட்டிற்கு செல்ல,விஜகுமாரி செக்ஸை தவிர்க்க போராட்டத்தில் கைவளைகள் நொறுங்க,விஜயகுமாரிகதவை திறந்துகொண்டு ஓடிவர அப்போது ராஜம்மாவும்,மருமகளும் கண்களாலேயே பேசிக்கொள்ள ராஜம்மா தனது மருமகளை கண்ணீரோடு அணத்துகொள்ளும் காட்சி.
சீன்.நம்பர்3.செக்ஸ் உணர்வுகளை அடக்க சிலகடுமையான விரதஙகளை கவனித்த கணவன் உண்மை தெரியவர தான் மணவாழ்க்கைக்கு லாயக்கற்றதால் மனம்புழுங்கி தற்கொலைக்குமுயல காப்பாற்றிய நண்பனிடம் உண்மையை சொல்ல மணைவிக்கு மறுமணம் செய்துவிடுங்கள் என்று சொல்ல நண்பனையே மாப்பிள்ளயாக்கி சம்மதம் பெற்றுவிடுகிறார். வீட்டுக்கு சென்று தனது அம்மாவிடம் இந்த முடிவை சொல்கிறார். அப்போது தாய் ராஜம்மாவின் அருமையான நடிப்பு .அவர் சொல்லுவார் உன்னை இன்று தான்டா பெற்றேன் எனக்கூறும் காட்சி.
காட்சி நம்பர்4.தனது முடிவை விஜயகுமாரியிடம் சொல்ல அவர் துடிதுடிக்கும் காட்சி,போராட்டம் கடைசியில் எப்படியோ சம்மதம் பெற்று திருமணமேடைக்கு வந்தாச்சு.என்மகளுக்கு மறுமணமா ஆவேசத்துடன் ரங்காராவ் கல்யாணத்தை தடுக்க புறப்பட மணமேடையில் உயிர்துறக்கிறார் விஜயகுமாரி.அவரை தன்மடியில் எடுத்துப்போட்டுக்கொண்டு ரங்காராவ் பதறும் காட்சி.
இந்தப்படத்தில் உள்ள கருத்தே முக்கியம்.தான் வாழாவிட்டாலும் தனது மணைவியாவது வாழட்டும் என்ற செயல் மாபெரும் தியாகம் .கூடவே ராஜம்மா,நண்பன்,பாத்திரஙகள் அபாரம்.ரங்காராவ்,விஜயகுமாரியின் பாசத்தின் துடிப்பு. படமும் நன்றாக ஓடியது.
படம் பார்த்த நினைவிருக்கிறது. அது என்னவோ கே எஸ். கே. படம்னாலே கொஞ்சம் பிடிக்காமப் போச்சு ...
ReplyDeleteஇப்போ என் படம்ன்னு நினைச்சி பாருங்க
ReplyDelete