வெளிச்சம் பரவட்டும். கதிர்39.எனது நண்பர்கள்

1975 தொடர்ந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் வக்கீல் தொழில் வந்து வக்கீல் தொழிலில் இன்றும் நீடிக்கிறேன் ஆனால் அந்த தொழிலில் நான் என்ன சாதித்தேன் என்று எனக்கு தெரியவில்லை நான் வக்கீல் தொழிலுக்கு வந்தது முதல் எனக்கு உதவிய என்னோடு இருந்து என இருந்து உதவிய எனக்கு பல நண்பர்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் எனது நண்பர்களில் முக்கியமானவர் pst நாகராஜன் நாங்கள் இருவரும் ஒன்றாகவே படித்தோம் 50 ஆண்டுகால பிராக்டீஸ் வேறு ஜாயின் பிராக்டிஸ் தான் இதை தவிர எனது வக்கீல் தொழிலுக்கு உதவியவர்கள் எனது குரு வக்கீல் திரு டி எஸ் பார்த்தசாரதி ஐயங்கார், அவர் தான் அவரிடம் தான் நான் தொழில் கற்றேன். நண்பர்களில் முக்கியமானவர் திரு எஸ் கே மணி நாங்கள் எல்லாம் ஜூனியர் ஆக இருக்கும் காலத்திலேயே தனது திறமையால் தன்னை உயர்த்திக் கொண்டவர். தீவிர கம்யூனிஸ்ட் பாரில எங்களை எல்லாம் சும்மா அரட்டை அடிக்காம படிங்க ஐயா ஏதாச்சும் அப்படி என்று சொல்லி உற்சாகமூட்டி கொண்டே இருப்பார் சக நண்பர்.அடுத்து வக்கீல் திரு கே சந்திரமோகன் எனது எனது இளமையான பிராக்டிஸ் காலத்திலேயே எனக்கு சில பேங்க்களை அறிமுகப்படுத்தி எனக்கு வழக்குகளைரிவாங்கி கொடுத்தவர அதற்காக அவருக்கு நான் நன்றி பாராட்ட வேண்டும் இதைத்தவிர அவர் தம்பி பிரபாகரன் எஸ் பசுபதி துரையரசன் கஜேந்திரன் சாமிநாதன் போன்ற நண்பர்கள் பிஆர் ராஜேந்திரன் கே ராஜேந்திரன் எனது ஜூனியராக இருந்த கே பிரசாத் போன்றவர்கள் எனது வக்கீல் தொழிலுக்கு உதவியாய் நின்றவர்கள். இதில் பல பேர் எனது குடும்ப நண்பர்கள் கூட வக்கீல் திரு பஷீர் அகமது அப்துல் கய்யூம் ஆகியோரும் என்னுடன் துணை நின்றவர்கள் இவர்களுக்கெல்லாம் நான் நன்றி பாராட்டுகிறேன் இந்த நண்பர் இல்லாமல் பல விட்டு போன நண்பர்கள் உண்டு எனது குடும்பத்தின் சுகத்துக்கங்களில் இவர்கள் பங்கேற்பவர்கள் இதில் முக்கியமாக கரந்தையைச் சேர்ந்த வி சந்திரசேகரன் அட்வகேட் எனக்கு மிகவும் ஜூனியர் ஆக இருந்த போதிலும் தனது தனித்திறமையால் தன்னை வளர்த்துக் கொண்டவர் தற்போது மதுரை சென்னை உயர் நீதிமன்றங்களில் ஆஜராகிறார் சட்டத்தில் உள்ள பல நுணுக்கங்களை உயர் நீதிமன்றங்களில் நடக்கும் விவாதங்களை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் வந்து இதெல்லாம் சொல்லி மகிழ்வார் எனக்கும் சட்டத்தில் சில சந்தேகங்கள் ஏற்படும் போது நான் அவரை கூப்பிட்டு கன்சல் செய்வேன் தெளிவாகச் சொல்வார் தன்னைத் தானே அவை உயர்த்திக் கொண்ட மனிதர் அவருக்கு ஒரு பாராட்டுகள் இதைத் தவிர எனது ஆரம்பகாலத்தில் இருந்து என்னோடு படித்து பிரக்டி செய்து நல்ல ஒரு அட்வகேட் ஜெனரல் வரையை வரைக்கும் சென்றவர் நண்பர் திரு கே வெங்கட்ரமணி தன்னை பாலிஷ் போட்டுக் கொண்டே இருப்பார் அடுத்தடுத்த பதிவுகளை பெற்று உச்சத்துக்கு சென்றார் நல்ல மனிதர் இது போன்ற நல்ல நண்பர்களோடு எனது 50 ஆண்டு கால பிராக்டிஸும் நடந்தது இனி வருவது எனது முதுமை பருவம்

Comments

Popular posts from this blog

தேர்தல் 2026 பகுதி 67

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64